எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16

நாம் இதுவரை கூறியதில் இருந்து அறிந்து கொள்வது என்ன வென்றால், திராவிடருக்கு என தனியான எழுத்து முறை உண்டு. அவர்களே சிந்து வெளிக்கான எழுத்தை அறிமுகப் படுத்தியவர்கள். பின் அதை தென் இந்தியாவில் தொடர்ந்து பானை ஓடுகளிலும் மற்றும் நாணயங்களி லும் எழுதியுள்ளார்கள். உதாரணமாக, உருசிய அறிஞரான யூரி நோரோசோவ் [Yuri Knorozov], சிந்துவெளிக் குறியீடுகள் படவெழுத்து முறைக்கானவை என்றும், கணினிப் பகுப்பாய்வுகளின்படி, இதற்கு அடிப்படையான மொழி ஒட்டுநிலைத் திராவிட மொழியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கருத்து வெளியிட்டார். இவருடைய கருத்துக்கு முன்பே என்றி ஏராசு (Henry Heras) முதனிலைத் திராவிடமொழி [proto-Dravidian] என்ற எடுகோளின் அடிப்படையில் சில குறியீடுகளுக்கான தனது வாசிப்புக்களை வெளியிட்டிருந்தார். பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் ஆஸ்கோ பர்ப்போலாவும் [Asko Parpola], சிந்துவெளி எழுத்துக்களும், அரப்பா மொழியும் [Indus script and Harappan language] பெரும்பாலும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ததாகவே இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.1960கள் முதல் 1980கள் வரை இவரது தலைமையில் ஒரு பின்லாந்துக் குழுவினர் கணினிப் பகுப்பாய்வுகளின் மூலம் சிந்துவெளிக் குறியீடுகளை ஆய்வு செய்தனர். அரப்பா மொழி முதனிலைத் திராவிட மொழி என்ற எடுகோளின் அடிப்படையில் பல குறிகளுக்கான தமது வாசிப்பை அவர்கள் முன்வைத்தனர். இவர்களது சில வாசிப்புக்கள் ஏராசு, நோரோசோவ் [Heras and Knorozov] ஆகியோரது வாசிப்புக்களுடன் பொருந்தின ("மீன்" குறியீட்டைத் திராவிடச் சொல்லான "மீன்" என்னும் சொல்லாகவே வாசித்தமை), வேறு சில முரண்பட்டன. 1994 வரையான பர்ப்போலாவின் ஆய்வுகளின் விரிவான விளக்கங்கள் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்தறிதல் (Deciphering the Indus Script) என்னும் அவரது நூலில் தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அண்மையில், சிந்துவெளிக் குறியீடுகள் எனக் கருதப்படும் குறியீடுகளுடன் கூடிய புதியகற்காலக் (கி.மு 2ம் ஆயிரவாண்டுத் தொடக்கம். அரப்பாவின் வீழ்ச்சிக்கு முந்திய காலம்) கற்கோடரி ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டமை திராவிடமொழிக் கருதுகோளுக்கு வலிமை சேர்ப்பதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற ஆராய்ச்சி யாளர்கள் சமஸ்கிருதம், கி.மு 1500 க்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களுடனேயே கொண்டுவரப்பட்டதென்றும், கி.மு 2500 க்கு முற்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களோடு அதற்குத் தொடர்பு இருக்கமுடியாது என்றும் வாதிடுகிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகளையும் நிறுவி உள்ளனர். அத்துடன் ஆரியப் பண்பாட்டை விளக்குவதாகக் கருதப்படும் மிகப் பழைய நூலான ரிக் வேதம் நூறுவீதக் கிராமப் பண்பாட்டுக்குரியது என்றும் சிந்துவெளிப் பண்பாடு போன்ற நகரப் பண்பாடு ரிக் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆரியப் பண்பாட்டின் இன்னொரு அம்சமான குதிரை, சிந்துவெளி முத்திரைகளிற் சித்தரிக்கப்படாமையும் அவர்களுடைய சான்றுகளில் ஒன்றாகும்.

 புகழ்பெற்ற நாணயவியல் ஆய்வாளர் கே.ஜி. கிருஷ்ணன் அவர்கள் பெருவழுதி நாணயங்களில் உள்ள தமிழி எழுத்துப் பொறிப்புகள், அசோகர் காலத்துக்கு முந்தியவை என தெரிவிக்கிறார். அதே போல,டாக்டர் கிஃவ்ட் சிரோமணி [Dr.Gift Siromoney] என்பவர், 1983லேயே, 

1.] தமிழ் பிராமி, அசோகர் பிராமிக்கு முந்தியது 
2.] தமிழ் பிராமியில் இருந்துதான் அசோகர் பிராமி உருவானது, 

ஆகிய இரண்டு கருதுகோள்களை முன்வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. கி மு 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தென் இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட எழுத்துக்கள் இதை மேலும் ஆதரிக்கின்றன. அது மட்டும் அல்ல எழுத்தைப் பற்றிய குறிப்புகளையும் தொல்காப்பியத்தில் காணலாம். அதே போல திருக்குறள் ,சிலப்பதிகாரம் போன்றவையும் எழுத்தைப் பற்றி கூறுகின்றன. பனை ஓலை எழுத்தைப் பற்றிய குறிப்பு ஒன்றை  நாலடியாரிலும், நடுகல் எழுத்தைப் பற்றிய குறிப்பு ஒன்றை புறநானுறும் தருகின்றன. உதாரணமாக, நாலடியார் - 40.காம நுதலியலில் பாடல் 397 இல் தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவியின் துன்ப நிலையை கூறும் பொழுது:

"ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து."

என்று கூறுகிறது. அதாவது, ஓலையிலே எழுதும் கணக்கரின் ஓசை ஒழியும்படியான மாலை நேரத்தில், தலைவன் பிரிதலை நினைத்து, மாலையைக் கழற்றி, வீசியெறிந்து, அழகிய கொங்கைகளில் பூசப்பட்டிருந்த சந்தனக் குழம்பையும் உதிர்த்துத் தள்ளித் துன்புற்று அழுதாள் என்கிறது. இது சங்கம் மருவிய காலத்தில்,வள்ளுவர் காலத்தை அண்டியதும் ஆகும். 

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம்பிடித்த ஊர் ஆகும்.  2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக் கூடுகளும் மற்றும் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பல தாழிகளும்  இங்கு கண்டு எடுக்கப் பட்டுள்ளன. தாழியில் இருந்த எழுத்தை "‘கரி அரவ நாதன்"  [ `Ka ri a ra va [na] ta'] என்று படித்து
உள்ளனர். இது கி மு 500 ஆண்டை சேர்ந்ததாகும். ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழி தான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் [Front line] ஆங்கில இதழில் வெளிவந்தன. இதன் படம் இங்கு இணைக்கப் பட்டு உள்ளது.

பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி அவர்கள், அங்கு பிந்திய  ஹரப்பா தளங்களில் காணப்படும் கீறல் குறிகளை அதிகம் ஒத்த கீறல் குறிகளைக் கொண்ட பானை ஓடுகளும் உள்ளன என்கிறார்.  இந்த அகழாய்வுகள் தமிழ் நாகரிகமும் பிந்திய  ஹரப்பா நாகரிகமும் ஒன்றற்கு ஒன்று தொடர்பு டையன என்பதை நிறுவி உள்ளன. இந்திய நாகரிகத்தின் தொடக்கம் குறித்து சூழ்ந்துள்ள புதிர்மறைவுச் செய்தியின் மடிப்பை அவிழ்க்க இத் தளத்தில் மேலும் அகழாய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இது ஹரப்பா மற்றும் தமிழ் நாகரிகத்தை இணைக்க, அதற்கான கால்வாய்களைத் திறந்துவிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார். அப்படி அகல் ஆய்வு செய்யும் பட்ச்சத்தில், தமிழ் எழுத்துக் களின் ஆரம்பம்,தொடர்புகள், மற்றும் வளர்ச்சியைப் பற்றி மேலும் விபரமாக நாம் அறியலாம்? 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:17  தொடரும்

'Story or History of writing'/Part:16

Image result for indus valley script vs tamil brahmiRelated image










The Dravidians had their own tradition of writing. It would appear that they introduced writing to the Indus Valley.They continued to use this writing on their pottery in South India and later punch-marked coins. This is supported by the discovery of writing in South India dating back to before 600 BC. For example, The Russian scholar Yuri Knorozov suggested, based on computer analysis, the Dravidian language as the most likely candidate for the underlying language of the script. Knorozov's suggestion was preceded by the work of Henry Heras, who also suggested several readings of signs based on a proto-Dravidian assumption.The Finnish scholar Asko Parpola wrote that the Indus script and Harappan language "most likely belonged to the Dravidian family".Parpola led a Finnish team in the 1960s-80s that, like Knorozov's Soviet team worked towards investigating the inscriptions using computer analysis. Based on a proto-Dravidian assumption, the teams proposed readings of many signs. A lot of people agreed with the suggested readings of Heras and Knorozov, one such reading was legitimised when the Dravidian word for both 'fish' and 'star', "min" was hinted at through drawings of both the things together on Harappan seals. A comprehensive description of Parpola's work until 1994 is given in his book Deciphering the Indus Script. Iravatham Mahadevan, another historian who supports the Dravidian hypothesis, says, "we may hopefully find that the proto-Dravidian roots of the Harappan language and South Indian Dravidian languages are similar. According to Mahadevan, a stone celt discovered in Mayiladuthurai (Tamil Nadu) has the same markings as that of the symbols of the Indus script. The celt dates to early 2nd millennium BCE, post-dating Harappan decline. Mahadevan considers this as evidence of the same language being used by the neolithic people of south India and the late Harappans.

Image result for indus valley script vs tamil brahmi
References to writing are also available in early Tamil literature. Tolkappiyam in stanza 16 and 17 mentions dots added to consonants. The author of Tolkappiyam displays awareness of a writing system and the graphic system as he knew it corresponds with later writing systems. Other works such as Tirukkural mentions writing using the word ezhuttu. Cilappatikaram mentions kannezhuttu that was used to mark merchandise imported at the port emporium of Kaveripattinam, it also mentions kannezhuttalar or scribes. A reference to palm leaf manuscript writing is found in Nalatiyar and Purananuru mentions a hero stone that has the name of the hero etched in it. For example,In Naladiyar , chapter XL, under the heading of  "THE CHARACTERISTICS OF LOVE." , in poem 397, It says:

"When those who con the palm-leaf scrolls had ceased, in 
eve's dim twilight hour, she thought of her absent spouse ; 
and weeping plucked the flowers from out her wreath, and 
brushed the odorous sandal from her lovely breast ! "

Naladiyar belongs to the post Sangam period ,around the same period as Kural. Also,Based on the literature analysis, Kamil Zvelebil believes writing was known to Tamil people at least from the 3rd century BCE.

The picture of the urn with the rudimentary Tamil-Brahmi script, and a human skeleton and miniature pots at the Iron Age urn burial site at Adichanallur in Tamil Nadu is attached. here, The inset with the arrow mark depicts how the script has been written inside the urn.It Might date back to 500 B.C. The script found at Adichanallur could be the name of the hero whose skeleton is in the urn. It may be tentatively read as, `Ka ri a ra va [na] ta'.However, The reading is subject to improvement. Gurumurthy found, like Lal before  him, that the graffiti on South Indian pottery was engraved with Harappan signs.This further supports the view that continuity existed between  Harappan writing and Brahmi–Tamili writing discovered in South India. The recent discovery of a Tamil–Brahmi inscription at Adichanallur is  interesting  because the site is  dated between 1500 and 500 BC by  thermo-luminescence .So the script is also likely to be dated to 5th century B.C. even if we take the latest date into consideration.

[Kandiah Thillaivinayagalingam]

Part:17 will follow

காணாமல் போனவர்கள்


Ø  பள்ளிப் பருவ மதில்
அள்ளியே புத்தகங்களை
அணைத்தே கையினில்
 நனைந்தே வெய்யினில்
நடையாகச் செல்கையில்
நண்பனானவன் ஒருவன் .

Ø  மாலை வேளைகளில்
சாலை ஓரங்களில்
கிட்டிப் பொல்லடித்து
முட்டி விளையாடுகையில்
இளநீர் குடித்து இனிய
நண்பனானவன் ஒருவன்


Ø  காளைக்   காலமதில்
வேளைக்கொரு வீதியில்
வண்டியை மிதிக்கையில்
அண்டிப் பழகியதில்
எண்ணங்களைப் பகிர்ந்தே
நண்பனானவன் ஒருவன்.


Ø  ஆலை இல்லை ஊரும் பாழ்
வேலை இல்லா ஆணும் வீண்என
புத்திகள் கூறிப் பக்தியுடனே
உத்தியோகமதில் உழைத்திடவே
உண்மை யுணர்வில் உதவி செய்தே
நண்பனானவன் ஒருவன்.

Ø  புலம் பெயர்ந்து வந்த வேளை
குலத்துடன் கூடி இருந்து
காலம் கடந்த காலத்தில்
புதிய நாட்டின் புதினங்களை
புரிய வைத்த பண்பாளனாய்
நண்பனானவன் ஒருவன்.

Ø  சுழன்று ஓடும் நாட்களில்
வாழ்ந்து கடந்த பயணங்களில்
குலைந்து போன கனவுகளாய்
தொலைந்து போன நண்பர்களை
ரெயில் சிநேகிதர் என்றே 
மையில் எழுதி வைத்தேன்.
                                                   ----------------செ.மனுவேந்தன்.

கடவுள் - புத்தர்-:சிந்தனை

ஒருநாள் காலையில், கௌதம புத்தரிடம் ஒருவர் வந்து கேடடார், "கடவுள் இருக்கின்றாரா?" என்று. அவர் சொன்னார் "இல்லை" என்று.

அதேநாள் பகல் இன்னொருவர் வந்து  "கடவுள் இருக்கின்றாரா?" என்று கேட்க, அவர் சொன்னார் "ஆம்" என்று.

மீண்டும் மாலையில் வேறு ஒருவர் அதே மாதிரி  "கடவுள் இருக்கின்றாரா?" என்று கேட்க, புத்தர் மௌனமாக , ஒன்றும் பேசாது, கண்களை மூடி இருந்தார்.

அவருடைய பிரதம சீடருக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்தப் பெரிய மஹான் ஒன்றுக்கொன்று முரணாகப்  பேசுகின்றாரே என்று கலக்கத்தில் அவரிடம் " என்ன இன்று உங்களுக்கு நடந்தது? என்ன களைப்பு மிகுதியா? அதற்கான விளக்கம் கூறாது விட்டால் எனக்கு இன்று தூக்கமே வராது" என்று கேடடார்.
அதற்குப் புத்தர் புன்முறுவலுடன் சொன்னார்:

அப்பதில்கள் எல்லாம் அவர்களுக்குச் சொல்லப்படடாதே ஒழிய உமக்காக அல்ல. கேள்வி ஒன்றுதான் என்றாலும் அது கேள்வி கேட்பவர் தன்மை, சந்தர்ப்பம் என்பவற்றால் பதில்கள் வேறுபடலாம்.

முதலில் வந்தவர் ஓர் ஆஸ்திகர்; கடவுள் உண்டு என்று கண்மூடித்தனமாக நம்புபவர். அவர் தன்னுடைய நம்பிக்கைக்கு வலுவூட்டுவதற்காக என்னையும் தன்னோடு இழுக்கப் பார்க்கின்றார்யாரோ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்  என்று, பயம் நிமித்தம் ஒன்றை நம்பிக்கொண்டு இருப்பவர்கள், இருட்டுக்குள்ளேயே இருப்பதால் உண்மையை ஆராய்ந்து அறிய முனைய மாடடார்அவரின் நம்பிக்கையை உடைத்து, சிதைக்கவே அப்படிச் சொன்னேன். என் பதிலுக்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அப்படியான பதிலே அவருக்கு அப்போது தேவைப்பட்டது. இப்போது அவர் சிந்தித்து ஒரு தெளிவுக்கு வந்ததும் திரும்பவும் வருவார்.

அப்படியானால் இரண்டாவது நபர்?

அவர் ஒரு நாஸ்திகர்; கடவுள் இல்லவே இல்லை என்ற நம்பிக்கையில் வலு திடமாக உள்ளவர். அவரும் தன் தனக்கு ஆதரவு தேடித்தான் என்னிடம் வந்தார். முதலாமவர் போலவே இவரும் ஒன்றை, தானாக  முற்றாக ஆராய முனையாமல் முட்டாள்தனமாக நம்புகிறார். மற்றையோர் சொல்வதை நம்புவதிலும் பார்க்க தாங்களே உணர்ந்து அனுபவம் பெறுவதே மேன்மையானது. அதற்காகவே அவரின் நம்பிக்கையையும் நொறுக்க நினைத்துப் பதில் கூறினேன்.

என்றால் அந்த மூன்றாம் நபர்?

அவர் ஆஸ்திகரும் அல்ல; நாஸ்திகரும் அல்ல. அவர் என்னிடம் இருந்து 'ஆம்' என்றோ 'இல்லை' என்றோ பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர் இதய சுத்தி உள்ள ஓர் அப்பாவி. எவருடைய போதனைகளாலும் ஈர்க்கப்படுத்தப் படாதவர்அவர் ஒரு விசாரித்து அறியும் ஆர்வத்தில்தான் கேட்டார்நான் அவருக்கு இட்ட  பதில் "கண்கள் மூடியபடி அமைதியான மௌனம்". எனது பதில் விளங்கி, பிரகாசமான புத்துணர்ச்சியுடன், தன் கண்களையும் மூடி அமைதியுடன் இருந்ததில் இருந்து, எனது பதில் அவருக்கு விளங்கிவிட்டது என்பது புலனாயிற்று.

உணமையைத் தேடுபவர்களுக்கு வாய் மொழியில் பதில் தேவை இல்லை.குருவின் இதயத்தில் இருந்து இதயத்திலும், ஆத்மாவில் இருந்து ஆத்மாவுக்கும், ஆழ ஊடுருவிச் சென்று அவரை விழித்தெழச் செய்யும்.

புத்தர், கடவுள் கொள்கை ஓர் அவசியம் அற்றது என்று கண்டார்பழைய மனிதன் இயற்கை அழிவின் பயம் நிமித்தம், தங்களை காப்பாற்றுவதற்காக கடவுளை உண்டாக்கினான். பின்னர் பல கடவுள்களும், சமயங்களும் வந்தும், மனிதனுக்கு அந்தக் கடவுள்களால் எந்த ஒரு நன்மையும் கிடைத்ததற்கு சான்றுகள் ஒன்றும் இல்லை என்றும் கண்டார். மேலும், கடவுள்தான் செய்தார் என்ற சொல்லப்படட பல விடயங்களை மனிதனாலேயே செய்ய முடியும் என்றும் கூறி வைத்தார்.

புத்தரின் போதனையின் படி, கடவுள் என்று ஒருவர் தேவை இல்லை. ஒவ்வொரு மனிதனும் மனதைத் தூய்மைப்படுத்தி, உயிர்களிடத்து அன்பையும், இரக்கத்தையும் காட்டி, பூரண புரிந்துணர்வுடன், (சொர்க்கம் போவது பற்றிக் கனவு காணாது) இதய சுத்தியோடுசுய புரிதலுடன் சேவை செய்வதே நிம்மதியான, சந்தோசமான வாழ்வை அளிக்கும்.
"புத்தம் சரணம் கச்சாமி"


-'ஓஷோ' வில் தழுவி தொகுத்தவர்: செல்வதுரை சந்திரகாசன்.