ஆவதும் பெண்ணாலே அழிவதும் .....அப்படியா?

'ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே'' என்பது ஒரு குடும்பத்தில் தவறு நடந்துவிட்டால் பெண்ணில் குற்றம் சுமத்திப்  மேற்படி பழமொழியினைக் கூறுவது இன்று வழமையாகிவிட்டது.

ஒரு திருமணமான தம்பதியினரிடம் ஒருவரை ஒருவர் சந்தோசமாகப் பார்த்துக்கொள்ளும்படி பெரியோர்கள் அறிவுரை சொல்வதில்லை . ஆனால் மணப்பெண்ணினை சந்தோசமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் மாப்பிள்ளை பக்கத்திடம் கூறும் வழக்கம் எதற்காக பெரியோர்கள் மத்தியில் வந்திருக்கவேண்டும் என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
திருமணத்தின்பின் பெண் கருவுருகிறாள். அந்நேரத்திலும் பெண்ணை சந்தோசமாக வைத்திருக்கவேண்டும் என்பதுவும் பெரியோர்கள் சொல்லும் அறிவுரையாக காலம்,காலமாக கூறப்பட்டு வருவதன் நோக்கம் என்ன?

ஒரு குழந்தை பிறக்கும்போது அப்பா போன்ற தோற்றத்தில் பிறந்தாலும்கூட ,அதன் குணங்கள், மனநிலைகள் சகலதும் அம்மா கர்ப்பகாலத்தில் எப்படியான மனநிலையில் இருந்தாரோ அவையின் ஒரு முழு விம்பமாகவே அக் குழந்தை பிறக்கிறது.
அதாவது சிடு மூஞ்சியினை கொண்டு கவலையின்மத்தியில் ,கூடாத கற்பனைகளை கருவுற்ற காலத்தில் தாய் கொண்டிருந்தால் அதன் பிரதியாகவே பிள்ளையும் பிறக்கும்.
இதனை அன்று உணர்ந்தவர்கள் புராணக்கதைகளிலும் சேர்த்துக்கொண்டார்கள்
அதாவது பிரகலாதன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போது நாரதரின், நாராயணனின் கதையை கேட்டதால், குழந்தை பிரகலாதன் நாராயண பக்தனானன். இதில் இருந்து நாம் பேசுகின்ற, சிந்திக்கின்ற ,உணர்கின்ற வற்றினை கருவில் இருக்கும் குழந்தைக்கு  பதிவுசெய்யும்   சக்தி இருக்கிறது என்பது தெரிகிறது.

ஒரு குடும்பத்தின் வளர்ச்சி என்பது பிள்ளைகளின் வளர்ச்சியினை வைத்தே கணிக்கப்படுகிறது. அதற்கு ஆரோக்கியமான, விவேகமுள்ள பிள்ளைகள் உருவாக்கவேண்டும். அதற்கு கருவாக இருக்கும்போதே நல்ல சிந்தனைகள் அதில் பதிவுசெய்யப்படல் வேண்டும். அதற்கு பெண் சந்தோசமாக வாழும் வகை செய்யப்படல் வேண்டும். அதனாலேயே பெண்ணை சந்தோசமாக பாருங்கள் என்று கூறும் வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
மேலும், அப் பெண் சந்தோசமாக வாழ்ந்தால் ஆரோக்கியமான, விவேகமுள்ள பிள்ளைகள் பிறப்பதும் அக்குடும்பம் சிறப்பாக வாழ்வதுவும் , அதற்கு மாறாக வாழ்ந்தால் குடும்பம் வளர்ச்சி  கெடுவதுவும் அப்பெண்ணின் மன நிலையில் தங்கியுள்ளதையே ''ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'' என்று வந்திருக்கிறது. அதாவது ''பெண்ணை சந்தோசமாக வாழவிடுங்கள், இல்லாவிடில் உங்கள் வம்சம் தழைக்காது'' என ஆண்களையும், பெண்ணின் மாமன்,மாமியினையும் எச்சரிக்கும் பழமொழியாகவே  இது பிறந்திருக்கிறது.

👬👬👬👬👬👬👬 செ.மனுவேந்தன் 👬👬👬👬👬👬👬
0 comments:

Post a Comment