இமைக்காமல் காத்திருப்பேன்
நீயும் போடுகின்ற

காதல் துவானத்தில்

நித்தமும்

காதல் தேநீர் பருகி

இமைக்காத விழிகள்

விழித்து இருக்கின்றன!

இதமான உன் உதயம்

அனுதினமும் வந்துவிடவே,

எண்ணத்தால்

அழகான ஒளியான சுடரே!

என் உயிரான

உன்னையும் மறவாமல்

என்னையும் மறந்திருப்பேன்

உன்வருகை கண்டிடவே

எத்தனை பொழுதெல்லாம்

இமைக்காமல்  காத்திருப்பேன்!

🖉🖉🖉🖉அகிலன் ராஜா🖉🖉🖉🖉

0 comments:

Post a Comment