கனடாவில்........போவோமா! ஊர் கோலம்..  
கனடாவில் நயாகரா நீர்விழ்ச்சி,CN கோபுரம் என இதுவரை கண்டுகளித்த கண்களுக்கு பெருவிருந்தாக அமையப்போகிறது டொராண்டோவில் அமைக்கப்பட்டு வரும்  Ripley's Aquarium of Canada எனப்படும் மாபெரும் நீர்த் தடாகம்.$130மில்லியன் செலவில் CN கோபுரத்துக்கு அருகில் அமைவதுடன் 2013 கோடையில் திறந்து வைக்கவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
12,500 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட கொண்ட இத்தடாகத்திற்கு வருவோர் ஏறத்தாழ ஆறு மில்லியன் லீற்றர் நீரில் 450  இற்கு மேற்பட்ட உயிர் இனங்களையும்,3,500  கடல்வாழ் மற்றும் நன்னீர்வாழ் உயிர் இனங்களையும்  கண்டு களிக்கலாம். தடாகத்தின் கீழாகச் செல்லும் சுரங்கவழியே பெரும் சுறா மீன்களுக்குக்  கீழே அமைந்துள்ள 96 மீட்டர் நீளமான நகரும் நடைபாதை இதன் சிறப்புகளில் ஒன்றாகும்.
மணற்புலிச்சுறா வகைகள்,பெரிய வேளாமீன் வகைகள் மற்றும் பல கடல் வாழ் உயிர் இனங்களையும் இத் தடாகத்தில் கண்டு களிக்கலாம்.வெப்பவலைய கடற்புறப்பாறை,ஐம்பெரும் ஏரிகள் சார்ந்தகாட்சிப்பொருட்கள்,அத்திலாந்திமற்றும்பசுபிக்சமுத்திரஉயிரினஇயற்கைச்சுழல்,கடல்முட்டை,கடற்குதிரை,திருக்கை வகைகள் மற்றும்,பலவகைகளையும் இத் தடாகத்தில் பார்க்கலாம்.
Photos of Ripley's Aquarium of the Smokies, Gatlinburg
           சுற்றுலாக்காரர்களை பெரிதும் ஈர்க்கும் மையமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படும் இத் தடாகம் திறக்கப்பட்ட பின்னர் 350 வேலை வாய்ப்புக்களை தோற்றுவிக்கும் எனவும்,ஆண்டுதோறும் சராசரி $35 மில்லியன் பொருளாதார நன்மை கிடைக்கும் எனவும் எதிர் பார்க்கப் படுகிறது.
கடலுக்கு(மேலாகஅல்ல)ஊடாக பயணம் செய்து  அனைத்து கடல் உயிர் இனங்களையும் நேரில் கண்டுகளிக்க  நாங்க ரெடி!
நீங்க ரெடியா??(14.03.2012 இடுகையிடப்பட்டது.)

0 comments:

Post a Comment