நயன்தாரா என்ற நடிகையிடம்...ஐயா திரையில்..
[Nayanthara]
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று...
கர்நாடக மாநிலம் பெங்களூரில்  நவம்பர் 18 ம் தேதி 1984 ம் வருடம் பிறந்தார்,நயன்தாராவின் பூர்வீகம் கேரளாவில் உள்ள திருவல்லா ஆகும்.   
இவரது இயற்பெயர் - டயானா மரியா குரியன் ஆகும்.இவர் ஒரு  தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.  2003-ம் ஆண்டு ''மனசினகாரே'' என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆகி முதல் தமிழ்த் திரையில் அசல் தமிழ் கிராமத்துப் பெண்ணாகவே  மாறியிருந்தார்.
. இவர் தமிழ் சினிமாவில் 2005களில் தொடங்கி இன்று வரை 60 தாவது படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அதேசமயம்  இதுவரையில் தென்னிந்திய பிரபல்யங்கள்  பலருடனும் 
''ஐரா''புதிய திரையில் ... 
நடித்துவிட்ட அவர்  7 மலையாளப் படத்திலும், 9 தெலுங்குப் படத்திலும் நடித்துள்ளார்.  
'ஐரா' என்ற புதிய திரைப்படத்தில் மிகவும் மாறுபட் ட வேடத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்..
தற்போது .ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதாலேயே பெண் சூப்பர் ஸ்டார் எனக் கருதப்படுகிறார். முன்னதாக இவர் கவர்ச்சித் தோற்றத்தில் நடித்தாலும் தற்போதெல்லாம் கவர்ச்சியை தவிர்த்து கதைக்குத் தேவையான தோற்றத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

தற்காலத்தில் புதுமுகங்களாக வரும் நடிகைகள் விரைவில் காணாமல் போவது வழமையாகி விட்ட போதிலும் , திரையுலகில் நிலைத்து நிற்கும் , நயன்தாராவில் , எந்த நடிகையிலும் இல்லாத எதோ ஒன்று இருப்பதனை அது என்ன என்று இரசிகர்கள் தான்கண்டுபிடிக்கவேண்டும்.

📸📸📸📸📸📸தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன் 📸📸📸📸📸

0 comments:

Post a Comment