"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18

இந்தியாவின் பெரும்பான்மையான பழங்குடி மக்கள் தமிழர்கள் உள்ளடங்கிய திராவிட  மொழி பேசுபவர்கள் ஆகும்.இவர்கள் மிக பழைய காலத்தில், ஆப்ரிகாவில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.ஆகவேஆப்ரிகாவில் நிலவிய பண்பாடுபோலபண்டைய இந்தியாவும் பெரும்பாலும் தாய்வழி சமூகமாகவே இருந்ததுஎனவேஅப்போதைய இந்த மக்கள் பெண்ணை மையப்படுத்தி வாழ்ந்தார்கள். அதாவது குழுக்குழுவாய் வாழ்ந்த மனித சமூகத்தில் பெண்ணே குழுவின் தலைவியாக இருந்தாள்.இவர்கள் பிறப்பின் அதிசயத்தை,கால மாற்றத்தை,நிலவின் தேய்தல் வளர்தலை, மறுபிறப்பை,தெய்விகத்தை அல்லது ஈடற்ற நிலையை[mysteries of birth,the seasons and lunar cycles,rebirth and transcendence.]  கொண்டாடினார்கள். கருவளம்,ஆண்மை மற்றும்  மறுமை[ fertility,virility and the after-life] போன்றவற்றுடன் தொடர்புடைய ஆன்மீக
dancing girl
சக்திகளை,வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே வழிபட்டார்கள். அவர்கள் தமது சடங்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகைகள், மலர்கள், செடிகள் மற்றும் மரங்கள் பாவித்தார்கள்.அது மட்டும் அல்ல,மெய்மறந்த இன்ப நிலையை அல்லது பரவச நிலையை[trance states] தூண்ட  தாவர மருந்துகள் அவர்களுக்கு உதவியது. ஆழ்ந்த உட்பொருளுடைய,மறை ஆற்றலுடைய சொற்றொடர்கள்,சித்திரங்கள்,அபிநயங்கள் [முத்திரைகள்] மற்றும் பாலியல் செயல் முறைகள்[mystic phrases,diagrams and gestures,and by sexual acts.] சேர்ந்த ஒன்றாக அவர்களின் வழிபாடு இருந்தது.மேலும் பெரும்பாலான பழங்குடி மக்கள் போன்று இவர்களுக்கும் விரும்பிய பலாபலன் கொடுக்கும்  மந்திரச் சொற்களில்,வசீகரத்தில் மற்றும் தாயத்துக்களில்[efficacy of spells,charms and amulets] நம்பிக்கை இருந்தது.

a squatting female
இந்தியாவில்,இந்த மக்களின் நாகரிகம் முதலாவதாக,சிந்து சம வெளியில் கி மு  3300 க்கும்-கி மு 2600 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித்  தழைத்தோங்கி, கி மு  2600-1900 ஆண்டுகளில்  ஹரப்பாவில்  உச்ச நிலையில் இருந்து,பின் சடுதியாக அழிந்து போய்விட்டது.புறநானுறு 202 இல்,"கோடிபல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி" என்ற வரியில் கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன் முன்னோர்களுக்கு உதவி,உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன் என்கிறார்அரையம் என்றால்,பெரும் நகரம் என்று பொருள்அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார் அது மட்டும் அல்ல,சிந்துவெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும்,சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படு கின்றது.பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி,ஹரப்பாவின் அடியிலுள்ள படைகள் என்பன இக்கூற்றுக்கான சான்றுகளாகும்.இங்கே சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ஊர்களும்,6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன.இவைகளில் குறிப்பிடத்தக்கவை; ஹரப்பா,மொஹெஞ்ச தாரோ,லோத்தல்,தோலாவிரா,கலிபங்கன்,ராக்கிகார்கி,ரூப்பார்

Mohenjodaro seal of grappling rampant tigers and Gilgamesh with lions and Linga worship
[Harappa,Mohenjo-daro, Lothal, Dholavira, Kalibangan, Rakhigarhi, Rupar] போன்றவை ஆகும். எனினும் பொதுவாக சிந்து வெளி நாகரிகம்,ஹரப்பா நாகரிகம் என்றே கூறுவது வழக்கம்.இங்கே,"ஹரப்பா" என்ற சொல்லை ஹர+அப்பா என பிரிக்கலாம்.இங்கு ஹர என்பது சிவா என்பதையும் அப்பா என்பது தந்தையையும் குறிக்கிறது.எனவே,ஹரப்பா நகரம் சிவாவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட  ஒரு இடமாக நாம் கருதலாம்.இந்த சிவாவை நாம் மேலும் இந்திய பண்பாட்டின் தந்தை என குறிப்பிடலாம்.இப்படி புகழ் வாய்ந்த இந்த நாகரிகம் இந்தியாவிற்குள் புகுந்த ஆரியரின் தாக்குதலாலும் மேலும் வறட்சியாலும் கி மு 1700 ஆண்டு அளவில் முற்றாக அழிவுற்றது.எப்படியாயினும்,சிவாவை மையப்படுத்திய சிந்து வெளி வழிபாடு,திராவிட இந்தியாவில்,குறிப்பாக தமிழர் மத்தியில் இன்றும், இன்னும் போற்றிப் பேணப்படுகிறது.சிவ வழிபாடு திராவிட மக்களுடையது என்பதை ஆரியர்களின் மனப் போக்கில் இருந்து நாம் தெளிவாக அறியலாம்.வடவேதங்களில் லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான்
குறிப்பிடப்படுகிறது.இந்த அடிப்படையில் சிவ லிங்கத்தை  “சிசின தேவன்என்று மிக இழிவாக வட மொழியான கி மு 1500-1100 ஆண்டு அளவில் தொகுக்கப்பட்ட ரிக் வேதம்[இருக்கு வேதம்] கூறுகிறது.இதில்,7.21.5 பாடலில் "Let our true God subdue the hostile rabble:let not the lewd [Shishan Deva] approach our holy worship." என்று கூறுகிறது. அதாவது "எங்கள் உண்மையான கடவுள்,இந்திரன்,எமது எதிரியான ஒழுங்கீனமான கும்பலை அடக்கட்டும்:ஓழுக்கங்கெட்ட  ஆண் குறியை வணங்கும் கும்பல்,எமது புனித இடத்தை ஊடுருவதை தடுக்கட்டும்" என்கிறது.எது எப்படியாயினும் பிந்திய வடவேதங்களில் சிவா அதிகரித்த முக்கியத்துவம் பெறுகிறார்.இது அவர்கள் காலப்போக்கில் சைவத்தையும் உள்வாங்கியதை எடுத்துக் காட்டுகிறது.

சிந்து வெளியில் எந்த ஒரு கோயிலின் இடிபாடுகளோ,வழிபாட்டு
படையல் மேடைகளோ,கடவுளின் பெரிய உருவச் சிலைகளோ அல்லது நீண்ட ஆவணங்களோ இன்னும் கண்டுபிடிக்கவில்லைஎனவே அங்கு கண்டு எடுக்கப்படட,மத முக்கியத்துவம் வாய்ந்த  சிறு உருவச்சிலைகள் மற்றும் முத்திரைகளில் [figurines and seals] மட்டுமே,அவர்களின் மத நடை முறைகளை அல்லது மத சடங்கு முறைகளை அறிய நாம் தங்கி இருக்க வேண்டியுள்ளது.எனினும் அங்கு ஒரு இலக்கியமும் இது வரை தோண்டி எடுக்கப்படாத நிலையிலும்,மேலும் முத்திரைகளில் காணப்பட்ட சிறிய குறியீடுகளும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக பொருள் விளக்கம் செய்யப்படாத நிலையிலும்,அவர்களின் மதத்தின் பொது கருத்துக் களின் தன்மைகளையோ அல்லது தத்துவத்தின் தன்மைகளையோ சரியாக புரிந்து கொள்வது கடினமாக உள்ளது.அவர்கள் அதிகமாக,அழுக்கிச் சிதைந்து போக்க கூடிய அல்லது உக்கிப் போக்க கூடிய மரப்பட்டை,தென்னை-பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை ஒன்றின் ஓலைகள் , போன்றவற்றில் ஒருவேளை அவர்கள் எழுதி இருக்கலாம்? ஆகவே அங்கு இது வரை தோண்டி எடுக்கப் பட்ட
1] பசுபதி முத்திரை,
2] நான்கு அங்குல உயரம் உள்ள வெண்கல நர்த்தகி,
3]குந்தி இருக்கும் பெண் மரச் சிற்பம்,
4] பெருவாரியான அரை நிர்வாண பெண் சிறு உருவச் சிலைகள்,
5] தலையில் கொம்புடனும் இரு கையில் வளையளுடனும் ஒரு அரச மரத்தின் கீழ் நின்று,முழங்க காலில் நின்று வழிபடுபவரை உற்றுப் பார்க்கும் தெய்வம் சித்தரிக்கப்பட்ட  முத்திரை,
6]மனிதவுரு கொடுக்கப்பட்ட ,தலையில் மூன்று புடைப்பு அல்லது கொம்பு போன்ற ஒன்றை கொண்ட  நீண்ட உருவம் உள்ள,சிந்து வெளி முத்திரையில் வடிக்கப்படட ஒரு தெய்வம்,
 7] ஒரு வகைச் சுண்ணாம்புக்கல்லால் செய்யப்படட, ஒரு மதக் குருவாக கருதப்படும்,மார்பளவு சிறு மனிதச்சிலை,
8]முத்திரையிலும் மற்றும் மட் கலத்திலும் பொறிக்கப்பட்ட  பெருவாரியான மிருக உருவங்கள் போன்றவை அவர்களின் மத சடங்கு மற்றும் மத கொண்டாட்டங்கள் பற்றிய தெளிவான உள் பார்வையை எமக்கு  தரலாம். பெண்களின் குழந்தை பிறத்தல் மற்றும்  கருவளத்தை கொண்டாடவும் அதே போல ஆண்களின் ஆண்மையை கொண்டாடவும் இப்படியான சிறு உருவச்சிலைகள் அதிகமாக பாவித்து இருக்கலாம்.அத்துடன் அவை  கலாசார நிகழ்வுகளிலும் சடங்குகளிலும் கூட பாவிக்கப் பட்டு இருக்கலாம்.எது எப்படியாயினும்,இந்த சிறு உருவச்சிலைகள் முழுமையாக நல்ல நிலையில் சிந்து வெளியில் கண்டு பிடிப்பது மிகவும் அரிதாக உள்ளது.கொண்டாட்டங்களில் அல்லது சடங்குகளில் இவை பாவிக்கப்பட்டதும் சிறுவர்களுக்கு விளையாட  அதிகமாக கொடுக்கப்பட்டு இருக்கலாம்.அதன் பின் அவை கைவிடப்பட்டு இருக்கலாம் என நாம் ஊகிக்கக்கூடியதா உள்ளதுஆனால்,மெசொப்பொதாமியாவில் அப்படி அல்ல.அவை இறந்தவர்களை அடக்கம் செய்யும் பொழுது பாவிக்கப்பட்டதால்,அங்கு நல்ல நிலையில் சிறு உருவச்சிலைகள் கிடைக்கக் கூடியதாக இருந்தன.

Pashupati
பொதுவாக,இப்படியான சிறு உருவச்சிலைகள்,ஏதாவது ஒன்றின் அடையாளமாக அல்லது பிரதிபலிப்பாக ஏதாவது ஒரு நிகழ்வில் அதிகமாக பாவிக்கப்பட்டு இருப்பதுடன் அவைகள் ஏதாவது ஒரு முக்கிய குறிப்பிட்ட  கருத்துக்களையும் எமக்கு தருகின்றன.
என்றாலும் சிந்து வெளி சிறு உருவச்சிலைகள் பற்றி அறிவது அவ்வளவு சுலபம் அல்ல,ஏனென்றால் அவை பற்றிய சூழ்நிலைகளோ அல்லது இலக்கிய தரவுகளோ அங்கு இதுவரை கண்டு எடுக்கப்பட வில்லை.எனவே அந்த சிறு உருவச்சிலைகளில் இருந்து நாம் பெரும் தகவல்களே,அவை பற்றிய,அல்லது அவை எமக்கு தரக் கூடிய செய்திகளாக இருக்கும்.எனவே அந்த தொல் கைவினைப் பொருட்கள் செய்ய பாவிக்கப்பட்ட  பொருட்களின் சேர்க்கை, உற்பத்தி நுட்பங்கள்,அலங்காரங்கள்,உரு அமைப்பு,அது கண்டு பிடிக்கப்பட்ட இடம்,மற்றும் பின்னர் வந்த புராணங்கள் அல்லது இலக்கியங்கள் போன்றவைகளே,எமக்கு அவை பற்றி ஆய்வு செய்ய
உதவும்.அந்த சிறு உருவச்சிலைகள் பாவிக்கப்படட இடம் அல்லது கட்டிடம் பொறுத்து, அவை,அரசியல் தொடர்பானவையாக,மதம் தொடர்பானவையாக அல்லது அலங்காரம் தொடர்பானவையாக  இருக்கலாம்.சிலவேளை அவை எல்லாவித அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.பின்னர் வந்த புராணங்கள் அல்லது இலக்கியத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டதற்கு,   பிரபலமான உதாரணம் சர் ஜான் மார்ஷல் அடையாள படுத்திய பசுபதி முத்திரையாகும்.இவர் இந்த முத்திரையை,பண்டைய வரலாற்றை உடைய,பின்னர் வந்த புராணங்களில் பிரபலமாக கூறப்பட்ட,பல்லாயிரம் பக்தர்களை உடைய,சிவனின் முன்னைய வடிவமாக அல்லது சிவனின் தொடக்கக் கருத்துருவாக [முற்காலத்திய சிவனாக] எடுத்துக் காட்டுகிறார்.மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற அந்த குறிப்பிட்ட முத்திரையில்,மூன்று தலையினையுடைய தாமரை மலரின் நிலையில் அல்லது பத்மாசன யோகாசனத்தில்[தியானத்தில்] உள்ள ஒரு வரைச் சுற்றி  சில மிருகங்கள் காணப்படுவதால் மிருகங்களின் தலைவர் எனவும் யோகாசனம் சிவனுடன் மிகப்பழைய காலத்திலிருந்தே தொடர்பு படுத்தப்பட்டு வருவதால் பசுபதி என்ற சிவனுடைய பெயருக்கு இம்முத்திரை பொருத்தமான சித்திரம் எனவும் கருதுகோள் முன்வைக்கப்பட்டு, இது பசு என்பதன் முதலாவது பொருளிலே சிவபெருமானுடைய தோற்றுவாயை உணர்த்துவதாகலாம் என்ற விளக்கம் அவரால் முன்வைக்கப்பட்டது.மேலும் அத் தெய்வத்திற்கு திரிசூலம் போல கொம்புகள் இருப்பதும் அதை மேலும்  உறுதிப் படுத்து கிறது. அத்துடன் இவர் தன் ஆண் குறி தெரியுமாறும் அமர்ந்திருக்கிறார்.மேலும் இந்த யோகியின் உடலில்,ஒவ்வொரு கையிலும் பத்தும் மார்பில் பத்தும் ஆக,மொத்தம் முப்பது தனித்துவமான கோடுகள் வரையப்பட்டுள்ளன.இது ஒரு வகை சந்திர நாட்காட்டியாக ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் என்பதை எடுத்து காட்டி இருக்கலாம்.ஒரு சித்திரம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது,சிக்கலான மற்றும் கவனமாக வடிவமைக்கப்பட்ட, ஹரப்பா முத்திரைகளுக்கு முற்றிலும் சரியே.ஏனென்றால், சிந்து வெளி கைவினைப் பொருட்களுக்குள் புதைந்து இருக்கும் எல்லா செய்திகளையும்,அங்கு பதியப்பட்ட எந்த ஒரு சுருக்கமான கல்வெட்டுகளையும் நாம் வாசிக்காமலே அறியக் கூடியதாக உள்ளது.அது மட்டும் அல்ல,சிந்து வெளி இடிபாடுகளுக் கிடையில்,படைப்பாற்றல் சின்னங்களான,சிவ பக்தர்களால் இன்றும் பாவிக்கப்படும் வடிவம் ஒத்த , லிங்கம் மற்றும் யோனி வடிவ பெருங்கல்கள் கிட்டித்துள்ளன.விவசாய மற்றும் பழங்குடி மக்களுக்கிடையில் காணப்பட்ட,படைப்பாற்றல் சின்னங்களின் வழிபாடை ஒத்த வழிபாடு இங்கும் தொடர்வதை இது எமக்கு எடுத்துரைக்கிறது.இந்த தொடக்கநிலை சைவ சமயத்தின் அத்திவாரத்தில் இருந்தே இன்றைய சைவ சமயம் வளர்ந்தது எனலாம்.இது மேலும் ஆரியர்களின் வருகைக்கு முன்பே,சிவனை வழிபடும் வழக்கம் இந்தியாவில்  இருந்துள்ளது என்பது இதனால் அறியப்படுகிறது.சிவா என்பது ஒரு திராவிட சொல்.அது சிவந்த அல்லது கோபத்தை குறிக்கும்.சிந்து வெளியில் கண்டு எடுக்கப்பட்ட சிவலிங்கங்கள்,பின் வட வேதத்தில் தரங்குறைவாக சொல்லப்பட்டுள்ளன.சிந்து வெளி மக்கள் யோகாவை அறிந்திருந்தார்கள் என்பதையும் தாந்த்ரீக வழி பாட்டை கடைப்பிடித்தார்கள் என்பதற்கும் இந்த பசுபதி முத்திரையும் ஒரு முக்கிய சான்றாக,மற்றும் வேறு பல சான்றுகளுடன் சேர்த்து சுடிக்காட்டப்படுகிறது

சிந்து வெளியின் இரண்டாவது முக்கிய கைவினை பொருள்,மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற நிர்வாணமான ஒரு  நர்த்தகி ஆகும்.இந்த ஒய்யார வார்ப்பு ஒரு கருத்த பழங்குடி பெண் ஒன்றை சித்தரிக்கிறது,அவள் உடையில்லாது தனது நீண்ட  தலை முடியை கொண்டை போட்டு உள்ளாள்.இடது கையை வளையல்கள் முற்றாக அலங்கரிக்க,வலது கையின் மேற் பகுதியை ஒரு காப்பும் ஒரு தாயத்தும் அலங்கரிக்கிறது.அவளது கழுத்தை சுற்றி ஒரு வகை சிப்பி அட்டிகை இருக்கிறது.எம் நாட்டில் இன்று உள்ள பல நாட்டிய கலைகளில் இந்த சிலையின் கம்பீரமான நிலையை காணலாம்.வலது கையை இடுப்பிலும் இடது கையை இறுக்கமாக பிடித்திருப்பதும் இந்தியாவின் சம்பிரதாயமான நாட்டிய அபிநயத்தில் ஒன்றாகும்.இந்த பண்டைய உலோக சிற்பம் சிறிதாக இருந்தாலும் பல தகவல்களை எமக்கு தெரிவிக்கிறது.பல சிறந்த கற்றறி வாளர்கள் இந்த உலோக வார்ப்பு ஒரு தேவதாசியை அல்லது ஒரு புனித பரத்தையை பிரதிநிதி படுத்துவதாக கருது கிறார்கள்.அந்த பெண் சிலை அம்மணமாக இருப்பதாலும் மருட்டுகின்ற ஒரு நாட்டிய தோரணையில் இடுப்பில் கையையும்  தளராத் தன்னம்பிக்கையை முகபாவத்தில் காட்டுவதாலும் ஒருவேளை அவர்கள் அப்படி கருதியிருக் கலாம் என கருதுகிறேன்.ஆனால்,இது மேலும் ஹரப்பா சமூகத்தின் மரியாதைக்குரிய மற்றும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை காட்டுகிறது எனலாம்.அங்கு இரண்டாவது நடன மாதுவும் கண்டு பிடிக்கப்பட்டது.தாந்த்ரீக வழி பாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த,பெண் சக்தியின் வடிவமான,பெண் தேவதாமூர்த்திகளான, இளமையான ஆடையற்ற பென் நடன கோலத்தில் உள்ள,ஆரம்ப கால டாகினிகளை [Dakinis] பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.மூன்றாவது யோனி தெரியுமாறு குந்தி இருக்கும் பெண் ஆகும்.மேலும் இந்த சிற்பம்,காணிக்கை, படையல் மூலம் புகை படிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.அதிகமாக இது அவளுக்கு முன்னாள் தூபங்காட்டி யோனி வழிபாடு நடை பெற்றதை குறிக்கலாம்.பொதுவாக, யோனி இயற்கையின் படைப்பையும்  தாய் தெய்வத்தையும் அல்லது சக்தியையும் பிரதிநிதிப்படுத்துகிறது.அவளின் இடது தோளை ஒரு சால்வை மறைக்கிறது.எனினும் வலது மார்பு உடையற்று இருக்கிறது.தலைமுடி பின்னுக்கு இழுத்து கட்டப் பட் டுள்ளது.இது தாய்வழிமுறை சமுதாயத்தின் பிரதி பலிப்பாக இருக்கலாம்.இவை எல்லாம் எமக்கு எடுத்துக் காட்டுவது ஆரியருக்கு முன்னைய இந்தியா தாந்த்ரீக வழி பாட்டினை கொண்டிருந்தனர் என்பதாகும்.மேலும்,சிந்து வெளி முத்திரைகள் இந்தியாவிற்கு வெளியே,உம்மா மற்றும் ஊர் [Umma and Ur] போன்ற மெசொப்பொதாமியா நகரங்களிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அது மட்டும் அல்ல,சில இரண்டு நாகரிக முத்திரைகளிளும் நெருங்கிய ஒற்றுமையையும் காண முடிகிறது.இவை,இரு நாகரிக மதங்களுக்கும் பண்பாட்டிற்கும் இடையில் ஒரு தொடர்பை காட்டுகிறது.உதாரணமாக இரு பக்கமும் சீறி எழுகிற,மூர்க்கமான புலிகளை கெட்டியாகப் பிடித்து நிற்கும் வீரனை காட்டும் மொகஞ்சதாரோ முத்திரையும் கில்கமெஷ் தனது இருகைகளாலும் இரு சிங்கங்களை பிடித்து நிற்கும் முத்திரையும் ஒரே மையக்  கருத்தாக உள்ளது குறிப்பிடத் தக்கது.   


[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 19தொடரும்............

,

0 comments:

Post a Comment