ஆராய்ச்சியாளரின்செய்திகள்


காதல்:--காதல் பத்தின ஒரு தெளிவான புரிதல், அறிவியல்பூர்வமான விளக்கம் இப்படி ஸ்டிஃபேனி என்கின்ற ஆராய்ச்சியாளர் சில ஆய்வுகள் செஞ்சு அதைத் தெரிஞ்சிக்க முயற்சி செஞ்சுருக்காங்க!
காதல் அப்படீங்கிற ஒரு அடிப்படையான உணர்வு மட்டுமல்ல. மாறாக, மனிதனின் அறியும் ஆற்றலுடன் தொடர்புடைய பிரத்தியேகமான மூளைப்பகுதிகளின் செயல்பாட்டின் அடிப்படையில் உருவாகும் ஒரு அறிவுப்பூர்வமான மனித உணர்வே காதல் என்பது தெரியவருகிறது!!- என அவர் கூறுகிறார்.
மாரடைப்பு:-நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை பல் துலக்குவீங்க? காலை, இரவு இரண்டு வேளையும் பல் துலக்குவீர்கள் என்றால், நீங்கள் மாரடைப்பு பற்றி கவலையே பட வேண்டாம்.
ஆம், ஒரு நாளைக்கு இரண்டு வேளை பல் துலக்குவோருக்கும், குறைந்த பட்சம் ஆறு மாதத்துக்கு ஒரு முறையேனும் பல் டாக்டரிடம் போய் பரிசோதித்துக் கொள்வோருக்கும் இதய பாதிப்பு வாய்ப்பு மிகக்குறைவே என்று லண்டன் ஆய்வு கூறுகிறது.
லண்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் வாட் தலைமையில் ஆராய்ச்சி குழுவினர் இது பற்றி சர்வே எடுத்தனர்.
இரண்டு வேளை பல் துலக்குவோருக்கு பல் சுகாதாரம் திடமாக இருப்பதுடன், இதய பாதிப்பு அறவே இல்லாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு தலைவர் வாட் கூறுகையில், ‘இதய பாதிப்புக்குக் காரணமாக பல விஷயங்கள் இருந்தாலும், பல் ஆரோக்கியமும் ஒரு காரணமாக உள்ளது பலருக்கு தெரிவதில்லை. இதை வலியுறுத்தவே நாங்கள் ஆய்வு எடுத்தோம் என்று தெரிவித்தார்.
புற்றுநோய் :வயதான மனிதர்களின் உடலில் உள்ள பெருஞ்சுரப்பிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு பலர் பலியாகி வருகின்றனர். அதற்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிக்சை, ஹார்மோன் சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சை உள்ளிட்ட பல வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு அதற்கும் தனியாக சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அதில் இருந்து தப்பிக்க தற்போது எளிதான புதிய வழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது பீசாவை அதிக அளவில் சாப்பிட்டால் சுரப்பி புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் பீசா மற்றும் இத்தாலி வகை உணவுகளில் ஒரீகானோ என்ற ரசாயன பொருள் சேர்க்கப்படுகிறது. அது சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்க கூடியது.
இந்த தகவலை இங்கிலாந்து வாழ் இந்திய ஆராய்ச்சியாளர் சுப்ரியா பவேத்கர் தெரிவித்துள்ளார்.

கணணி உலகம்:


இன்டர்நெட்: ஏமாறாமல் இருக்க பாதுகாப்பு வழிகள்
இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது நாம் நிதானம் தவறினாலும் நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.
இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள்:
1. முன்பணம் கட்டாதீர்கள்: ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது. கடன் தீர்க்கப் பணம் தருகிறோம். பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம். இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, அதன் பின்னர் முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும்.
இதனை மிக அழகாக நியாயப்படுத்கும் வகையிலும் பல செய்திகள் தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான் அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப்படுத்திவிடுவதே நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.
2. அக்கவுண்ட் எண்: மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால் உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான். பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.
3. தானாக தனி நபர் தகவல்: ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.
4.போலி பேஸ்புக் செய்திகள்: பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார். நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.
5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்: இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.