
உலகிலேயே தற்காலத்தில் பிரதானமாக அனுசரிக்கப்படும் சமயங்களில் சைவ சமயத்தினர் மட்டுமே ஆண் தெய்வங்களுக்கு ஈடாகப் பெண் தெய்வங்களுக்கும் சமனான அல்லது கூடுதலான சக்தியைக் கொடுத்து அவர்களை வழிபட்டு வருகின்றார்கள்.
பழைய கிரேக்க கடவுளர்களில் பெரும்பாலும் பெண் தெய்வங்களே முதன்மையாக வணங்கப்பட்டனர். ஆனால், பிற்காலப் படையெடுப்புகளில் ஆண் வீரம் என்பது பிரதானப் படுத்தப் பட்டதனால், படிப்படியாக ஆண் தெய்வங்கள் சக்தியுள்ளவர்களாக மாற்றப்பட்டனர். இருப்பினும்,...