"ஒருபால் திருமணம்" / பகுதி 04

                                  
[நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும்  கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]


விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his]. எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம்.

உங்கள் வயிறு நிரம்பட்டும் ,
உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் ,
உங்கள் உடல், தலை கழுவட்டும்;
இரவும் பகலும் மகிழுங்கள்,
ஆடி பாடி மகிழுங்கள்;

உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள்,
உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் !
இதுதான் மனிதர்களின் விதி”

“Let your belly be full,
your clothes clean,
your body and head washed;
enjoy yourself day and night,
dance, sing and have fun;
look upon the child who holds your hand,
and let your wife delight in your lap!
This is the destiny of mortals.”

இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம்,  இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று :

தூக்கமே களைந்து விடு
என் கைகள் காதலியை தழுவட்டும் !
நீ என்னுடன் பேசுவதால்,
நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்!
என் அன்பே, உன்னை நினைத்து 
நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால்
இரவு முழுவதும் விழித்திருந்தேன்!"

“Sleep, begone!
I want to hold my darling in my arms!
When you speak to me,
you make my heart swell till I could die!
I did not close my eyes last night;
Yes, I was awake all night long,
my darling, thinking of you.”

என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting]. இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது.

எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை. ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் திருமணம் என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்க்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு.

மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும்  திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை  உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony  = matri  + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு  [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும். அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம், அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம்?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]  
முற்றிற்று

0 comments:

Post a Comment