விந்தையான விடயங்கள்-13


மனிதனின் மூளை விழித்திருக்கும் நேரத்தைவிட தூங்கும் போது அதிக ஆற்றலுடன் செயல்படுகிறதாம். இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம் !


உங்கள் ஐக்யூ எனப்படும் அறிவாற்றல் அதிகம் இருந்தால் நீங்கள் அதிகமாக கனவு காண்பீர்களாம் !
 
முகத்தில் வளரும் புருவம், தாடி, மீசை போன்ற முடி உடலின் மற்ற பாகங்களில் வளரும் முடிகளை விட வேகமாக வளர்கிறது.

கைவிரல்களில் நடுவிரலில் வளரும் நகம் மற்ற விரல்களில் வளரும் நகங்களை விட வேகமாக வளரும்.

கால் விரல் நகங்களை விட கைவிரல்களில் வளரும் நகங்கள் நான்கு மடங்கு வேகமாக வளர்கின்றன.
மனித முடியின் ஆயுட்காலம் மூன்றிலிருந்து ஆறு ஆண்டுகள்.
நம் வயிற்றில் ஊறும் ஜீரண அமிலம் ஒரு துத்தநாக துண்டையும் கரைக்க வல்லது. ஆனால் இவை இரைப்பையின் சுவர்களை ஒன்றும் செய்வதில்லை. காரணம், அச்சுவர்கள் இடைவிடாமல் புதுப்பித்துக்கொண்டே இருப்பதுதான்.

பெண்களின் இருதயம் ஆண்களுடைய இருதயத்தை விட வேகமாக துடிக்கும்.

ஆண்களைப்போல் இரு மடங்கு கண்களை சிமிட்டுகிறார்கள் பெண்கள். 
ஆண்களை விட பெண்களுக்கு மோப்ப சக்தி அதிகம். இது அது அவர்களின் வாழ்நாள் முழுக்க தொடர்கிறது.


0 comments:

Post a Comment