ஆடிப் பாடி உறவுகொள்ள இன்பத் தீபாவளி


உன்னைக் கண்டு நான் பாட என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி...
உல்லா...சம் பொங்கும் இன்பத் தீபா...வளி
உல்லா...சம் பொங்கும் இன்பத் தீபா வளி -- உன்னை

ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவு கொண்டாடும் தீபாவளி...
மக்கள் கொண்டா... டும் தீபா....வளி
மக்கள் கொண்டா... டும் தீபா....வளி -- உன்னை

தீயவனை அழித்த தேவனைப் போற்றி செய்யும்
தீபத் திருநாள் இந்தத் தீபாவளி...
தீபத் திருநா...ள் இந்தத் தீபா...வளி
தீபத் திருநா...ள் இந்தத் தீபா...வளி -- உன்னை

இல்லங்கள் அலங்கரித்துத் தீபங்கள் ஏற்றி
எல்லோர்க்கும் விருந்தோம்பும் தீபாவளி...
எல்லோ...ர்க்கும் விருந்தோம்பும் தீபா... வளி
எல்லோ... ர்க்கும் விருந்தோம்பும் தீபா... வளி --- உன்னை

பலகாரம் இனிப்புப் பட்சணங்கள் புசித்து
படடாசும் வெடிக்கும் இன்பத் தீபாவளி...
பட்டா...சும் வெடிக்கும் இன்பத் தீபா...வளி
பல பட்டா...சும் வெடிக்கும் இன்பத் தீபா...வளி --- உன்னை

Diwali 

    எழுதியவர்:  K.C.Rasaratnam, Melbourne, Australia    

3 comments:

  1. கல்யாணப்பரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற பட்டுக்கோடடையின் பாடலை ஆரம்ப அடிகளாக கொண்டு மேற்படி படைத்தல் வெளிவந்திருக்கிறது.அப்பாடலை வானொலியில் தீபாவளி நாட்களில் கேட்க்கும் போதெல்லாம் முதல் இரு வரிகளுடன் தீபாவளி முடிவடைகிறதே என்று சலித்துக்கொள்வதுண்டு.உங்கள் முயற்சி வித்தியாசமானது,நன்று.

    ReplyDelete
  2. செழியன்Thursday, October 19, 2017

    ஆமா,தீபாவளின்னா புத்தாடையும்,படடாசும் எப்ப கிடைக்குமேன்னு ஆவலோட காத்திருப்பம் வாழ்த்துக்கள்

    ReplyDelete