சிரிக்க ... சில நிமிடம்

 நகைச்சுவை = ஜோக்ஸ் 



-01-

மனைவி: "என் சமையல் எப்படி இருக்கு?"

கணவன்: "அருமை! இதை சாப்பிட்ட பிறகுதான், அம்மா என்னை ஏன் அடித்து எனக்கு பொறுமையை வளர்த்தார் என்று புரிகிறது."

 😁

-02-

கணவன்: "எப்படி இவ்வளவு அழகா இருக்கே?"

மனைவி: "உங்களை சமாளிச்சு, சமாளிச்சு என் மூளை ரொம்ப வேலை செய்யுதுங்க, அதான்!"

 😁

-03-

அப்பா: "டேய், எக்ஸாம்ல ஜீரோ வாங்கியிருக்கியேடா!"

மகன்: "அது ஜீரோ இல்லப்பா, 'எர்த்' (Earth). உலகம் உருண்டைன்னு டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க, அதான்!"

 😁

-04-

மகன்: "அப்பா, பொய் சொன்னா என்ன ஆகும்?"

அப்பா: "பற்கள் எல்லாம் உதிர்ந்து போகும்!"

மகன்: "அப்போ, தாத்தா பொய் சொல்லியா உங்களை வளர்த்தாங்கள்?"

 😁

-05-

ஆசிரியர்: "டேய், பூமி உருண்டையா இருக்குன்னு யார் கண்டுபிடிச்சது?"

மாணவன்: "தெரியல சார், ஆனா அதை உருண்டையா வரைஞ்சது நம்ம டிராயிங் மாஸ்டர் தான் சார்!"

 😁

-06-

ஆசிரியர்: "விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ் குளிக்கும் போது 'யுரேகா யுரேகா' (கண்டுபிடிச்சிட்டேன்) என்று கத்திக்கிட்டு ஏன் ஓடினார்?"

மாணவன்: "அவருக்கு சோப் கண்ணுல பட்டிருக்கும் சார், அதான்!"

 😁

-07-

ஆசிரியர்: "ஷாஜகான் ஏன் தாஜ்மஹால் கட்டினார்?"

மாணவன்: "அவருக்கு சிமெண்ட், செங்கல் எல்லாம் ஃப்ரீயா கிடைச்சிருக்கும் சார்!"

 😁

-08-

அப்பா: "பரீட்சைல ஏன்டா முட்டை (0) வாங்கின?"

மகன்: "டீச்சர் கிட்ட மார்க் கம்மியா இருந்ததுப்பா, அதான் எனக்கு முட்டை கொடுத்தாங்க!"

 😁

-09-

ஆசிரியர்: "ஏன்டா பக்கத்துல இருக்கவன பார்த்து எழுதுற?"

மாணவன்: "இல்ல சார், அவன் தப்பா எழுதுறானான்னு செக் பண்றேன்!"

 😁

-10-

ஆசிரியர்: "உன்கிட்ட 5 சாக்லேட் இருக்கு, அதுல 3 சாக்லேட்டை உன் தம்பிக்கு கொடுத்தா மீதி என்ன இருக்கும்?"

மாணவன்: "தாங்கமுடியாத அழுகைதான் வந்திருக்கும் சார் வரும்!"

 😁

-11-

ஆசிரியர்: "வருங்காலத்துல நீங்க பெரிய ஆளா வரணும்னா என்ன பண்ணனும்?"

மாணவி: "ஹை ஹீல்ஸ் செருப்பு போடணும் சார்!"

 😁

-12-

ஆசிரியர்: "மின்சாரத்தை கண்டுபிடிச்சது யாரு?"

மாணவன்: "எடிசன் சார்."

ஆசிரியர்: "அவர் இல்லைனா நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்?"

மாணவன்: "கரண்ட் பில் கட்ட தேவையில்லாம இருந்திருக்கும் சார்!"

 😁

-13-

காதலன்: "இந்த பூங்கா ரொம்ப இருட்டா இருக்கு, எனக்கு பயமா இருக்குடி."

காதலி: "பயப்படாதடா, நான் தான் உன் பக்கத்துல இருக்கேன்ல."

காதலன்: "அதான்டி எனக்கும் பயமா இருக்கு!"

 😁

-14-

பாட்டி: "ஏங்க, பூங்காவுக்கு வரும்போது ஏன் மூக்குக்கண்ணாடியை கழட்டி வச்சிட்டு வர்றீங்க?"

தாத்தா: "அப்பதான் வழியில வர்ற அழகில்லாத  பொண்ணுங்க எல்லாம் என் கண்ணுக்கு தேவதையா தெரிவாங்க!"

 😁

-15-

ஒருவர் பூங்கா மரத்தின் உச்சியில் ஏறி செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்.

கீழே இருந்தவர்: "ஏன்ப்பா அங்க ஏறி போட்டோ எடுக்குற?"

மரத்தில் இருந்தவர்: "கீழே நின்னப்போ நெட்வொர்க் கிடைக்கல, அதான்!"

 😁

-16-

பூங்காவில் மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தவர் மீது காகம் எச்சம் இட்டது.

நபர்: "நல்லவேளை,கடவுளு நன்றி சொல்லணும்,  பறக்கிற விலங்காய்  மாடு பிறக்கல!"

 😁

-17-

பூங்காவில் பெரியவர்கள் 'ஹாஹாஹா' என்று சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தனர்.

வழிப்போக்கர்: "ஏன் எல்லாரும் இப்படி சிரிக்கிறீங்க?"

தாத்தா: "நாங்க வீட்டுல சிரிக்க முடியாம இங்க வந்து ஆசைய தீர்த்துக்கிறோம்ப்பா!"

 😁

-18-

பயணி: "கண்டக்டர் சார், டிரைவர் தூங்குற மாதிரி இருக்கு!"

கண்டக்டர்: "அப்படியா? நல்லவேளை சொன்னீங்க, பிரேக் தேவையான போது மட்டும் அவரை எழுப்பி விடுங்க!"

 😁

-19-

செக்கிங் இன்ஸ்பெக்டர்: "தம்பி, டிக்கெட் எங்க?"

பயணி: "என் பாக்கெட்ல இருக்கு சார்."

இன்ஸ்பெக்டர்: "எடுத்துக் காட்டு."பயணி: "காட்ட முடியாது சார், அதுல என் பர்சனல் போட்டோ இருக்கு!"

 😁

-20-

பயணி: "இந்த சீட்ல ஸ்பிரிங் உடைஞ்சு குத்துது சார்!"

கண்டக்டர்: "அதான் தம்பி 'அக்குபிரஷர்' சீட், எக்ஸ்ட்ரா 5 ரூபாய் குடுங்க!"

 😁

-21-

பஸ் ஸ்டாண்ட் போர்டு: "பிக்பாக்கெட் திருடர்கள் ஜாக்கிரதை."

திருடன்: "அடப்பாவிகளா, எங்களோட பிசினஸ் ரகசியத்தை இப்படி ஓப்பனா எழுதி வச்சிருக்காங்களே!"

 😁

-22-

நண்பன் 1: "பஸ் ஸ்டாண்ட் ஹோட்டல்ல சாப்பிட்ட வடை எப்படி இருந்தது?"

நண்பன் 2: "வடை நல்லாத்தான் இருந்தது, ஆனா அதை வச்சு கிரிக்கெட் விளையாடலாம் போல, அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு!"

 😁

-23-

கண்டக்டர்: "தம்பி, இந்த பெரிய மூட்டையை பஸ்ஸுகுள்ள கொண்டு வரக்கூடாது, லக்கேஜ் சார்ஜ் ஆகும்."

பயணி: "இது மூட்டை இல்லை சார், என் பிரண்டு... லீவு நாள்ல எழும்ப முடியாம தூங்கிட்டான், அதான் அப்படியே தூக்கிட்டு வந்துட்டேன்!"

 😁

-24-

லேப் டெக்னீஷியன்: "சார், பிளட் டெஸ்ட்டுக்கு இரத்தம் எடுக்கணும்."

நோயாளி: "என்கிட்ட இரத்தம் ரொம்ப கம்மியா இருக்கு தம்பி, வேணும்னா என் பர்ஸ்ல இருந்து 100 ரூபாய் எடுத்துக்கோ, இரத்தத்தை விட்டுடு!"

 😁

-25-

டாக்டர்: "இனிமே நீங்க தினமும் ஒரு சப்பாத்திதான் சாப்பிடணும்."

நோயாளி: "சரிங்க டாக்டர், அதைச் சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடணுமா, இல்ல சாப்பாட்டுக்கு அப்புறம் சாப்பிடணுமா?"

தீபம் நகைச்சுவை 

0 comments:

Post a Comment