இது இனப் படு கொலை!!!
கவி ஒளி
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

மனதில்   உறுதி கொண்ட மக்களை
சினந்து    குருதி கொள்ள நினைப்பதும்
ஈனமாய்   எள்ளி நகை ஆடுவதும்
மானமாய் வாழ விடாது தடுப்பதும்
தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும்
வனமாய்  பசும் நிலத்தை மாற்றுவதும்
ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும்
இனப்     படுகொலை! இனப்  படுகொலை!!

விடுதலை   வேண்டி வீறுகொண்ட இனத்தை
படுகொலை  செய்து குழியில் புதைப்பதும்
நடுநிலை    அற்று அடிமை ஆக்குவதும்
ஏடுகளை    எரித்து சரித்திரத்தை சிதைப்பதும்
வீடுகளை   இடித்து அகதி ஆக்குவதும்
மேடுகளை  போட்டு தடுத்து வைப்பதும்
கூடுகளை   உடைத்து குஞ்சுகளை பறிப்பதும்
படுகொலை!அது  இனப்  படுகொலை!!

கலை    வளர்க்க தடை போட்டு
அலை   அலையாய் ஆமி போட்டு
விலை   பேசி சிலரை வாங்கி
உலை   வைக்கும் மந்தரை கெடுத்து
சிலை   சிலையாய் மக்களை மாற்றி
இலை   துளிராது  வேரையே வெட்டி
தலை   நிமிரா நெருக்களை கொடுத்து
கொலை செய்வது  இனப்  படுகொலை!!

2 comments:

  1. உலகம் முழுவதும் ஆளும் வர்க்கம் சுதேசிகளை ஏதோ ஒரு விதத்தில் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Tuesday, May 21, 2013

    "மந்தரை" என்பதை "மாந்தரை" என வாசிக்கவும்.

    ReplyDelete