கவித்துளிகள் [காலையடி அகிலன்]


எட்டாத வானத்தை தொட 
சிறுமியும் ஒத்திகை பார்க்கும் 
சிம்மாசனம் 
ஊஞ்சல்

சொட்டு நீரில்
 கர்ப்பம் தரித்து 
   செடியானது 
விதை


வறுமையின் உருவாய்
ஏக்கத்தின் சிறையாய்
இரக்கமதில் நிறைவாய்
 தெருவோரம்
 ஏழை வாழ்வு


பேச்சு தமிழ்
உணர்வின்றி ப்போனால் 
போற்றி வளர்த்தெடுத்த
 தமிழ் அன்னை 
புரிதல் இன்றி
 தனிமையடைந்து
 கண்ணீர் சிந்தியே
 மறைந்து போவாள்


அன்பு கொண்ட உறவை தேடு
வாழ்நாள் வரை 
உன்னை    சுமைந்துவிடும்  
அன்பு இல்லாத உறவை 
தேடாதே 
வாழ் நாள் முழுவதும் 
கலங்கிவிடுவாய்

வாய்ப்பை பார்த்து நிற்பவன் 
வாய்ப்பு வரும்வரை நிற்பான் 
சுமையை தூக்கி பார்ப்பவன் 
இறுதி வரை நிற்பான்


                                                                                                               

0 comments:

Post a Comment