உறவுகளும் இல்லாவிடின்..!


மரத்தின் நிழலை  நாடிப்போகும் 
பறவைகள் போல
உறவுகளின் துணை நாடி
போவர்  உறவுகள்

பூக்களின்  தேனுக்கு
ஏங்காத  தேனீக்களும் இல்லை  
பூக்களும்  இல்லாவிடின்
வாசனையும் தெரியாது 
பாசத்துக்கு  ஏங்காத உறவுகளும் இல்லை
 உறவுகள் இல்லா  விடினும்
அன்பு வாசமும் தெரியாது

நட்புகளும்  இல்லை என்றால்
  நினைவுகளும் தேங்கி இருக்காது
 உறவுகளும்  இல்லை என்றால்

கவலையும் துன்பமும்  தெரியாது
ஆக்கம்:அகிலன் தமிழன் 

0 comments:

Post a Comment