சிரிக்க சில நிமிடம்

 01.

ரமணன் : எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு . . . என்னால ஜீரணிக்கவே முடியல்ல.

முராரி : அய்யய்ய நீங்க நாயெல்லாம் சாப்பிடுவீங்களா?

02.

ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?

திருடன் : ஆமா ஐயா, சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.

03.

ஒருவர் : என்னய்யா இது, பனம்பழம் வேணும்னா பனை மரத்துல ஏறிப் பறிக்கணும்... எதுக்கு பனைமரத்துக்குக் கீழேயே நிற்கறே..?

மற்றவர் : ஏதாவது காகம்  உக்கார்ந்து பனம்பழம் விழாதான்னுதான்...

04.

நிருபர் : தீபாவளிக்கு ரிலீசாகுற உங்க படம் பிச்சுக்கிட்டுபோகும்ன்னு சொல்றீங்களே,,,,, படத்துக்கு என்ன பெயர்

தயாரிப்பாளர் : "ராக்கெட்டு"

05.

ஒருவர் : உங்களுக்குத் தேவை இல்லாதது ஏதாவது இருந்தால் போடுங்கள். காசு கொடுக்கிறேன்.

மற்றொருவர் : ஒரு நிமிஷம் இரு. என் மனைவியைக் கூப்பிடுகிறேன்.

06.

ஜோன்ஸ் : ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?

பீன்ஸ் : அது வாயில்லா ஜீவன்.

07.

தோழி 1 : உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.

தோழி 2 : ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.

08.

வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?

ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

09.

அனல் சகோ : டாக்டர் , நாலம் நம்பர் பேஷண்டுக்கு முன்னாடி ஆப்ரேஷன் பண்ணிட்டிங்க

டாக்டர் வாத்தி : இதுக்கு போய் ஏன் இவ்ளோ பதற்றப்படறே ?

அனல் சகோ : இல்ல டாக்டர் முதுகுல ஆப்ரேசன் பண்ணுறதுக்கு பதிலா முன்னாடி வயித்துல பண்ணிட்டிங்க !

10.

இமா : எங்க தலைவர் பாதுக்காக்க பட வேண்டிய பொக்கிஷம் ..

பிட்டுக்கார் : அதுதான் ஜெயிலுல வச்சு பூட்ட போறாங்களாம்.

11.

ரமனன் : அது என்ன கோல்டு சாம்பார்...?

வேலு : இதிலே 24 கேரட் போட்டிருக்கு அதான்

12.

ராணி : உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே!

வேனி : அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட் சோப்பாம்.

13.

பட்டைய கிளப்பும் பாக்கி : "நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?"

பேட்டை மாமா : "குறுக்கு விசாரணை பண்றாராம்".

14.

நோயாளி : பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர் .. .. .. ?

டாக்டர் : பல்லைப் பிடுங்கின அப்புறம், பல்லுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?

15.

வேலு : "பாகவதர் ஏன் பாடும்போது கண்ண மூடிக்கிறார்?"

பாக்கி : "எதிர்த்தாப்ல பாட்ட கேக்கறவங்களோட முகபாவம் பாக்க சகிச்சலயாம்."

16.

நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!

மருத்துவர் : என்னாச்சி?

நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

17.

 டாக்டர் : வாயில் என்ன கட்டு ?

நோயாளி : எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க?

18.

பாக்கி : என் மனைவியோடு ஹொட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .

ரமனன் : என்னாச்சு ?

பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா!

19.

தொண்டன் : தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!

தலைவன் : இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!

20.

வேலு : நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!

முராரி : அதிசயமாயிருக்கே!

வேலு : காரணம். அவன்தான் அவ புருஷன்.

 தொகுப்பு: மனுவேந்தன் செல்லத்துரை

 

 

0 comments:

Post a Comment