கேளடி கண்ணம்மா-என்சேதி


கேளடி கண்ணம்மா-என்சேதி கேளடி கண்ணம்மா
கேளடி கண்ணம்மா-என்சேதி கேளடி கண்ணம்மா

போலிவேடம் போடும்மாமா சொந்தஊரு போனார் 
வேலிவெட்டி மதில்போட்டு எல்லைகளைக் காத்தார் 
கொடியவெயில் இங்குபாரு  கொடுமையென்றே சினந்தார் 
கோடி கொட்டி வீடு கட்டி ப்பூட்டி வைத்து வந்தார்.
                                       -(கேளடி கண்ணம்மா-என்....)

கோடிச்சேலை மறந்த மாமி ஊரு காணப் போனா
கூடி வாழ்ந்த குலத்தினோடு பேசக் கூசி நின்றா  
டாடி மம்மி என்றே அவ பெற்றவரை அழைச்சா 
ஆடி அதிர்ந்த அவங்களையோ யமதேவன் அழைச்சான்.
                                         -(கேளடி கண்ணம்மா-என்....)

பிறந்த ஊரை பார்க்க வென்று பொடிச்சி இவ போனா 
இறங்கியதும் இந்த ஊரு பிடிச்சு இல்லை என்றா!
கொண்டுவந்த தமிழும் இவ வாயில் இல்லைப் போச்சு 
கண்டுகொண்ட ஆங்கிலமும் தமிங்கிலமாய் ஆச்சு.
                                          -(கேளடி கண்ணம்மா-என்....)

தாய் நாடு சுற்றிவர தம்பியிவன் சென்றான் 
தாய்மாமன் மகளையே தாரமாகக்  கொண்டான் 
காதலித்த கன்னி கதையிங்கு கண்ணீராயாச்சு 
சீதனத்தின்முன் காதல்  செல்லாமப் போச்சு
                                         -(கேளடி கண்ணம்மா-என்....)
                                                                            
     -[ஆக்கம்:செல்லத்துரை,மனுவேந்தன்].                       


0 comments:

Post a Comment