ஒளிர்வு-(28) மாசி த்திங்கள்-2013


உண்மைகள் உரைக்கப்படும் தளம்-தீபம்மூடநம்பிக்கைகளின் முடிவிடம்.

தளத்தில்:சிந்தனைஒளிகனடாவிலிருந்து ஒரு கடிதம்.., கம்பனின் அறிவியல் ஆழம், ஆன்மீகம், , ஆராய்ச்சியாளரின் செய்திகள்யாரோநான் யாரோதொழில்நுட்பம்உணவின் புதினம் அறிவியல்,கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை , உங்களுக்கு தெரியுமா? ,சிரிக்க...!,சினிமாவிளையாட்டு.,நடிகையின் சதையை நம்பி…, !

உங்கள் படைப்பை சமர்ப்பிக்க: manuventhan@hotmail.com

சிந்தனைஒளி

தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளாத பெண்ணை
  வேறுயாரும் காப்பாற்றமுடியாது!
எளிதானதை சிக்கலாக்குவது எளிது.
  ஆனால் சிக்கலானதை எளிதாக்குவதோ சிக்கல்!
காதல் என்பது பரீட்சைமாதிரி இல்லை.
  ஒருதடவை  failஆனால் மறுதடவை எழுதி pass பண்ணுவதற்கு!
அன்னையை எவரோடும் ஒப்பிடக்கூடாது!
  அவள் ஈடற்றவள்!
நீ துணிந்தவனாக இருந்தால்
  தோல்விகூட உன்னைக்கண்டு அஞ்சும்!

கம்பனின் அறிவியல் ஆழம்:மேற்கே உதித்த சூரியன்!

இராவணனின் வஞ்சனையினால், ராம லட்சுமணர்கள்  உட்பட ஒட்டுமொத்த வானர சேனைகளும் மாண்டுபோயினர். இவர்களை உயிர்ப்பிக்க, மருந்து மலையிலிருக்கும் மூலிகையை விடியுமுன் கொண்டுவந்தால்தான் முடியும் என்ற நிலைஅம்மூலிகையைக்  கொண்டு வருவதற்காக அனுமான் புறப்படுகிறான். இலங்கையில் இருந்து வட திசையில் மிகப் பெரிய தொலை தூரம் ஐந்து பெரு மலைகளைத் தாண்டிப்  போயாகவேண்டும். முதலில் இமயமலை (9,000 யோசனை தூரம்), பொன்மலை (11,000 யோ.), செம்மலை (9,000 யோ.), மேருமலை (9,000 யோ.) எல்லாம் தாண்டி உத்தரகுரு நாடு என்னும் போக பூமியை அடைகிறான். இன்னும் நெடுத மலையைத் தாண்டினால்தான் மருந்து மலையை அடையலாம். ஆனால் அந்நாட்டில் சூரியன் தனது மேற்குத் திசையில் உதயமாகி எழுவது கண்டு அதிர்ந்து போனான். ஐயையோ, பொழுது விடிந்து விட்டதே! தனது முயற்சி தோல்வியில் முடிந்ததே! என்று ஒரு கணம் மனம் கலங்கினான். அடுத்த கணமே, தான் மறை வல்லோரிடமிருந்து கற்றுததெரிந்த உண்மை ஒன்று நினைவில் வரவே அவன் சாந்தமானான்.
இதை விளக்க, முதலில் ஒரு அறிவியல் உண்மை ஒன்றை ஆராய்வோம்.

நமது பூமி உருண்டை வடிவானது என்று நமக்குத் தெரியும்.-ஆனால், கம்பனுக்குமா?-. நாம் மேற்குப் பக்கமாகப் பயணம் செய்யும்போது, நமக்கு முன்னால் மேற்கு, பின்னால் கிழக்கு, வலப்பக்கம் வடக்கு, இடப்பக்கம் தெற்கு. இது பூமியை ஒரு முழுச் சுற்று சுற்றி வந்தாலும் மாறாது.

சரி, இப்போது பூமத்திய ரேகையில் இருந்து இப்போது வடக்கே போவோம். இப்போது, நமக்கு முன்னால் வடக்கு, பின்னால் தெற்கு, வலப்பக்கம் கிழக்கு, இடப்பக்கம் மேற்கு. அனுமான் வெளிக்கிடும் பொது இடப்பக்கம் சூரியன் மறைவதை கண்டான். வடதிசை மேலே செல்லச்செல்ல அட்ச ரேகையின் சுற்றளவு குறைந்து கொண்டே போவதால் கிழக்கு, மேற்கு திசைகள் என்று சொல்லக்கூடிய தூரங்களின் அளவு குறைந்து கொண்டே போகும். கடைசியில் வடதுருவத்தை அடைந்து, அதையும் தாண்டி மறு பக்கம் இறங்கிச் சென்றால் என்ன நடக்கும்
அப்போது, நமக்கு முன்னால் இருப்பது தெற்கு (வடக்கல்ல!), பின்னால் வடக்கு, இடப்பக்கம் கிழக்கு, வலப்பக்கம் மேற்கு. அனுமான் வடமுனை தாண்டி மறு பக்கம் சேர்ந்ததும், ஊரில் வெளிக்கிடும்போது  இடப்பக்கம் மறைந்த சூரியன் அடுத்த பக்கத்தில் உதயமாகுவது அவனது இடப்பக்கம் என்பதால், முதலில் அது மேற்கில் உதிப்பதாக எண்ணிவிட்டான். பின்புதான் அந்த உத்தரகுரு நாட்டில் - அதைத் தாண்டிய மேருமலையிலும் - அது கிழக்குத் திசையே என்று தெளிவுற்று, இலங்கையில் சூரியன் உதிக்க இன்னமும் பல நாழிகைகள் ஆகும் என்று அமைதி கொண்டு தன்  பயணத்தைத் தொடரலானான்.

அப்பாடா! இப்படி ஒரு விளக்கம், மூலப் பிரதியான வால்மீகி இராமாயணத்தில் காணப்படவே இல்லையாம்! இது கமபனின் சொந்தக் கற்பனை! கற்பனையல்ல, அறிவியல் உண்மை!
இதற்கான பாடலையும் அதன் பொருள் விளக்கத்தையும் காண்க:

கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான் கதிரின் செல்வன்
மேல்திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினன் வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர் என்னத் துன்பம் தணிந்தனன் தவத்தின் மிக்கான். - (கம்ப.8891)

தவத்து மிக்கான் - தவத்தாற் சிறந்தவனும்
கால் திசை சுருங்கச்செல்லும்  கடுமையான்  -  காற்றின் வேகம்  குறையுமாறும் திசையின்
தொலைவு சுருங்குமாறும்   செல்லுகின்ற விரைவினை உடையவனுமாகிய அனுமன்;
கதிரின் செல்வன்  மேல்  திசை  எழுவான்  அல்லன் - கதிரினைச் செல்வமாக உடைய  சூரியன்  மேற்குத் திசையில் எழுகின்ற இயல்புடையவன்  அல்லன்
விடிந்ததும்  அன்று - இப்போது    விடியற்காலமுமில்லை;
மேருமாற்றினன்மேருவில்    தன்   செலவை மாற்றினவனாய்;
வடபால் தோன்றும் என்பது  மறைகள் வல்லோர் சாற்றினர்  - வடபுறத்தில் (உள்ளார்க்கு மேற்குத்திசையில்)   தோன்றும் என்பது,   வேதம்  பயின்றவர்கள்  கூறியுள்ளனர்
என்ன,   துன்பம் தவிர்ந்தனன் - என்று எண்ணித் துன்பம் தணிந்தான்.

செல்வதுரை சந்திரகாசன்

ஆன்மீகம்-கர்மம்/ தர்மம் /வினை/அறம்


வேறு ஒரு கோணத்தில் :கர்மமும் தர்மமும்
[ முன் வினையும்  அற முறையும் ]
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
By:Kandiah Thillaivinayagalingam]

"எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
வீயாது, பின் சென்று, அடும்."-   திருக்குறள்

[ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.]

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார். கொன்றை வேந்தன்:

["இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்குவைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த பிறவிக்கு "இருப்பு இவ்வளவு" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை.முற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது
கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது.அது அவரை  இந்த பிறப்பிலேயே பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும் என்பதே அவர் கருத்து.அது மட்டும் அல்ல ஔவையார் கருதும் அதுவே.இது தான் எனது அபிப்பிராயமும் நம்பிக்கையும்.குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்]
என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே "- பட்டினத்தார்

[இந்த பாடல் அடிகளை கழுவேற்றும் பொது தன வினையை நொந்தது பாடிய பாடல்.அவர் முன் வினைப்  பயன் தான் தன்னை இப்படி வருத்திக் கொண்டு இருக்கிறது என நம்பினார் ] 


ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன்[விளைவு ] கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. கர்மா என்ற சொல், 'செய்' என்று பொருள்படும் 'க்ரு' என்ற வடமொழிச் சொல்லின் அடிப்படையில் உருவானது. அது போலவே தர்மம் என்பதை சமுதாயத்தில் ஒருவருடைய பங்கை வைத்து விளக்கமுடியும் அதாவது மனிதர்களைப் பொறுத்தவரை தர்மம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும்.தர்மம் என்று இந்து சமயத்தில் பொதுவாக சொல்லப்படுதலுக்கு, தமிழில் அறம் என்று வழங்கப்படுகிறது.

உதாரணமாக ,ஒரு பிச்சை காரனாக இருந்தாலும் வாழும் காலத்தில் நல்ல  கர்மாக்களை சேர்க்க வேண்டின்,நீ நல்லவனாக இருக்கவேண்டும் .நாம் செய்யும் கர்மாக்களே நம் தலை எழுத்தாக மாறுகின்றது.நம் செயல்களின் மூலம், நம்முடைய அதிர்ஷ்டம் / துரதிருஷ்டம் உருவாகிறது.நம் செயல்களுக்கு எப்பொழுதும் நாமே காரணம்.

ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
என்கிறது யஜுர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.5

கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் ஆகும். அவரவர் கர்மா அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது.

கர்மா என்பது ஒரு சிறு காலத்தில் பலனளிக்காது ,அது அடுத்த பிறவிக்கும் தொடரும்.

நல்ல  வாழ்வு / வாய்ப்பு  வருமாயின் நீ நல்ல கர்மா வைத்திருக்கிறாய் எனவும் அது போல் ஒரு கூடாத   வாழ்வு / வாய்ப்பு  வருமாயின் நீ கூடாத  கர்மா வைத்திருக்கிறாய் எனவும்   பொருள்படும் .

ஒரு இந்திய பழ மொழி உண்டு .அது சொல்வது :-

" நீ வளர்ந்ததும் திருமணம் செய் .குடும்பத்தவனாக மாறியதும் பணம் சேர் .முதுமை அடைந்ததும் ஞானத்தை வளர்த்து அடுத்த பிறவிக்கான கர்மாவை சேர்த்துக்கொள்." 

இது ஒரு "நீண்ட கால வைப்பு" போல தோன்றவில்லையா ? 

"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்" எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே."
(புறநானூறு : பாடல் : 134)

[ஆய் அண்டிரனின் கைவண்மை மறுமை நோக்கிச் செய்யப்பட்ட அறமன்று என்றும் அப்படி மறுமைநோக்கிச் செய்யப்படும் ஈகை அறம் அறத்தை விலைகூறி விற்கும் வணிகத்தை ஒத்தது என்றும்முடமோசியார் பாடுகிறார். ]

நமக்கு வேண்டியதெல்லாம், மனதில் உறுதி, வாக்கினிலே இனிமை, நினவு நல்லது. அவ்வளவே.இது தான் எனது கருத்து.உங்கள் கருத்து என்னவோ ?

எமது மக்கள் பொதுவாக கர்மாவில் மிக திவீர நம்பிக்கை உள்ளவர்கள் .அது மட்டும் அல்ல அதை வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் விபரிக்க பயன்படுத்துவார்கள் .உதாரணமாக :

நீ ஏழையாக இருந்தால்- அது உன் கர்மாவால்!
நீ நோயாளியாக இருந்தால்- அது உன் கர்மாவால்!!
நீ நஷ்டம் அடைந்தால் - அது உன் கர்மாவால்!!!

உன்னிடம் உள்ள சுக துக்கங்கள் உன்னைப் பந்தித்துள்ள வினை அல்லது கன்ம மலத்தின் அடையாளம் என்பதே அவர்களின் கருத்து.

ஒருவன் இன்று தீய விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதைச் சிலர் 'எல்லாம் அவன் கர்மா' என்று சொல்வதுண்டு. நேற்றைய செயலின் விளைவை இன்று அனுபவிக்கிறான் என்பது பொருள்.  மேலும் தமக்கு ஒவ்வாத கர்மாவை செய்யும் பொழுது பிறர் அதை சுட்டிக்காட்டி எச்சரிக்க பயன்படுத்தும் வார்த்தை தான் “கர்மம் கர்மம்”. இவ்வார்த்தையை கேட்டதும் மனம் தெளிந்து அதிலிருந்து விடுபட்டு நற்கதியை அடைவார்கள் என நம்பியதால்

கர்மா என்பது  காரணமும்[வினையும்]   நிகழ்வும்  (விளைவும் )  சேர்ந்த ஒன்று .நீ "அ" செய்தால் "அ" வரும்.அதாவது நீ  தக்காளி  நட்டு  தண்ணீர்  ஊற்றி பராமரித்தால்   தக்காளி வளரும் .

"நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்" 

"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் "  

பொதுவாக கர்மாவை மூன்று வாயில் ஊடாக உண்டாக்கிறாய் .உடல்,   வாய், மனம் .இதைத்தான் நாம் செய்தல், சொல்லுதல், நினைத்தால் என்கிறோம்.கர்மா என்றால் என்ன என்று  தெரியுமா ? 

நியுட்டன்  விதி சொல்வது போல எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு.அதாவது  ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. ஆகவே விதியினால் வினை விளைகிறது.