கடந்த வாரம் வந்த படங்கள் எப்படி?


'வலிமை' விமர்சனம் ('Valimai' movie review)

  ஹச். வினோத் இயக்கத்தில், அஜித்குமார், ஹுமா குரேஷி   முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம்.  போனி கபூர் தனது 'பே வியூ ப்ரொஜெக்ட்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க,  யுவன் ஷங்கர் ராஜா பாடல்களுக்கு இசையமைக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

 

போதைப்பொருள், தவறான இளைஞர்கள். அவர்களுக்கு ஒரு தலைவன். அதை கண்டுபிடிக்க முயலும் ஒரு அதிகாரியாக அஜித். இதுதான் கதை.

 

பலமுறை திரையில் பார்த்துப் புளித்துப் போன கதை என்பதால்  வலிமையை இழந்த  'வலிமை'


'வீரபாண்டியபுரம்' விமர்சனம் (Veerapandiyapuram Movie Review)

 சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்.  நடிகர் ஜெய் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜெய்யுடன் மீனாட்சி கோவிந்தராஜன், பாலசரவணன், காளி வெங்கட், ஹரிஷ் உத்தமன், ஜெயப்ரகாஷ், சத்ரு, அருள்தாஸ், முத்துக்குமார் எனப்பலர் நடிக்கின்றனர்.

தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் குடும்பத்திற்கும் தீராத பகை இருந்து வருகிறது. இரண்டு குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன? இதற்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம்? காதலின் பின்  நின்று போன திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

மொத்தத்தில் ‘வீரபாண்டியபுரம்’ வீரம் குறைவு.

 

எப்.ஐ.ஆர்'  விமர்சனம் (FIR Movie Review)

மனு ஆனந்ததின் இயக்கத்திலும்,  அஸ்வத்  இசையமைப்பிலும் , விஷ்ணு விஷால் ,மஞ்சிமா மோகன் முக்கியபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம்.

மத பயங்கர வாத முத்திரை குத்தப்படும் ஒரு அப்பாவி இளைஞன் சித்திரைவதை தாங்கமுடியாமல் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டதனால்,  அப்பழிகள் அவரை பாதித்தனவா? இல்லையா? எப்படி அவற்றிலிருந்து மீள்கிறார்  என்பதே கதை

சித்திரவதைகளை தவிர்த்தால் விறுவிறுப்பான படம்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment