தனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்


தீபாவளிக்கு தனுஷ், விஷால், கார்த்தி, ஜி.வி.பிரகாஷ் நடித்த 4 படங்கள் வெளியாகின்றன.
4 படங்கள்
தீபாவளிக்கு பெரிய நடிகர்கள் நடித்த படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை தீபாவளிக்கு கொண்டு வருவதற்காக படப்பிடிப்புகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். தற்போது கொடி, காஷ்மோரா, கத்திச்சண்டை, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய 4 படங்கள் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொடிபடத்தில் தனுஷ், திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். ஷாம்லியும் இன்னொரு நாயகியாக வருகிறார். அரசியல் பின்னணி கலந்த திகில் படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தை துரை செந்தில் குமார் டைரக்டு செய்துள்ளார். இவர் காக்கி சட்டை, எதிர்நீச்சல் படங்களை இயக்கியவர். கொடி படத்தில் தனுஷ் முதல் தடவையாக இரு வேடங்களில் நடித்துள்ளார்.

காஷ்மோரா
காஷ்மோராபடத்தில் கார்த்தி, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர். ஸ்ரீதிவ்யாவும் இன்னொரு நாயகியாக வருகிறார். விவேக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோகுல் டைரக்டு செய்துள்ளார். இதில் கார்த்தி கதாநாயகன், வில்லன் ஆகிய இரண்டு தோற்றங்களில் வருகிறார். மொட்டைத்தலையுடன் அவர் ஆக்ரோஷமாக தோன்றும் வில்லன் வேட புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சரித்திர காலத்திலும் இன்றைய காலகட்டத்திலும் நடப்பது போன்று திரைக்கதை அமைத்துள்ளனர்.

கத்திச் சண்டைபடத்தில் விஷால், தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். சுராஜ் டைரக்டு செய்துள்ளார். கதாநாயகனான பிறகு மற்ற நடிகர்கள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த வடிவேல் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி, சம்பத்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். கிராமம், நகரம் சார்ந்த கதையம்சத்தில் அதிரடி மற்றும் நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது.

2 கதாநாயகிகள்
கடவுள் இருக்கான் குமாருபடத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும் ஆனந்தி, நிக்கி கல்ராணி ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். ராஜேஷ் இயக்கி உள்ளார். டி.சிவா தயாரித்துள்ளார். காதல், நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது.

0 comments:

Post a Comment