நீதி தேவதை நீ எங்கே.....??

நீதி தேவதை நீ எங்கே? 
உன்னை த்தேடுகிறோம் 

கண்ணீர்   நிறைந்த 

எங்கள் விழிகளும் 
தூங்க மறுக்குது 
நீ எங்கே?

எங்கள் இனத்தின் 

அவல குரல் கோட்கிறதா?

இழந்துவிட்ட உறவுகளின் 

அழு ஓசைக்கு 
ஒரு அர்த்தம் 
சொல்லி ப்போ! 

உன் வரவை எண்ணி 

பார்த்து விழி ஏங்கி 
நிற்கிறோம் 
நீதி தேவதையே
நீ எங்கே?

காயம் பட்ட உறவுகளுக்கு 

மருந்து தந்து செல்வாயா?

அல்லது கண்ணில் 

நெருப்பு வைத்து 
வேதனையை 
கூட்டி ச்செல்வாயா?

விடை தெரியாமல் 

வினாவுடன் 
ஏங்கி நிற்கிறோம்
 வழி கிடைக்குமா 
நீதி தேவதையே
நீ எங்கே?
...........................................ஆக்கம்:அகிலன்,தமிழன் 

0 comments:

Post a Comment