நிலவே நிலவே!


நிலவே நிலவே நீ ஓடி வா
உன்னை பார்த்தவுடன் மனமும்
 சிறு குழந்தையாக மாறி 
உன் அழகில் மயங்கி    விடுகிறதே
  நீயும் சுய நலம் பாராது மனிதனுக்கு 
மகிழ்வை கொடுத்துவிட நிலவே வா!

நிலவே நிலவே நீ வா 
கண் விழித்து காத்திருக்கும் 
மனிதர்களை தாலாட்டி
 தூங்க வைக்க நிலவே நீ வா !

நீ வந்தாலே என் 
மனதோரம் இருக்கும் சுமையும் 
என்னில் நீங்கி 
உன்னில் உறைந்து போகும்

தூங்காத விழி இரண்டும் 
உன்னை தேடுதே நிலவே
உன் முகம்     பார்த்தாலே   
நினைவாகி போன 
காதலின் அடிச்சுவடுகள்
 உறைந்து போகாமல்  உயிர் பெறும்
நிலவே நீ வா வா! 

என் அருகில் வா! 
ஒரு முத்தம் தா என
காதலரும் காதல் கொள்ள
 உன்னையே தேடுகிறார்கள்
 நிலவே நீயும்
 கரு மேகங்களை 
நீக்கி விரைந்து வா!

காலையடி,அகிலன் 

0 comments:

Post a Comment