தாவணி கட்டிய....தாவணி கட்டிய பூவே நலமா?
தயங்காது செய்தி ஒன்று கூறடி.
உன்னருகில் ஒன்றாய் கூடி வாழ்ந்தும்,
தண்ணியும் தாமரையுமாய் பிரிந்து போகிறியே!
தங்க மனதையும் காட்டியே கிட்டவாடி,
தேன் மலரை கொண்ட தங்கமே!

அடுப்பு மூட்டி குளிர் காயப்போகிறியே
ஆசை மச்சான்  இனி வேண்டாம்
கலியாணம் கட்டிவைக்க ஆத்தா இருக்க
நீ எதற்கு இங்கே வந்தீங்க?

உந்தன் நலம் அறியவே வந்தேனே!
மலரான தங்கமே அத்தையின் செல்லமே!
எப்படி சொல்வேன் என்னென்று சொல்வேன்.
செய்தி அறிந்தாலே ஆத்தா கொல்லவந்திடுவா
உயிரும் துடிக்கிறதே ஆசை மச்சானே! 
ஓடி தான் போங்க மச்சானே!

அகிலன் ராஜ

0 comments:

Post a Comment