கணினி உலகம்


தமிழ் மொழிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும் மிலேக்ரோ டேப்லட்!


சமீபத்தில் க்யூப்பா கே-11 என்ற புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்த மிலேக்ரோ நிறுவனம், தற்பொழுது இன்னும் ஒரு புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது. டேப்டாப்-10.4 என்ற பெயர் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது மிலேக்ரோ நிறுவனம்.
Milagrow launches New Tablet with Tamil Language support இந்த டேப்லட்டின் திரை கூடுதல் ஸ்பெஷல் கொண்டதாக இருக்கும். வெளியில் உள்ள வெளிச்சத்திற்கு தகுந்த வகையில் இதன் திரையில் வெளிச்சம் அட்டோமெட்டிக்காக அட்ஜஸ்ட் செய்யப்படும். இது இந்த டேப்லட்டில் ஒரு சிறப்பான தொழில் நுட்பம் என்று கூறலாம்.
இந்த டேப்லட், பொதுவாக வாடிக்கையாளர்கள் விரும்பும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இந்த டேப்லட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் வசதியினை கொண்டதாக இருக்கும்.
ஆட்டோமெட்டிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட இந்த டேப்லட் திரை 9.7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதன் பிராசஸர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு இயங்கும். ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் இதன் இயங்குதளத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். 1024 X 780 திரை துல்லியத்தினை வழங்கும். முகப்பு கேமரா மட்டும் அல்லாமல், இதில் 2 மெகா பிக்ஸல் கேமாரவும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டேப்லட் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளுக்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதில் 8,000 எம்ஏஎச் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 12 மணி நேரம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.
இதில் 16 ஜிபி வரை மெமரி வசதியினை கொண்ட, டேப்லட்டில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த டேப்டாப் டேப்லட் ரூ. 22,999 விலை கொண்டதாக இருக்கும்.

கிண்டில் பயர் வரிசையில் மேலும் 3 புதிய டேப்லெட்டுகள்

Amazon Kindle Fire HDஅமேசானின் கின்டில் பயர் டேப்லெட் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. இந்த கிண்டில் பயர் வரிசையில் மேலும் 3 புதிய டேப்லெட்டுகளைக் களமிறக்க இருக்கிறது அமேசான். அதற்கான அறிவிப்பை கலிபோர்னியாவில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வில் அமேசான் வெளியிட்டது.
கின்டில் பயர் எச்டி என்ற டேப்லெட் 7 இன்ச் அல்லது 8.9 இன்ச் திரை அளவுடன் வரும். அதோடு இந்த டேப்லெட் இங்கிலாந்தில் 159 பவுண்டுக்கு விற்கப்படும். மேலும் கிண்டில் பயர் வரிசையி்ல் சற்று குறைந்த வசதிகளுடன் வரும் இன்னுமொரு புதிய டேப்லெட் 129 பவுண்டுகளுக்கு விற்கப்படும். இந்த இரண்டு டேப்லெட்டுகளும் வரும் அக்டோபர் 25 அன்று விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
8.9 இன்ச் கின்டில் பயர் எச்டி டேப்லெட் வரும் நவம்பரில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வரும். இந்த 3 டேப்லெட்டுகளுமே ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்  மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய வசதிகளுடன் வரும் என்று அமேசானின் தலைமை மேலாளர் ஜெப் பிசோஸ் தெரிவித்திருக்கிறார். இந்த டேப்லெட்டுகளை எச்டிஎம்ஐ போர்ட் மூலம் டிவிகளில் எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.
அதோடு இந்த டேப்லெட்டுகள் 2 வைபை அன்டனாக்கள் மற்றும் மிமோ ரேடியோ வேவ் தொழில் நுட்பம் ஆகியவற்றுடன் வருகின்றன. அதனால் இதி்ல் இணையதளத்தில் மிக விரைவாக வேலை செய்யலாம்.
அமேசானின் இந்த புதிய டேப்லெட்டுகள், கூகுள் நெக்சஸ் 7 டேப்லெட் மற்றும் ஆப்பிளின் ஐபோன் 5 மற்றும் ஐபேட் மினி போன்றவற்றுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெல்லி பீன் வெர்ஷனுன் துள்ளி வரும் எச்டிசி டேப்லட்!

புதிய டேப்லட்டினை களமிறக்க உள்ளது எச்டிசி நிறுவனம். தற்சமயம் அதிக ஜெல்லி பீன் அப்டேஷன் வசதியனை கொடுத்து வந்த எச்டிசி நிறுவனம், ஃப்ளையர்-2 என்ற புதிய டேப்லட்டை களமிறக்குகிறது. இந்த டேப்லட் நிச்சயம், ஃப்ளையர் டேப்லட்டின் மேம்படுத்தப்பட்ட வசதி கொண்ட டேப்லட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

HTC Flyer 2  Android 4.1 Jelly Bean Tablet Coming onஇந்த புதிய ஃப்ளையர்-2 டேப்லட்டின் இயங்குதளம், ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் வெர்ஷன் கொண்டதாக இருக்கும். இதில் 7 இஞ்ச் திரை வசதி கொண்ட திரையினை பெற முடியும். இந்த திரை வசதி வெறும் 7 இஞ்ச் கொண்டதாக இருப்பினும், சிறந்த தகவல்களை வழங்கும் என்று கூறலாம்.
ஏனெனில் இந்த டேப்லட்டில் 1280 X 768 பிக்ஸல் அதிக திரை துல்லியத்தினை கொண்டதாக இருக்கும். இதனால் தகவல்களை தெளிவாக பெற முடியும்.
இந்த டேப்லட் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும். ஸ்னாப்டிராகன் எஸ்-3 சிப் தொழில் நுட்ப வசதியினை இந்த எச்டிசி ஃப்ளையர்-2 டேப்லட்டில் எளிதாக பெறலாம்.
இப்படி இந்த டேப்லட் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தெளிவான தொழில் நுட்ப விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும்.

ஆசஸ் வழங்கும் அருமையான அல்ட்ராபுக்குகள்

ஆசஸ் நிறுவனம் தனது எல் வரிசையில் இரண்டு புதிய அல்ட்ராபுக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. இந்த அல்ட்ராபுக்குகளுக்கு எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்030ஆர் மற்றும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்056ஆர் என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.
Asus3ஜி மற்றும் இன்டல் ஐ3 கோர் ப்ராசஸருடன் வரும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்030ஆர் அல்ட்ராபுக் ரூ.46,999க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்டல் ஐ5 ப்ராசஸருடன் வரும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்056ஆர் அல்ட்ராபுக் ரூ.52,999க்கு விற்கப்படுகிறது.
இந்த இரண்டு லேப்டாப்புகளும் 15.6 இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் க்ளேர் டிஸ்ப்ளே மற்றும் உயர்தர எஸ்எஸ்எச்+எச்டிடி சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளன.
மேலும் ஆசஸ் தனது எப் வரிசையில் ஒரு புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. 2ஜி ப்ராசஸர் கொண்ட இந்த லேப்டாப் ரூ.35,999க்கு விற்கப்பட இருக்கிறது.
இந்த லேப்டாப் ஐஸ்கோல் தொழில் நுட்பம் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் அதிக சூடு அடையாது. அதுபோல் இந்த லேப்டாப்பில் சோனிக் மாஸ்டர் லைட் வசதியும் உள்ளதால் இதில் ஆடியோவும் பக்காவாக இருக்கும்.

நெக்சஸ் 7 டேப்லெட்டின் 3ஜி வெர்சனை களமிறக்குவதில் தீவிரம் காட்டும் ஆசஸ்

Iphone 5அதனைத் தொடர்ந்து இந்த டேப்லெட்டின் 3ஜி வெர்சன் வரும் 6 வாரத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. அதற்காக ஆசஸ் நிறுவனம் இந்த நெக்சஸின் 3ஜி வெர்சனைக் களமிறக்க மிகத் தீவிரமாக உழைத்து வருகிறது.
ஐபேட் மினி மற்றும் அமேசானின் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நெக்சஸ் 7 டேப்லெட் உலக அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நெக்சஸ் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட்டின் 8ஜிபி வெர்சன் 199 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி வெர்சன் 249 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெக்சஸ் 7 டேப்லெட்டின் 3ஜி வெர்சனை களமிறக்குவதில் தீவிரம் காட்டும் ஆசஸ்

Iphone 5கடந்த ஜூன் மாதம் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய நெக்சஸ் 7 என்ற புதிய டேப்லெட்டை கூகுள் அறிமுகம் செய்து வைத்தது. இந்த டேப்லெட்டிற்கு உலக முழுவதிலுமிருந்து சூப்பரான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து இந்த டேப்லெட்டின் 3ஜி வெர்சன் வரும் 6 வாரத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. அதற்காக ஆசஸ் நிறுவனம் இந்த நெக்சஸின் 3ஜி வெர்சனைக் களமிறக்க மிகத் தீவிரமாக உழைத்து வருகிறது.
ஐபேட் மினி மற்றும் அமேசானின் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நெக்சஸ் 7 டேப்லெட் உலக அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நெக்சஸ் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட்டின் 8ஜிபி வெர்சன் 199 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி வெர்சன் 249 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய அல்ட்ராபுக்கைக் களமிறக்கும் சாம்சங்

Samsung Ultrabook
கணினித் துறையில் முத்திரை பதித்து வரும் சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு புதிய அல்ட்ராபுக்கைக் களமிறக்க இருக்கிறது. இந்த அல்ட்ராபுக் சாம்சங்கின் 2ஜி 9 வரிசை குடும்பத்திலிருந்து வர இருக்கிறது. இந்த லேப்டாப்பிற்கு என்பி900எக்ஸ்3சி-எ01ஐஎன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்பைத் தயாரிக்க 33,000 மணி நேரம் செலவிட்டதாக சாம்சங் கூறியிருக்கிறது.
இந்த புதிய 9 வரிசை லேப்டாப் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 13.3 இன்ச் எல்இடி டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. இன்டல் ஐ7 சிபியு மற்றும் 4ஜிபி டிடிஆர்3 ரேம் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.
இந்த அல்ட்ராபுக் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் இயங்கு தளத்தில் இயங்கும். இந்த லேப்டாப் 256ஜிபி எஸ்எஸ்டி மற்றும் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 4000 ஆகியவைக் கொண்டிருப்பதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளை மிக அருமையாகச் செய்ய முடியும்.
இந்த அல்ட்ராபுக்கில் 3 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளதால் இந்த லேப்டாப்பில் இனிமையான பாடல்களையும் கேட்க முடியும். மேலும் இந்த லேப்டாப்பில் 1.3எம்பி வெப்காம், இன்டர்னல் மைக், டூவல் சேனல் வைபை, ப்ளூடூத், ஜிகாபைட் எர்த்நெட் லேன், விஜிஎ அவுட், மைக்ரோ-எச்டிஎம்ஐ, ஹெட்போன், மைக் கோம்போ, யுஎஸ்பி, எஸ்டி, எஸ்டிஎச்சி, எஸ்டிஎக்ஸ்சி கார்டு ஸ்லாட் போன்ற எல்லா வசதிகளையும் பார்க்கலாம்.
அதுபோல் இந்த லேப்டாப்பில் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தை வழங்கும். மேலும் இந்த லேப்டாப்பில் ஒஎஸ், சாம்சங் சப்போர்ட் சென்டர், எம்எஸ் ஆபிஸ் ஸ்டார்ட்டர் 2010, வொய்ல்டு டான்ஜென்ட் கேம் கன்சோல், விண்டோஸ் லைவ், ஈசி பைல் ஷேர், சைபர் லிங் யுகாம், ஈசி மைக்ரேசன், ஈசி செட்டிங்க்ஸ், சாப்ட்வேர் லான்சர், ஈசி சப்போர்ட் சென்டர் மற்றும் பாஸ் ப்ரவுசிங் போன்ற சாப்ட்வேர்கள் உள்ளன.




Related Posts Plugin for WordPress, Blogger...

0 comments:

Post a Comment