சிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:


தற்போதுத்ரிஷா இல்லனா நயன்தாராபுகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்அன்பானவன் அடங்காதவன் அசராதவன்படத்தில் நடித்து வருகிறார். மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரேயா, தமன்னா இருவரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் சிம்புவின் முதல் கெட்டப்பானமதுர மைக்கேல்சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சிம்புவின் இரண்டாவது கதாபாத்திரத்தின் பெயரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர்.

அதன்படி, அஸ்வின் தாத்தா என்ற 60 வயது முதியவராக இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுவரை சிம்பு முதியவராக நடித்ததில்லை என்பதால் இந்த கதாபாத்திரம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment