வருங்கால தொழிநுட்பம்: அங்கம்-03

 [புதிய வாசகர்களுக்காக ஒவ்வொரு புதனும் மீள் இடுகை.]
வருங்கால தொலைநோக்கு
இன்றில் இருந்து 2500 வருடம் வரை என்ன நடக்கும்? ஒரு அறிவுபூர்வமான தொழில்நுட்ப அலசல்:
(இது ஆங்கில மூலத்தின் சுருங்கிய தமிழ் வடிவம்)
4.00   மனித  அறிவாண்மை:
4 .10  உண்மைகள் சில:
மனிதன் குரங்கிலிருந்து தோன்றி, பலவிதமான பரிமாண வளர்ச்சியினூடாகச் சிறந்த  உணவு, குடும்பம், உறைவிடம்  முதலியவற்றின் தேடுதலோடு, மேலும் மேலும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக்  கூட்டும் பல அரிய புதிய  சாதனங்களைக்  கண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறான். இத்தீவிர தேடுதல்  முயற்சியினால், நினைத்தே நாம் பார்க்க முடியாத அளவில் மாபெரும் அறிவு வளர்ச்சியினை  எதிர்கால மனிதன் பெறுவான்.
4 .20  புலன்கள் பெருகும்:  6 வது, 7 வது,  8 வது புலன்கள் :தற்சமயம் மனிதன் 5 அறிவை மட்டும்தான் கொண்டிருக்கிறான்.  இல்லை, இல்லை  6 ஆம் அறிவாகிய பகுத்தறிவு இருக்கிறதே என்று கூறுவது தெரிகிறது. பகுத்தறிவினால்  மனிதன் உயர்ந்து இருக்கிறான் என்று சந்தோசப்படுவோருக்கு ஒரு சிறு தகவல். அநேகமான மிருகங்கள்,  பறைவகள், பூச்சிகள் எங்களிலும் பார்க்க சிறந்த சக்திகள் கொண்டவையாக இருக்கின்றன. இவை,  கூரிய தொலைப்பார்வை, சிறிய, பெரிய சப்தங்களைத் துல்லியமாகக் கேட்கும் காதுகள், எந்தச் சிறு மணங்களையும் நுகர்ந்தறியும் திறன், இரவிலும் பார்க்கும் கண்கள், சிறு அலைகளையும் உணரும் உணர்விகள்,  பறக்கும் ஆற்றல், வியக்க வைக்கும் கலைத்திறன் என்பனவற்றைக்  கொண்டன. இவைகளுக்கு முன்னால், அவைகளின் பார்வையில் நாங்கள்  ஒரு ஜடங்கள், குருடர்கள், செவிடர்கள், வாசனை தெரியாதவர்கள், நொண்டிகள், அத்தோடு முழு அறிவிலிகள். இவ்வுலகில்  எவ்வளவோ விடயங்கள் இருந்தும் அவை எல்லாம் மனிதனால் உணரப்படாமல் இருக்கின்றன. ஏன்?  மனிதனுக்கு  ஒரு சத்தமே கேட்கவில்லை என்பதற்காக பூமி என்ன படு நிசப்தமாகவா விரைந்துகொண்டு இருக்கிறது? கோடியில் ஒருவருக்கு இந்த விலங்கினத்தின்  ஆற்றல்களில் ஒன்று மட்டுமே கிடைத்து விட்டால், அதை வைத்து அவர்  ஒரு கடவுளாகவே  மக்களுக்கு அதிசயங்களைக்  காட்ட விழைந்து விடுவார். ஆனாலும், வருங்கால மனிதன் படிப்படியாக, இத்தகைய ஆற்றல்களைப் பெறுவான்.
6 வது அறிவாகிய, தற்போது telepathy  என்று சொல்லப்படும் உளம் அறிதல் சக்தியானது, ஒருவர் மற்றயவரின் சிந்தனை அலைகளை உணர்ந்து, அவர் என்ன மனத்தில் உண்மையில் எண்ணுகின்றார் என்பதைக் கண்டுபிடித்துவிடுவர். இருவர் சந்தித்தால் பேசவேண்டும் என்றில்லை. சிந்தனாசக்தி  அலைகளின் அதிர்வினை வைத்தே ஒருவருக்கொருவர் உணர்ந்து கொள்வர். இதே சக்திதான், பொருட்களின் சக்தியலைகளை வைத்து  அந்தப் பொருட்களையும் உருவாக்குவதற்குப்  பிரயோகிக்கப்படும்.
7 வது புலனாக முன்னொலி அறிதல் திறமையைப் பெறுவான். இப்புலனை அடைவதால், சமீப  காலங்களின் முன்னர், பெரியோர்கள்  மற்றும் சாதாரண மக்கள் பேசிய பேச்சுகளின் அலைவடிவுகளைச் சுற்றாடலில் இருந்து பகுத்தறிந்து, அப்பேச்சினையே,  அப்படிப்  பேசியவாறே,  சீரோடு திரும்பப் பெற்று, சாதாரணமாகக் கேட்கச் செய்வான்.
8 வது அறிவாகிய dara  எனப்படும் ஓரிடத்தில் மறைந்து வேறிடத்தில் தோன்றும் அபார திறனைப் பெற்று விடுவான். இதற்கு, முன்னர் குறிப்பிட்ட சக்தி சொட்டு தத்துவமே மூல காரணியாக இருக்கும்.
4 .30  இயந்திர மனிதர்களும், மனித இயந்திரங்களும் :
மனிதன் தன்னுருவில், நற்குணம் கொண்ட, ஆனால் உலகின் சகல அறிவு நுட்பங்களும் கூடிய இயந்திர மனிதர்களை உருவாக்கி, இதுவரை காலமும் தான்  செய்து வந்த, செய்ய முடியாத, செய்ய அஞ்சிய செயல்களை எல்லாம் இந்த இயந்திர மனிதர்களிடம் விட்டு விடுவான். இவர்கள் படுபயங்கர வேக வேலைகாரர் மட்டுமல்ல, பிழையே விடாத, ஓய்வே தேவையற்ற, கீழ்ப்படிவான ஊழியர்கள். உபகரணங்கள் ஏதாவது திருத்த  வேண்டிவரின், தங்களுக்குள்ளேயே கருத்துப் பரிமாறிச் சில வினாடிகளிலேயே சரிபார்த்து விடுவார்கள். கடைசியில், உலகில் தொழிலாளர், விவசாயிகள், ஓட்டுனர்கள், பொறியியளார்கள், வைத்தியர்கள், தாதிகள், சுத்திகரிப்பாளர்கள், அரசாங்கங்கள்,  கச்சேரிகள், தொழிலகங்கள், கடைகள்  எல்லாமே இவர்கள்தான். அதே நேரம், மனிதனோ, தனது தலையில் பொருத்தப்பட்ட நுண் சிம்புவின்  கட்டளைகளுக்கு அமைய ஒரு இயந்திரம்போல அங்கும் இங்கும்  உலாவி  வருவான்.
 4 .40  மரபுவழிப் பொறியியல் - விரும்பிய வடிவில் பிள்ளைகள் :
மரபு அணுக்களை மாற்றியமைப்பதன் மூலம், மூளையின் குறிப்பிட்ட கலங்களைத் திருத்தியமைத்து, செப்ரோ நுண் சிம்பு பதிக்கப்பட்டு, மனிதனின் தோற்றம் மாற்றியக்கப்படுவதோடு, நோயற்ற வாழ்வும், ஆயுள் நீடிப்பும் கிட்டும். அத்தோடு தேவையான நற்குணங்களை  மட்டும் கிரகிக்கக் கூடியதாக மூளை திருத்தி அமைக்கப்படும். தேவையான உருவம், நிறம், குணம், உயரம் கொண்ட குழந்தைகள்  உருவாக்கப்படும். விரும்பினால், என்னைப்போலவும் ஒரு மனிதனை உருவாக்க முடியும். வர்த்தகப் பெயர்கள் கொண்ட தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட குழந்தைகள்  விற்பனைக்கு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 4 .50  இறந்தோர் உயிர்த்து எழுவர்:
முன்னர் பாதுகாத்து வைக்கப்பட்ட பூதவுடல் உயிர்த்தெழும் நுட்பம் மிகப்பிந்திய காலங்களில் ஆராயப்படும்.
(தொடரும்)
                                                                                         - செ.சந்திரகாசன் technology tamil

3 comments:

 1. பிறந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் பூமியில் நமக்கு இடமேது.

  ReplyDelete
  Replies
  1. புதுசா பெத்துக்காம விடவேண்டியது.பின்னால தேவையென்னா பாத்துக்கலாம்

   Delete
 2. பிறந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் பூமியில் நமக்கு இடமேது.

  ReplyDelete