சமைக்கும் முன் .....

சமையல் குறிப்புகள்


காளிபிளவரை சமைக்கும் முன் அவற்றை கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு சிறுபிடி மஞ்சள் தூளையும், ஒரு ஸ்பூன் நிறைய நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மனத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

நன்றாக காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்து தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.  


சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறை துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவை தேய்க்கலாம்.

0 comments:

Post a Comment