எளிய திருமணம்

ஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நாயகத்தோழர்களிலேயே பிரபலமான செல்வந்தர்.பெரும் செல்வந்தராக இருந்தாலும் படு எளிமையாக வாழ்ந்தவர் ஆவார்.

அவரது திருமணம் மதினா நகரில் நடந்தது.அது சமயம் பெருமானார் (ஸல்)அவர்கள் மதினா நகரில் இருந்த போதிலும் தமது திருமணத்தைப்பற்றி ஒரு வார்த்தைகூட கூறவில்லை.

திருமணத்திற்கு அடுத்த நாள் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) அவர்கள் பெருமானார் முன் இருந்தார்கள்.அவர்களைக்கண்டதும் அண்ணல்(நபி)ஸல் அவர்கள் “அப்துர்ரஹ்மான்,உம் மீது மணவாடை வீசுகின்றதே.என்ன விஷயம்?”
என்று வினவினார்கள்.

ஆம் ரசூலுல்லாஹ் அவர்களே!நேற்று என் திருமணம் ஒரு அன்ஸாரி பெண்ணுடன் நடந்தது”என்றார் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)அவர்கள்.

அல்லாஹ் உடைய அருளும் மங்கலமும் உங்கள் இருவர் மீதும் உண்டவதாக “என்று பெருமானார் (ஸல்)அவர்கள் வாழ்த்தினார்கள்.

ஊர் மக்கள்: அனைவரையும் படை திரட்டி,லட்சக்கணக்கான கரன்சிகளை கொட்டி,விரயம் செய்து விருந்து வைத்து ,ஆடல் பாடல் மின்விளக்கு அலங்காரக்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்து நடத்தினால்தான் பெருமைக்குறிய விஷயம் என்று நினைக்கும் நம்மவர்களுக்கு நாயகத்தோழரின் திருமணத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்.திருமண செய்தி அதே ஊரில் இருந்த பெருமானார் (ஸல்)அவர்களுக்கே கூட தெரிவிக்கப்படாமல்,அவ்வளவு பெரிய செல்வந்தர் மிகவும் எளிமையை கடை பிடித்தார் என்பதைபற்றி திருமணம் என்ற பெயரில் தேவை அற்ற அனாச்சாரங்களும் ஆடம்பரங்களும் செய்வோர் எண்ணிப்பார்க்கவேண்டும்.

0 comments:

Post a Comment