“நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க”

 



நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க

நாட்டுப்புறம் வந்து பாருங்க நண்பா

நறுமணம் வீசும் பச்சை நிலம் தான் நம்பா!

நாலா பக்கமும் ஆடல் வைக்கும் வயல்கள்,

நம்ப மனசை நிறைக்கும் அன்னையின் தாய்கள்!

 

நாவூறச் சாதமும் குழம்பும் நெத்திலி,

நெஞ்சு நிமிர்க்கும் காற்றில் நெல் மணம் மொத்திலி!

நாணிக் கோணும் விறலியோடு,

நல்ல சிரிப்பு நெஞ்சை ஊடும்!

 

கற்றாழை முள்ளும் காலில் குத்தும்,

கருவாட்டு குழம்பு மூக்கை இழுக்கும்!

கள்ளம் இல்லா வெள்ளந்தி மக்கள்,

கருப்பு சாமியோடே புனித நெஞ்சுகள்!

 

விற கொடிக்கப் காட்டுக்கும் போவாள்,

விதைப்புக் காலத்தில் மண்ணையும் கிளறுவாள்!

விரிச்ச நெற்றிவெயிலில் சுடர்வாள்,

வித்தை காட்டும் குறும்பு பொண்ணு அவ்வாள்!

 

கிராமம் முழுதும் பண்பாடு பேசும்,

கிணற்றுநீரில் ஒற்றுமை நேசம்!

கிளுகிளு தரும் தண்ணீர் குடங்கள்,

கிண்கிணி இசைக்கும் உலக்கை நாதங்கள்!

 

மண் மணத்தோடு கலந்த உயிர்கள்,

மரபின் வழி வாழும் நெஞ்சங்கள்!

விழாவும் சிரிப்பும் ஓர் விருந்து,

இது நம் நாட்டுப்புறம்தமிழின் முத்து! 

🔲🔲🔲🔲🔲

 

"அன்பே ஆரமுதே"

 

"அன்பே ஆரமுதே கரும்பே தேனே

இன்பம் பொழியும் அழகு தேவதையே

துன்பம் போக்கும் கருணை மாதே

இன்னும் ஏன் தயக்கம் உனக்கு?" 

 

"மாசறு பொன்னே வலம்புரி முத்தே

பாசம் கொட்டும் பெருங்குடி மகளே

வாசம் வீசும் கூந்தல் அழகியே 

நேசம் கொண்டு அருகில் வருவாயோ?"

 

"காதல் என்பது காமம் அல்ல

மோதல் பிறக்கும் இடமும் அன்று

சாதல் எம்மை அணுகும் வரை

இதயம் சேரும் ஒற்றுமை நட்பே!"

 

"உணர்வு ஒன்றி இருவரும் கலந்து

உள்ளம் நாடும் இனிய உறவில்

உணர்ச்சி தவிர்த்து நிலை அறிந்து

உண்மை வாழும் இருவரின் பற்றே!"

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment