ஒளிர்வு:49 -தமிழ் இணைய இதழ் :கார்த்திகை,2014-எமது கருத்து

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் கார்த்திகை வணக்கம்.
நாடிவரும் வாசகர் அனைவருக்கும் நன்றிகளுடன்  அனைவர் வாழ்விலும் குதூகலம் கூடி க்கலந்திட தீபம் வாழ்த்துக்களை கூறுவதுடன் எமது இன்றைய கருத்துக்கு வருகிறோம்.
தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரீகத்திலும் வீரத்திலும்  மேலோங்கி வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்று எழுதும் இடமெல்லாம் பெருமையாகப் பழைமைகளை பறை போட்டுக்கொள்ளும் நாம் பண்பாடாகவும்,நாகரீகமாகவும் நடந்து கொள்ளாவிடத்து அப்பெருமைகளைக் கூறி என்னபயன்? எதிர் காலம் எம்மைப்பற்றி பெருமையாகப் பேச எதனைச் சாதித்துள்ளோம்.ஒருவர் சிரமப்பட்டு கொண்டுவரும் ஆக்கத்தினை  அவரது அனுமதியின்றி எடுக்கும்பொழுது அவருக்கு நன்றி செலுத்துவதானது உங்களுக்கும் பெருமையாகிறது.அவருக்கும் ஊக்கத்தினை அளிக்கிறது.எனவே தவறுகளை மறப்போம்.பெருமை கொள்ள வாழ்வோம்.


/
.

0 comments:

Post a Comment