வழுக்கை விழுவது ஏன்?

குழந்தை முதல் பெரி­ய­வர்கள் வரைக்கும்  தலை­முடி ‘தலை’­யாய பிரச்­சி­னை­களில் ஒன்­றாக உள்­ளது. தலை­முடிப் பரா­ம­ரிப்­புக்­காகக் காலம்­கா­ல­மாக நாம் பின்­பற்றி வந்த இயற்கை முறை­களைக் கைவிட்டு, செயற்கை அழ­கு­சா­தனப் பொருட்­களைப் பயன்­ப­டுத்த ஆரம்­பித்த பிறகு, தலை­மு­டியின் ஆயுள் குறைந்­து­விட்­டது. முன்பு 60 வய­துக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்­போது 30 வய­தி­லேயே விழ ஆரம்­பித்­து­வி­டு­கி­றது.

தலை­மு­டியின் வளர்ச்சி
தலை­முடி என்­பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புர­தத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்­கு­ழியில் இருந்து வள­ரக்­கூ­டி­யது. நமது தலையில் சரா­ச­ரி­யாக ஒரு லட்சம் முடிகள் இருக்­கின்­றன. தினமும் சரா­ச­ரி­யாக 100 முடிகள் உதிர்­வது இயற்கை.

முடி வளர்­கி­றது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்­சி­யாக வளர்­வதைப் போல் முடி வளர்­கி­றது என்று அர்த்­தப்­ப­டுத்திக் கொள்ளக் கூடாது. முடியின் வளர்ச்சி 3 பரு­வங்­களைக் கொண்­டது. ‘அனாஜன்’ (Anagen) என்­பது வளரும் பரு வம்.

ஒரு முடி­யா­னது தினமும் சரா­ச­ரி­யாக அரை மில்­லி­மீற்றர் நீளத்­துக்கு வளர்­
கி­றது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வரு­டங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்­மா­னிப்­பது, பரம்­ப­ரையில் வரும் மர­ப­ணுக்கள். அடுத்­தது ‘காட்­டாஜன்’ (Catagen) என்று ஒரு பருவம்.

இதில் முடி இயற்­கை­யா­கவே உதிர ஆரம்­பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்­க­ளுக்கு நீடிக்கும். மூன்­றா­வது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்­வெ­டுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்­கள்­வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பரு­வத்­துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதி­தாக வேறு முடி முளைக்கும். 

தலை­முடி ஒவ்­வொன்றும் ஒவ்­வொரு பரு­வத்தில் இருக்கும். பெரும்­பா­லான முடிகள் வளரும் பரு­வத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பரு­வத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.

என்ன காரணம்?
வயது, பரம்­பரை, அன்ட்­ரோஜன் ஹோர்மோன், இந்த மூன்­றும்தான் வழுக்­கைக்­கான முக்­கியக் கார­ணங் கள். உடல் வளர்ச்­சியின் நிய­திப்­படி, வய­தா­கும்­போது செல்கள் தங்­களைப் புதுப்­பித்துக் கொள்­வதைத் தாம­தப்­ப­டுத்தும். இதன் விளைவால், புதிய செல்­களின் உற்­பத்தி குறையும். இது தலை­மு­டிக்கும் பொருந்தும். ஒரு கட்­டத்தில் முடியின் வளர்ச்­சியே நின்­று­விடும். முது­மையில் வழுக்கை விழு­வது இப்­ப­டித்தான்.

வழுக்கை உள்ள பரம்பரை யில் பிறந்­த­வர்­க­ளுக்கு அவர்­களின் மர­ப­ணுக்­களில் எந்த வயதில் வழுக்கை விழ வேண் டும் என்று ஏற்­க­னவே எழு­தப்­பட்­டி­ருக்கும். அந்த வயதில் வழுக்கை விழு­வது நிச்­சயம். இதை மாற்ற முடி­யாது.

கடைசிக் காரணம் இது. டைஹைட்ரோ டெஸ்­டொஸ்­டிரோன் (Dihydro testosterone) என்­பது ஒரு அன்ட்­ரோஜன் ஹோர்மோன்.

இது அள­வாகச் சுரந்தால் முடி சரி­யாக வளரும் அதி­க­மாகச் சுரந்தால் முடி கொட்டும். காரணம், இது முடிக்­கு­ழி­களைச் சுருக்­கி­வி­டு­கி­றது. முடியின் வளர்ச்சிப் பரு­வத்தைக் குறைத்­து­வி­டு­கி­றது. இதனால், வழுக்கை விழு­கி­றது.

சரி, ஆண்­க­ளுக்கு மட்­டுமே வழுக்கை விழு­கி­றது. பெண்­க­ளுக்கு ஏன் வழுக்கை விழு­வ­தில்லை? இந்தச் சந்­தேகம் அதிகம் பேருக்கு இருக்­கி­றது. டெஸ்­டோஸ்­டீரோன் ஹார்மோன் பெண்­க­ளிடம் அள­வா­கவே சுரக்­கி­றது; அதீ­த­மாகச் சுரக்க வழி­யில்லை. இதனால் பெண்­க­ளுக்கு வழுக்கை விழு­வது மிக அரி­தாக இருக்­கி­றது.

வழுக்­கையைத் தடுக்க முடி­யுமா?
நமக்கு வய­தா­வதை எப்­படித் தடுக்க முடி­யாதோ, அப்­ப­டித்தான் வழுக்­கையும். இது பெரும்­பாலும் பரம்­பரை கார­ண­மா­கவே வரு­கி­றது. எனவே, இதைத் தடுக்க முடி­யாது. ஆனால், விரைவில் வழுக்கை விழு­வதைத் தடுக்­கலாம்; தள்­ளிப்­போ­டலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்.

தலை­மு­டி­களின் வேர்க் கால் எப்­படி இருக்­கி­றது? அதற்கு உயிர் இருக்­கி­றதா? மறு­ப­டியும் வளரச் செய்ய முடி­யுமா என்று முடியை ஸ்கேன் செய்து பார்த்து, உட­ன­டி­யாகச் சிகிச்சை மேற்­கொள்­வதன் மூலம் வழுக்­கையைத் தடுக்­கலாம்.

வழுக்கை விழத் தொடங்­கி­ய­துமே சில ஹோர்மோன் மாத்­தி­ரை­களைச் சாப்­பிட்டு வந்தால் மேன்­மேலும் முடி கொட்­டாது. ஆனால், மாத்­திரை போடு­வதை நிறுத்­தி­யதும் முடி கொட்ட ஆரம்­பித்­து­விடும். எனவே, இது நிரந்­தரத் தீர்வு ஆகாது. ‘மினாக்­சிடில்’ (Minoxidil) எனும் தைலத்தைத் தட­வினால், ஓர­ளவு முடி வளரும். வழுக்கை விழு­வதும் தள்­ளிப்­போகும். ஆனால், இந்தத் தைலத்­தையும் தொடர்ந்து தட­வி­வர வேண்டும்.

ஊட்­டச்­சத்து முக்­கியம்!
சிறு வய­தி­லி­ருந்தே தலை­மு­டியைப் பரா­ம­ரிப்­பதில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்­பது முக்­கியம். சரு­மத்­தையும் முடி­யையும் வறண்­டு­போ­காமல் வைத்­தி­ருக்க, எண்ணெய் நிச்­சயம் உதவும். சீயக்காய் குளியல் நல்­லது. வெயிலில் அதி­க­மாக அலை யக் கூடாது.

கடி­ன­மான சீப்­பு­களைப் பயன்­ப­டுத்தக் கூடாது. தலைக்குக் குளித்­ததும், முடியை உலர்த்த ‘டிரை­யரை’ப் பயன்­ப­டுத்தக் கூடாது. பேன், பொடுகு, பூஞ்சை போன்­றவை தொற்­றாமல் தலையைச் சுத்­த­மாகப் பரா­ம­ரிக்க வேண்­டி­யது முக்­கியம்.

அடர் பச்சைக் காய்­க­றிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், பால் பொருட்கள், முழு தானி­யங்கள், வாழைப்­பழம், மீன் போன்ற உணவு வகைகளை அதி­க­மாகச் சாப்­பிட்டால் முடி வளர்வதற்கான எல்லாச் சத்துகளும் கிடைக்கும்.

என்ன சிகிச்சை?
பெரும்பாலும் முன் நெற்றியின் பக்கவாட்டில் தொடங்கி, உச்சித் தலை வரைக்கும் வழுக்கை விழும். ஆகவே, பின்னந்தலையில் உள்ள முடியை வேரோடும் தோலோடும் எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் நாற்று நடுவதைப்போல் நடுவதற்கு ‘முடி மாற்று சிகிச்சை’  (Hair transplantation) என்று பெயர்.

நன்றி:-டாக்டர் கு.கணேசன்

0 comments:

Post a Comment