வருங்கால தொழிநுட்பம்: அங்கம்-02[புதிய வாசகர்களுக்காக ஒவ்வொரு புதனும் மீள்-இடுகை] 
வருங்கால தொலைநோக்கு

இன்றில் இருந்து 2500 வருடம் வரை என்ன நடக்கும்? ஒரு அறிவுபூர்வமான தொழில்நுட்ப அலசல்:
(இது ஆங்கில மூலத்தின் சுருங்கிய தமிழ் வடிவம்)

3 .00 சுற்றாடல் - இயற்கை - உணவு - வீடமைப்பு

3 .01 தற்போதைய பிரச்சனை
உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதாரப் புரட்சி மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உச்சிக்குக் கொண்டுபோன அதே நேரத்தில் நமது சுற்றாடலை மிகவும் சீரழித்து விட்டது. ஆனால், நான் காணும் எதிர்காலம், இத்தகைய அழிவுகளெல்லாம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு உலகத்தையே கொண்டிருக்கும். சுற்றாடல் மாசுபடுகின்றதே என்று அழுது வடிவது எல்லாம் இன்னும் கொஞ்சக் காலத்திற்கே!
அத்தோடு, மனிதன் இயற்கையைத் தனது கட்டுப்பாட்டிலும், உணவு என்பதே தேவையில்லாத ஒன்றாகவும், வீடோ எங்கெங்கும் கட்டலாம் என்ற ஒரு நிலைமைக்கு ஏறிவிடுவான்.

3 .10௦.யுகம் 1 : 2010 - 2050௦ - மின்சாரம்


2020 இல் சூரிய சக்தியும், அதன் பின்னர் ஐதரசன் சக்தியும் பாவிக்கத் தொடங்கியதால் தீங்கு விளைவிக்கும் கரிவாயுக்கள் சுற்றாடலுக்குள் தள்ளப்படுவதுகுறைந்துவிடும். ஐதரசன் சக்தியாக்கத்தின்போது வெளிவரும் பிராண வாயுவானது வளிமண்டலத்தினுள் தள்ளப்படும். தாவரங்களுக்குத் அவசியமான கரிவாயுக்கள் தேவையான அளவில் வைத்திருப்பதற்காக வளிமண்டலம் கண்காணிக்கப்படும்.


3.20௦. யுகம் 2 : 2050 - 2200- நன்சாரம்


இக்கால நன்சார சக்தியும், அதோடு இயங்கும் வான் ஷூட்டர், வான்ஜெட் என்பனவற்றால் கரிவாயு என்ற பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.

3.21. புகை பிடித்தல் உடம்புக்கு நல்லது

2050இல், காற்றோடு சேர்த்து உள்ளிழுக்கும் சிகரெட் தடிகள், புகையிலை அல்லாத சில நல்ல திரவியங்களைக்கொண்டு தயாரிக்கப்படும். இவைகளைச் சொண்டில் வைத்து உள்ளே இழுக்க, இழுக்க அதே சிகரெட் இன்பம் இறுதிவரை கிடைப்பது மட்டுமல்ல, உள்ளே செல்லும் சுத்தமான, மருந்தூட்டப்பட்ட காற்று நமது இரத்தத்தைச் சுத்த்திகரித்து, கொழுப்புகளை நீக்கி, இரத்தோட்டத்தைத் துரிதப்படுத்தி, இதயம், கல்லீரல், சுவாசப்பை என்பனவற்றைச் செம்மையாக்கும்.


3.22. அதிகமான பூங்கா

வீதிகள் ஒன்றுமே தேவையில்லாதவிடத்து அங்கங்கெல்லாம் இளைப்பாறும்
பூங்காக்கள், தோட்டங்கள் நிறைந்திருக்கும்.

3.23. காட்டுத்தீ இல்லை

விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட குண்டுகளைத் தீயின் மீது சுட்டால், அதிலிருந்து வெளிப்ப்பாயும் அடங்காக் காபன் மோனோ ஒக்சைட் வாயு தீச்சுவாலையின்மீது படங்குபோல் படர்ந்து தீயை அணைத்துவிடும்.

3.30. யுகம் 3 : 2200 - 2350 - கோகோன்

3.31. காடுகள் நிலைக்கும்
ஒரு மணல் சார்ந்த கட்டிடப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதும் மரப் பொருட்கள் தேவை இல்லாமல் போகவே, காடுகள் அழிப்பது நின்றுவிடும். மிருகங்கள், பறவைகளின் நடமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நீண்ட பெரிய எல்லை வேலிகள் எல்லாம் கண்ணுக்குப் புலனாகாத கதிர்களைக் கொண்டு அமைக்கப்படும்.
3.32௦. உணவுகள் சுலபமாகும்
கூடிய சத்து நிறைந்த மரபு அணு மாற்றப்பட்ட ( GM food ) உணவு வகைகள் பெருகி, பாரம்பரிய உணவு முறைகள் அழிந்துகொண்டு போகும். தற்போது மனிதன் பெரிய அளவு உணவிற்குப் பதில் ஒரு சிறிய பங்கு சாப்பிட்டாலே போதும். அத்தோடு, உடம்பு கடின வேலைகள் செய்யாத படியால் சிறிய அளவு உணவு போதுமாய் இருக்கும். இதனால், கழிவுப்பொருள், சாக்கடைப் பிரச்சனைகளும் குறையும்.

3.33. அத்திவாரம் இல்லா வீடுகள்

புதிய ஜி பலன்செர் உதவியால், ஆழமான கொங்கிரீட் தூண்களோ, அத்திவாரமோ இல்லாமல், இலகுவாக நிலத்திலேயே நிற்கும் வீடுகள் பெருகி விடும்.

3.40. யுகம் 4 : 2350 - 2500௦ - ஓம்


3.41. சும்மா இரு

உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது உங்கள் காலடியில், நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்.

3.42. மரங்கள்

மேலும் புதிய திடமான பொருட்களின் கண்டுபிடிப்புகளால் மரங்கள் ஜாவும் நித்திய ஆயுளைப் பெற்றன.

3.43௦. சாப்பாடா? என்றால் என்ன?

முதல் 100 வருடங்களிலும் மரபு மாற்றிய தானியவகைகள் அளவில் மேலும், மேலும் சிறியனவாகி, பின்னர் நாளுக்கு மூன்று குளிசைகளுக்குக் குறைந்து கடைசியில், நாளுக்கு ஒரு குளிசை போட்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிடும். ஆனாலும், கடைசி 50 வருடங்களில், பிரபஞ்சத்தில் கிடைத்த ஓம் என்னும் மகாசக்தியைத் தாங்கிய செப்ட்ரோ நுண் சிம்புகள் மனித மண்டையில் பொருத்தப்பட்டதும், அவை உணவு, நீர் ஆகியவற்றிற்குப் பதிலான, ஆனால் இன்னும் மேலான, ஓம் சக்தியை உடம்பெல்லாம் பாய்ச்சி, மனிதனை நோயற்ற ஜீவனாக காலமெல்லாம் வைத்திருக்கும்.

3.44௦. வான் வீடுகள்

புவியீர்ப்பு சமநிலை நுட்பம் மேலும் முன்னேறி வீடுகள் ஜாவும், ஆகாயத்தில்


100 கி.மீ. தூரம் வரை மிதந்துகொண்டு இருக்கும். பிற்காலங்களில், இன்னும் தூரவெளிகளில் பிராணவாயுப் படுத்தப்பட்ட காப்பகங்கலினுள் வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் முளைக்கும்.


3.45௦. இயற்கை என் கையில்

இயற்கையின் சீற்றத்தினால் பல அழிவுகளைக் கண்ட மனிதன் தற்போது அதற்கு ஒரு முடிவு கண்டுவிட்டான். மழை, புயல், குளிர், வெயில், எரிமலை, நிலநடுக்கம், சுனாமி எதுவாய் இருந்தாலும், அவற்றை நிறுத்த, தொடக்க, முடிக்க, கட்டுப்படுத்த, இடம் மாற்ற, அளவைக் குறைக்க, கூட்ட எல்லா காரண நுட்பங்களையும் கண்டுபிடித்து, தனக்குக் கீழ் கொண்டு வந்துவிட்டான். 
[மேற்படி கட்டுரை 2011 ம் ஆண்டு தீபத்தில் வெளியானது,மறு வெளியீடு செய்யப்படுகிறது.]
(தொடரும்) technology tamil

- செ.சந்திரகாசன்

2 comments:

 1. From: kunaradnam
  Sent: January 25, 2011 3:46pm

  டிசம்பர் 2012 அழிவை மட்டும் குறிப்பிட்டு எமை ப்பயப்படுத்தி வரும் ஊடகங்களின் மத்தியில் சந்திரகாசனின் தொழில் நுட்பம் கட்டுரை நம்பிக்கையைக் கொடுக்கிறது,அத்துடன் அத்துடன் விஞ்ஞானம் அதன்
  பாரிய மாற்றம்,மீண்டும் எமைப் பூமியில் பிறக்கும் ஆவலைத் தூண்டுகிறது. எதிர்கால விந்தையான விஞ்ஞான புரட்சிகளை நேரில் பார்த்ததுபோல் எழுதுவதுடன் அதற்கு பொருத்தமான விஞ்ஞான ரீதியிலான புதிய சொற்களையும் துணிச்சலுடன் எழுதும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்.தொடர்ந்து படையுங்கள்.எழுதுங்கள்.படிப்போம்.

  ReplyDelete
 2. Your article is Excellent.I recommend you to write more successful articles.Thank you.

  ReplyDelete