ஈழத்து தமிழ் பெண்கள்.

---------------------------------
முப்பத்தியாறு வயதிலும் அடிசல்லியில் கொக்கான்
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் ஈழத்து தமிழ் பெண்கள்.
வடக்கு கிழக்கு விதவைகள் எண்ணிக்கை எண்பத்தையாயிரத்தையும் 
தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில் இல்லையா ...? பெண்கள்
விபச்சாரம் செய்யலாமே என்கிறார்கள்.
நம் நாட்டில் படித்த இராமர்களும் கூட ...

ஆடுப்புளுக்கையை கூட்டியள்ளி தோட்டத்தில்
பசளை இடுகிறாள் "ஒரு பட்டதாரி பெண்"

இங்க கல்வியறிவு தொண்ணுற்றாறு வீதம்
ஆகிவிட்டது - இதில்
வேலைவாய்ப்பு எத்தனை வீதம்

மகரந்தமணிகள் காற்றில் பறந்து
கல்யாணம் செய்து கொள்கின்றன
பூக்கள் கர்ப்பமாகின்றன - பாவிகளாகிவிட்டனர்
முதிர்கன்னிகள்

பேரீச்ச மரங்கள் கூட பாலை வனத்தில் பூத்து 

காய்த்து சிரித்துக்கொண்டிருக்கின்றன.
பெண்கள் கண்ணீரில் நீராடி - கனவில்
தலைதுவட்டுகிறார்கள்.

யூரோக்களையும்... ஸ்டெலிங் பவுன்களையும்....
டொலர்களையும் .. ரூபாய்களுக்கு மாற்றி
நம் நாட்டில் கோயில்களை தான் கட்டுகிறார்கள்.
"
முதிர் கன்னிகளை யாரும் கட்டிக்கொள்கிறார்கள் இல்லையே"

நெடுந்தீவு -முகிலன்

2 comments:

  1. நம் நாட்டில் கோயில்களை தான் கட்டுகிறார்கள்.
    "முதிர் கன்னிகளை யாரும் கட்டிக்கொள்கிறார்கள் இல்லையே"நல்லாய் சொல்லுரீங்க!இப்படி எத்தனை,எத்தனை அழியாத கோலங்கள்!

    ReplyDelete
  2. நிஜங்களை நிழலாக்கும் உங்கள் வரிகள் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete