கனடாவில்....


கனடாவுக்கு வருவதற்கு வருகையாளர் நுழைவுரிமை (விஸா) எனக்குத் தேவையா? அப்படியாயின் ஒன்றினைப் பெறுவதற்கு நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?
ஒரு வருகையாளர் (visitor) எனப்படுபவர் தற்காலிக அல்லது குறுகியகால அடிப்படையில் கனடாவுக்கு வருகை தரும் யாராவது ஒருவர் ஆகும். ஒரு வருகையாளர் எனப்படுகிறவர் .கனேடிய பிரஜை, நிரந்தர வதிவாளர் அல்லது மந்திரியின் அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்கும் ஒருவர் அல்ல.
வருகையாளர் என்போரில் பின்வருவோர் அடங்குவர்:
உல்லாசப் பயணிகள் (Tourists)
கனடாவில் உள்ள தம் குடும்பத்தினரைப் பார்க்க வருவோர் (People visiting family in Canada)
வர்த்தகப் பிரயாணிகள் (Business travelers)
வெளிநாட்டு மாணவர்கள் (Foreign students), மற்றும்
தற்காலிக தொழிலாளர்கள் (Temporary workers)
குறிப்பிட்ட சில நாட்டுப் பிரஜைகள் கனடாவுக்கு வருகை தர முன்னர் வருகையாளர் விஸாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கனடாவுக்கு வருவதற்கு வதிவாளர்கள் விஸா பெற்றுக் கொள்ள வேண்டிய நாடுகளின் பட்டியல் ஒன்றுக்கு குடியுரிமை மற்றும் குடிவரவு கனடா நிறுவனத்துடன் (Citizenship and Immigration Canada (CIC) (1)தொடர்பு கொள்ளுங்கள்:
கட்டணம் இல்லாமல்: 1-888-242-2100 (கனடாவுக்கு உள்ளே)
கனடாவுக்கு வெளியே: உங்கள் பிரதேசத்திற்குப் பொறுப்பாயுள்ள கனேடிய விஸா அலுவலகத்தினை தொலைபேசியில் அழையுங்கள்.
வருகையாளர் விஸாவுக்கு விண்ணப்பிப்பதாய் இருந்தால் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விதிமுறைகள் உள்ளன. குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டவாக்கம் மற்றும் விதிமுறைகளுக்கு - Immigration and Refugee Protection Act and Regulations (2)நீங்கள் கட்டுப்படுகிறீர்கள் என்பதனையும் கனடாவில் தற்காலிகமாகவே நீங்கள் தங்கியிருப்பீர்கள் என்பதையும் விஸா அலுவலர் திருப்திகரமாக நம்பும்படி செய்ய வேண்டும். மேலும் நீங்கள் பின்வரும் தகைமைகளையும் கொண்டிருக்க வேண்டும்:
உங்களையும் உங்களில் தங்கியிருப்போரையும் (உதாரணமாக பிள்ளைகள்) கனடாவில் பராமரித்துக் கொள்வதற்கும், நீங்கள் மீண்டும் வீடு செல்வதற்குமான போதியளவு பணத்தினைக் கொண்டிருக்க வேண்டும்
நல்ல உடலாரோக்கியம் கொண்டவராக இருக்க வேண்டும்.
சட்டத்திற்கு அமைய நடப்பவராக இருப்பதுடன் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பதிவுகள் எதனையும் கொண்டிருக்கக் கூடாது
உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலன்றி கனடாவில் வேலை செய்வதற்கான அல்லது படிப்பதற்கான நோக்கத்தினைக் கொண்டிருக்கக் கூடாது.
கனடாவின் பாதுகாப்பிற்கு எந்தவிதத்திலும் ஆபத்து விளைவிப்பவராக இருத்தல் கூடாது.
நீங்கள் கனடாவுக்கு வருகை தந்த பின்னர் உங்களது சொந்த நாட்டிற்கு செல்வீர்கள் அல்லது அல்லது வேறுநாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள் என்பதை விஸா அலுவலர் திருப்திப்திகரமாக நம்பும்படி செய்ய வேண்டும்
உங்களை ஒரு வருகையாளராகக் கனடாவுக்குள் அனுமதிப்பதற்கு உதவி ஆதரவளிக்கும் விதத்தில் விஸா அலுவலர் கேட்கும் மேலதிக ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மீளத்தரப்படாத கட்டணம் ஒன்றை நீங்கள் செலுத்த வேண்டும்.
வைத்தியசாலை மற்றும் மருத்துவ சேவைகளுக்கான செலவினங்களை வருகையாளருக்காக கனடா செலுத்துவதில்லை. கனடாவுக்குச் செல்லுமுன்னர் உங்கள் மருத்துவ செலவினங்களுக்கான கட்டணங்களைச் செலுத்தவென மருத்துவ காப்புறுதி உங்களுக்கு இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.
விருத்தினர் விஸா ஒன்றுக்கு நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?
நீங்கள் CIC நிறுவனத்தின் இணையத்தளத்திற்குச் சென்று வருகையாளர் விஸாவுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய அறிவுறுத்தல்களைப் பின்பற்ற முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினைத் தபால் மூலமாக அல்லது நேரில் சென்று ஒரு கனேடிய தூதரகம், உயர் ஸ்தானிகர் இல்லம் அல்லது அரச பிரதிநிதி அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும்.
உங்கள் விண்ணப்பத்துடன் எவ்வாறான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது பற்றிய குறிப்பான உள்ளூர் அறிவுறுத்தல்களை பல விஸா அலுவலகங்கள் கொண்டுள்ளன. நீங்கள் இவ்வாறான ஆவணங்கள் எவை என்பதைத் தெரிந்து கொள்வதுடன் சரியான எல்லா ஆவணங்களையும் சேர்த்து அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும். உங்கள் நாட்டுக்குப் பொறுப்பாயிருக்கும் விஸா அலுவலகத்தின் தொடர்புத் தகவலை நீங்கள் கண்டறிந்து கொள்வதற்கு CIC நிறுவன இணையத்தளத்திற்குச் சென்று வெளிநாடுகளிலுள்ள கனேடிய விஸா அலுவலகங்களின் பட்டியல் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலதிக தகவலுக்கு:
(1) Citizenship and Immigration Canada:
http://findlink.at/trv
(2) Immigration and Refugee Protection Act and Regulations:
http://findlink.at/IRPA

0 comments:

Post a Comment