பண் ஒளி -2017


பண் கலை பண்பாட்டுக் கழகம் -sent /02

18-03-2017- அன்று இடம்பெற்ற தமிழ் சொல்வதெழுதல் போட்டி முடிவுகள்

GRADE;  JK/SK
முதலாவது இடம் :   அஞ்ஜனி வைகுந்தன் [Anjani, Vaikunthan]  
இரண்டாவது  இடம் :ஓவியா, பாலசிங்கம் [Oviya Balasingam]        
மூன்றாவது   இடம்:   கிஷானன்  நந்தகுமார் [Kishanan Nanthakumar] 
நான்காவது இடம்திசாந் , தீபவதனன் [Thisan Theepavathanan]  

GRADE: ONE
 முதலாவது இடம் :   தனிஸ்கா ,குகன் [Thaniska Kugan]                 
  இரண்டாவது  இடம் :பிரித்திகா,புலேந்திரன்.Prithiga Pulenthiran       

GRADE:  TWO
முதலாவது இடம் :கிஷோன் , தயாளரூபன் [Kishoen Thayalarupan]  
முதலாவது இடம் :கிருஷ்ணிகா, சர்வானந்தன் [Girishniga Charvananthan ] 
 இரண்டாவது  இடம் : னிஸ்கா , தீபவதனன் [Taniskga Theepavathanan ]  
    மூன்றாவது   இடம்:விஷ்ணு, ரட்ணசிங்கம் [Vishnu Ratnasingam]               
     நான்காவது இடம்:சாகித்யன், நந்தகுமார், [Shakityan Nanthakumar]          

GRADE;  THREE
 முதலாவது இடம் : பிரித்திகா வினோதரூபன் [Prithikga Vinotharuban]        
 இரண்டாவது  இடம் : ஆதித்யா ,பாலசிங்கம் [ Adithya Balasingam ]                  
மூன்றாவது   இடம்:   கிரிஷாந்த் ,தர்மகோபாலன் [Krishanth TharmagopalaN]      

GRADE;  FOUR
 முதலாவது இடம் : சகிஸ்ஜன், சர்வானந்தன் [ Chakishjan Charvananthan ]   
 இரண்டாவது  இடம் :   பாகிசன், சிவநேசன் [Pahisan Sivanesan ]                      
 மூன்றாவது   இடம்: பிரணவி ,தர்மகோபாலன் [Biranavy Tharmagopalan]             

GRADE:  FIVE
முதலாவது இடம் : ஆரூஷன்,கேதீஸ்வரன்.[Aroushan Ketheeswaran]             

GRADE:  SIX
  முதலாவது இடம் :   அபி,ரவி.[Abi Ravi]                                      
   இரண்டாவது  இடம் கயானன், கிருபைநாதன்.[Kajanan Kirubainathan]               
   இரண்டாவது  இடம் :   திவ்ஜன் ,விமலரூபன்.[Thivjan Vimalaruban ]             
 இரண்டாவது  இடம் : அனோஜ் ,நடேசன்.[Anoj Nadesan]                                 

GRADE:  SEVEN
   முதலாவது இடம் :கோபிஷன்,வினோதரூபன் [Kobisan Vinotharupan]         
 இரண்டாவது  இடம் : சானுஜன்,சர்வானந்தன் [Chanujan Charvananthan ]       
 மூன்றாவது   இடம்:கீர்த்தன், வைகுந்தன்  [ Kheirthan Vaigunthan ]       
நான்காவது இடம்:   கஜாயினி,சண்முகம் [Kajayiny Shanmugam ]                    
  ஐந்தாவது இடம்சுவேதா,புலேந்திரன்.[Swetha Pulenthiran]                      

GRADE:  EIGHT
 முதலாவது இடம் : சங்கீத், ஞானேஸ்வரன்[ Sankeeth Gnaneswaran]                  
இரண்டாவது  இடம்யுவராம்,கேதீஸ்வரன்.[ Juvaram Ketheeswaram]       

பங்குபற்றிய சிறுவர்களுக்கும்,அவர்களை ஊக்குவித்து அழைத்து வந்த பெற்றோருக்கும் கழகம் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.
சொல்வதெழுதல் போட்டி11-12-2017 திங்கள்  அனுப்பினேன் 
  ------------------------------------------------------------------------------------- 
   

29-10-2017 அன்று இடம்பெற்ற தமிழ்பேச்சுப்போட்டி  முடிவுகள்-  sent/03


இள மழலைகள் பிரிவு- தலைப்பு: ''அம்மா'' 

முதலாவது இடம் :  அகிசா , குலதீஸ்வரன்.[ Agisha  Kulathesvaran ] 

இரண்டாவது  இடம் : ஓவியா . பாலசிங்கம். [ Oviya  Palasingam ]
மூன்றாவது   இடம்: கிஷானன் , நந்தகுமார்.[ Kishanan  Nanthakumar ]
நான்காவது இடம்: ரமேஸன் , சிவநேசன்  [.Ramesan  Sivanesan ]
ஐந்தாவது இடம்: யாஸ்வின் , தயாளரூபன். [ Yasvin  Thayalaruban ]

முது மழலைகள் பிரிவு- தலைப்பு: ''சைவசமயம்''


முதலாவது இடம் :  கிஷோன் , தயாளரூபன். [ Kishoen   Thayalaruban ]

இரண்டாவது  இடம் : கிறிஸ்னிகா , சர்வானந்தன் . [ Krishnika Sarvananthan]
மூன்றாவது   இடம்:  சாகித்தியன் , நந்தகுமார்.[ Sakithyan Nanthakumar ]
நான்காவது இடம்:  கனிஸ்திகா , சுபேந்திரன். [ Kanisthiga  Supenthiran ]

மத்திய பிரிவு- தலைப்பு-''திருவள்ளுவர்''


முதலாவது இடம் : பிரித்திகா , வினோதரூபன்.[ Priththika  Vinotharuban ]

இரண்டாவது  இடம் : ஆதித்யா , பாலசிங்கம். [Adithya  Palasinkam ]
மூன்றாவது   இடம்: கபிஸ்ணன் , கிருஷ்ணகுமார்.[ Kapishnan  Krishnakumar ]

மேற் பிரிவு- தலைப்பு- ''தைத்திருநாள்''


முதலாவது இடம் : துவாரகா ,பாஸ்கரன். [ Thuvaraka  Baskaran ]

இரண்டாவது  இடம் : சகிஸ்ஜன் , சர்வானந்தன்.[ Sakisyan Sarvananthan ]
மூன்றாவது   இடம்: டஸ்மிகா , குலதீஸ்வரன். [Dashmiga  kulathesvaran ]
மூன்றாவது   இடம்: பகிசன் , சிவனேசன். [Bakisan  Sivanesan ]


அதிமேற் பிரிவு- தலைப்பு- ''கனடா ''


முதலாவது இடம் :  கோபிஷன் , வினோதரூபன் .[ Kobishan Vintharuban ]

இரண்டாவது  இடம் : சபீசன் , பாஸ்கரன்.[ Sabeesan  Bashkaran ]
இரண்டாவது  இடம் ; கஜாயினி , சண்முகம். [Kajayini  Shanmugam ]
மூன்றாவது   இடம்: அபி, ரவி.[ Abi  Ravi ]
நான்காவது இடம்:கயானன் , கிருபைநாதன். [Kayanan Kirupainathan ]

கலந்துகொண்ட சிறுவர்களுக்கும், ஊக்கம் கொடுத்த பெற்றோர்களுக்கும் கழகம் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் நடுவர்களாக பங்குபற்றி சிறுவர் திறனை மதிப்பீடு செய்து உதவிய தமிழ்- கலைக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நன்றியினையும் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.

-நிர்வாகம்.  
 தமிழ்பேச்சுப்போட்டி  முடிவுகள்-செவ்வாய் 12-12-2017இல் அனுப்பியது. 
--------------------------------------------------------------------------------------
14-12 மாலை 9மணிக்கு அனுப்பினேன்sent/4
10-12-2017 அன்று இடம்பெற்ற ஆங்கில சொற்கள்- எழுத்துக் கூறல் போட்டியில் முதலாவது,இரண்டாவது,மூன்றாவது இடத்தினை பெற்ற   சிறுவர்களும் பங்குபற்றிய ஏனைய  சிறுவர்களும்..

பிரிவு- Jk+Sk

 1]ஓவியா  பாலசிங்கம் [ Oviya  Palasingam ]
2]அஷ்விகன் கிருபாகரன் [ ashvigan kirubakaran  ]
3]ஜாஸ்வின்  தயாளரூபன் [Yasvin  Thayalaruban ]
4]கிருஷ்ணவி  தர்மகோபாலன் [ krishnavy tharmagobalan]
5]அகிசா குலதீஸ்வரன் [Agisha  Kulathesvaran ] 
6]அனாமிகா கிருஷ்ணராசா [ anamiga  krishnarajah ]
7]றமேசன்  சிவனேசன் [.Ramesan  Sivanesan ]

பிரிவு- Grade- 01+02

1] அபிரன்  றதீஸ்குமார் [ Abiran  Rathishkumar ]
2] பிரித்திகா புலேந்திரன் [ Prithika Pulenthiran ]
3] கிசானன் நந்தகுமார் [ Kisanan  Nanthakumar ]
4] தரணிகா  கஜன் [tharaniga   kajan ]
5] பர்மிகா  கிருஷ்ணராஜா [Barmiga Krishnarajah ]
6]  கிறிஸிகா  கிருஷ்ணகுமார்  [ kirisiga  krishnakumar ]
7]  திசா  உமாபதிசிவம்  [ Thisa  umapathisivam ]
8]  சஜீன்  செல்வச்சந்திரன் [ sajin  Selvachchanthiran ]
9] திசாந்த்  தீபவதனன் [ Thisanth  Thebavathanan ]
10] சானுஜா  சுதாகரன் [ Sajusa  Suthakaran ]
11] தனிஸ்கா  குகன்  [ Thaniska  Kugan ]
12] றக்சனா  ரதீஸன் [ raksana  Tathisan ]

பிரிவு- Grade- 03+04
1] ஆதித்யா  பாலசிங்கம்  [Adithya  Palasinkam ]
2] பிரித்திகா வினோதரூபன் .[ Priththika  Vinotharuban ]
3] கிஷோன்  தயாள ரூபன்  [ Kishoen   Thayalaruban ]
4] அஸ்வின்  சுகிந்திரன் [Ashvin sukiinthiran]
5] கிரிசாந்த்  தர்மகோபாலன் [kirisanth tharmagopalan]
6] டிலக்சன்  ஜெயக்குமார் [Delukshan Jeyakumar]
7]  கிரிஷ்ணிகா சர்வானந்தன்  [ Krishnika Sarvananthan]
8] ரனிஸ்கா  தீபவதனன் [ranishga thepavathanan]
9] சாகித்தியன்  நந்தகுமார் [sakithiyan nanthakumar]
10] அதீதன்  ரசனிகாந்தன் [Athithan rasaniganthan]

11] கபிஸ்ணன்  கிருஷ்ணகுமார் [kabishnan kirushnakumar]

பிரிவு- Grade- 05+06

1] மதுசன்  செல்வரத்தினம் [ mathusan selvarathinam]
2] பிரணவி   தர்மகோபாலன் [Piranavi Tharmagobalan]
3] வர்சிகா குணபாலன் [varsiga gunapaalan]
4] டஸ்மிகா  குலதீஸ்வரன் [Dashmiga gulathishvaran]
5] பகிசன்  சிவனேஸ்வரன் [pakisan sivanaswaran]
6] யதுஷன்  முகுந்தன் [Yuthushan Mugunthan]
7] துவாரகா   பாஸ்கரன் [Thuvaraga Baskaran]
8] செனுஜா  செல்வச்சந்திரன் [Senuja Selvasanthiran]
9]  டிலக்சனா ஜெயக்குமார் [Delukshana Jeyakumar]
10] அனோஜன் செல்வரத்தினம் [Anojan Selvarathinam]
11] சகிஸ்யன்   சர்வானந்தன் [Sakishyan Sarvananthan]
12] சந்துசன்   சுகந்தன் [Santhusan Sukanthan]
13 அபிசன் ரதீஸ்குமார் [Apisan rathishkumar]

பிரிவு- Grade- 07+08

1] கோபிஷன்  வினோதருபன் [ Kobishan Vintharuban ]
2] அனோஜ்  நடேசன்  [ Anoj  Nadesan ]
3] கஜாயினி சண்முகம்  [Kajayini  Shanmugam ]
4] ரிசிபன்  சிவனேஸ்வரன் [Tisiban Sivanesvaran]
5] தாரகன் கஜன்  [Tharagan Kajan ]
6] சாருகன் முகுந்தன் [Sarugan  Mukunthan ]
7] சபீசன்  பாஸ்கரன்  [Sabisan  Baskaran ]
8] அபி ரவி  [ abi Ravi]
9] சுருதிகா  குணபாலன் [ Suruthiga  Kunabalan ]
10] அபிரா ரதீஸ்குமார் [Abira  Rathiskumar ] 
11]சுவேதா புலேந்திரன் [ Swetha  Pulenthiran ]
12] கஜானன் கிருபைநாதன்  [Kajanan kirupainathan ]

போட்டியில்கலந்துகொண்ட சிறுவர்களுக்கும், ஊக்கம் கொடுத்த பெற்றோர்களுக்கும் கழகம் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் நடுவர்களாக பங்குபற்றி சிறுவர் திறனை மதிப்பீடு செய்து உதவிய உயர்கல்லூரி மாணவர்களாகிய 
1    1.    அபிதாரணி  நடேசன் [Abitharani  Nadesan]
2.     ஆரணிசா  நடேசன் [Aranisa  nadesan]
3.     பானுசா  சிவபாதம் [Banusha  sivapatham]
4.     தானியா சிவகுமார் Dhaniya  Sivakumar
5.    ஹனிஷா   சிவகுமார் [Hanisha  Sivakumar]
8.     லயானா  கிருபைநாதன் [Layana  kirubainathan]
9.    சாரங்கி   சிவனேஸ்வரன் [Sharanke  sivaneswaran]
10.   சிந்துசன் சண்முகம் Sindushan  Sanmugam
                      
அவர்களுக்கும்நன்றியினையும் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.
-நிர்வாகம்.  
14-12 மாலை 9மணிக்கு அனுப்பினேன்sent 
                                                                                                       
14-12 அன்று காலை அனுப்பினேன் 
பண் கலை பண்பாட்டுக் கழகத் தலைவரிடமிருந்து.....:

பண்  கலை பண்பாட்டுக் கழகத்தின் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடலில் அதுவும் 30 ஆண்டு நிறைவு விழாவில்  எம் கழகத்தின் பொறுப்பு மிகு பணியூடாக  உங்களைக் கழகத்தின் பண்ஒளி ஆண்டு  மலரினுடாகச்  சந்திப்பதில் பெருமையும்,மகிழ்ச்சியும் அடைகிறோம்.


 சொந்த நாட்டிலே,சொந்த ஊரிலே,சொந்த வீட்டிலே சொந்தங்களோடு விளையாடியும், கூத்தாடியும், கும்மாளம்அடித்தும் வளர்ந்த நாங்கள் ,உள்ளூர் யுத்தம் எம்மை பந்தாடி பல் புலமெலாம் பெயரச்செய்த வேளை அந்நிய நாட்டிலே, அந்நிய ஊரிலே,அந்நிய குடியிருப்புகளில் அந்நிய கலாச்சாரத்துக்குள் சிக்கி நாம் அழிந்துவிடுவோமோ என பீதி கொண்ட வேளையில் கனடிய பல்கலாச்சார நாடு எமை வாரியணைத்துக் கொண்டது.

சொந்த நாட்டில் காண முடியாத சுத்தந்திரக் காற்றை கனடிய மண்ணில் சுவாசிக்கவும்,பயனடையவும் எமது ஊரின் ஆரம்ப உறுப்பினர்களினால் இற்றைக்கு 30 வருடங்களிற்கு முன்னர் நத்தார் விடுமுறையில் ஆரம்பிக்கபடாதே எமது பண்   கலை பண்பாட்டுக் கழகம்.
தனிமனிதர்களாக ஒவ்வொருவரும் ஏழு நாட்களும் இரவுபகல் பாராது இயந்திரமாக உழைத்த காலமது. என்னடா  இது வாழ்க்கை என அலுத்துக்கொண்ட எமக்கு இக்குளிர்கால ஒன்றுகூடல் பெருமருந்தாக அமைந்தது.
மீண்டும் கூடினோம்.கூத்தாடினோம்.கும்மாளம் அடித்தோம்.மெல்ல ,மெல்ல ஒவ்வொருவரும் குடும்பஸ்தராக மாறியபோது  எமது சமய மலர்ச்சியினை நோக்காகக் கொண்டு சரஸ்வதி பூசை காலத்தில் எமது சிறுவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்வாக 1994 ம் ஆண்டு கழகத்தினால் வாணிவிழா களை கட் ட ஆரம்பித்தது.
தொடர்ந்து 1995 ம் ஆண்டிலிருந்து  பேச்சுப்போட்டி, விளையாட்டுப்போட்டி,கோடைகால ஒன்றுகூடல் எனக் களம்  கொண்ட எமது கழகம், 2000  ம் ஆண்டிலிருந்து spelling-bee, தமிழ் சொல்வதெழுதல் போட்டிகளை ஆரம்பித்து பரிணாமவளர்ச்சி கண்டது.
மேலும், பிறக்கும்  புத்தாண்டுலிருந்து எமது சிறுவர்களுக்கான தமிழ் வாசிப்புப் போட்டியினை நடாத்துவதற்கு கழகம் ஆராய்ந்து வருகிறது.
நாம் இதுபோன்று பல திட் டங்களை முன்னெடுப்பதற்கு உங்கள் ஆதரவை நாடி நிற்பது தனி ஒரு மனிதனின் வளர்ச்சிக்காக அல்ல. நீங்கள் கழக நிகழ்வுகளில் கலந்து உங்களினதும் பிள்ளைகளினதும் எதிர்கால நன்மைகளுக்கு நீரூற்றிகழகசெயற்பாடுகளை வளர வழி செய்யவேண்டியது எமது ஊர் உறுப்பினர் ஒவ்வொருவரினதும்  கடமை.காலத்தின் கட்டாயமும்  கூட.இப்படியாக ஒவ்வொரு இனத்தினதும் சொந்த பண்பாட்டு நிகழ்வுகளே நல்லதொரு கனடிய சமுதாயத்தினை உருவாக்கும் என உணர்ந்தாலே கனடிய அரசு இந்நிகழ்வுகளை செயற்படுத்த ஆக்கமும்,ஊக்கமும் அளித்தது வருகிறது. எனவே எமது உறவுகள் அனைவரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு  ஒவ்வொரு எம் ஊரவர் களும் முயற்சி செய்யவேண்டும்.  கூடி  வாழ்ந்தாலே நாம் பல நன்மைகளை அடைய முடியும். அதற்கு எமது ஊர்களின் அனைத்து உறவுகளின் ஆதவினையும் வேண்டி நிற்கிறோம்.
நன்றி.
வணக்கம்.sent

பண் கலை பண்பாட்டுக் கழகப்  பொருளாளர் அறிக்கை :

2017 ஆம்  ஆண்டின் இறுதியில் பண் கலை பண்பாட்டுக் கழகம் 30 வருடத்தினை தொட்டுவிட் ட 
பூரிப்புடன் கழகத்தின் பொருளாளர்ராக உங்களை ஆண்டு மலரினுடாக சந்திப்பதில் பெருமிதம் அடைகிறேன்.

கழக நிர்வாகத்தில் இவ்வாண்டு எனது நுழைவு நீண்ட ஒரு இடைவெளியின் பின் புதிது என்றாலும் பல வருடங்களாக கண்டு வந்த  அனுபவங்களும், கூடிவந்த ஒத்துழைப்புக்களும் கழகத்தின் அத்தனை செயற்பாடுகளும் செவ்வனே நிகழ ஏதுவாயிற்று எனக் கருதுகிறேன்.
ஒரு பொருளாளராக நோக்குகையில் கனடிய மண்ணில் கால்  பதித்தகாலத்திற்கும் இன்றயகாலத்திற்கும் இடையில் கிட் டத் தட் ட 25 வருட காலம் பொருட்களின் பலமடங்கு விலையேற்றத்தின்  மத்தியிலும் ,ஏனைய ஊர் அமைப்புகளின் செயற்பாடுகளில் இருந்து வேறுபட்டு இலவச அனுமதியுடன் ஊர் உறவுகள் அனைவரையும் அங்கத்தவர்களாக ஏற்றுக்கொண்டு கொண்டு எமது கழகம் மட்டும்  இயங்குவது என்பது ஆச்சரியமான விடயமே!
பல நூற்றுக்கனக்கான எமது உறவுகள் குடும்பங்களாக கனடிய மண்ணில் வாழ்ந்திருந்தாலும் எமது ஒன்றுகூடல்களுக்கு 100 குடும்பங்கள் கூட சமூகம் கொடுக்காத நிலைமை ஊர் நோக்கிய எமது பணி பரந்து விட     தடைக்கல்லாக இருப்பது அனைவரும் அறிந்ததே.          கோவில் தேர் வடத்திற்கு கை கொடாது  தூரத்தில் நின்றுகொண்டு தேர் ஓடுதில்லை என்று கூக்குரலிடுவதில் எவ்வித பயனுமன்று .
கூடிடுவோம்,தேடிடுவோம் எமக்கென்று ஒரு முகவரி .      



may 21 panculture dinner night 
.............................................................

ஊரிலே முதல் வாத்தியார்.....
அமரர் சின்னக்குட்டி செல்லத்துரை ஆசிரியர் அவர்கள் 

இலங்கை வட மாகாணத்தின் வலிமேற்கில் பண்டத்தரிப்பு கோவில்பற்றில் முத்துமாரி அம்மன் கோவிலை நடுவணா கக்கொண்ட ஒரு குக்கிராமமே பணிப்புலம் ஆகும்.

அக்கிராமத்தில் சிவமதப் பற்றாளர்களே செறிந்து வாழ்ந்தனர்.
அவர்களுள் சபாபதி இலக்சுமி தம்பதியரில் சபாபதியாருக்கு அவர் நாக்கிலிருந்து பாடல்கள் தாராளமாக பிறக்கும்.ஆதலால் அவரை புலவர் என்றே அன்று ஊரவர்கள் அழைப்பர்.
அக்குடும்பத்தில் மூத்த மகள் நன்னிப்பிள்ளைக்கும், அருணாசலம் மகன் சின்னக்குட்டிக்கும் அவர்கள் இல்லற வாழ்வில் மலர்ந்த மலர்கள் எட்டு. அவர்களில் ஐந்தாவது பிள்ளையே [பிறந்த திகதி:-03-12.1914] பின்னர் வாத்தியார்-செல்லத்துரை ஆனார். அவ்வரிசையில் கடைசியில் பிறந்தவரே இன்று கனடாவில் வதியும் [அமரர்] கந்தையா வாத்தியார் ஆவார்.

இவர் பிறந்து,வளர்ந்த காலம் உறவுகள் வறுமைக்கோட்டின்
கீழ் வாழ்ந்தனர்.நல்ல கல்விக்கூடங்கள் அருகில் இருக்கவில்லை. 1872 இல் ஆரம்பிக்கப்படட காலையடி அமெரிக்கமிஷன் பாடசாலையின் கிறிஸ்துவமே போதிக்கப்பட்ட்து. அதனால் அங்கு சென்று படிப்பதை வெறுத்தார்.
எனவே சுழிபுரம் ஆறுமுகவித்தியாசாலையில் ஆரம்ப கல்வியினை முடித்துக்கொண்ட ஆசிரியர் பின்னர் பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் தனது கல்வியினை தொடர்ந்தார்.
தாய்வழிப் பேரனாரின் கவித்துவ வல்லமை இவரிடம் காணப்பட்டது..இனிமையாகப் பாடும் திறமையும், மேடை நடிப்பும் மெய்கண்டான் பாடசாலையில் இவருக்கு பாராட்டுக்களைக் குவித்தது.
''சதானந்தன் சந்திரமதி'' எனும் நாடகத்தில் சதாநந்தனாக திறமையாக நடித்ததன் மூலம் அப்பாடசாலை அதிபர் திரு .க.முருகேசுவின் அன்புக்குப் பாத்திரமானார்.
அப்பாடசாலையில் இறுதித் தேர்வில் திறமைச் சித்தியடைந்த செல்லத்துரை அவர்கள் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கு சில மாதங்கள் உதவி ஆசிரியராக பணி புரிந்தார்.
மெய்கண்டான் சென்று ஒரு ஆசிரியர் நிலைக்கு உயர்ந்த அவரது வளர்ச்சிகண்டு ஊர் உறவுகள் பலரும் இவரினை பின்பற்றி மெய்கண்டான் பாடசாலையில் கல்விகற்க சென்றதால் காலையடி அமெரிக்கமிசன் பாடசாலையின் மாணவர் தொகை வெகுவாகக் குறைந்தது. இது கண்டு கலங்கிய அமெரிக்க மிஷன்மார்போதகர்கள் சிலர் அப்போது காலையடி பாடசாலையின் அதிபர் செல்லப்பா வாத்தியாருடன் இணைந்து ஆசிரியர் செல்லத்துரை அவர்களை சந்தித்து, ஒரு கிறிஸ்தவராக மாறினால் காலையடி பாடசாலையில் தலைமை ஆசிரியப்பணி தருவதாக கேட்டுக்கொண்டனர். அதற்கு மறுத்த ஆசிரியர் மதம் மாறாமலேயே சாதாரண உதவி ஆசிரியர் நியமனத்தினை ஏற்றுக்கொண்டார்.

இவர் காலையடி அமெரிக்க மிஷன் பாடசாலையில் 1935 இல் தம் பணியினை ஆரம்பித்ததும் ஊர் மாணவர்கள் எல்லோரையும் திரட்டி காலையடியில் படிக்கச்செய்து வீழ்ந்த பாடசாலையினை நிமிர்த்தியதனை மிஷன் மாருக்கு காரணம் காட்டி மெல்ல மெல்ல சைவ பாடத்தினையும் அங்கு கற்பிக்க ஆவன செய்தார். அதே வேளையில் தானும் ஆசிரிய தராதர பத்திர தேர்வில் தோற்றி ஆசிரியருக்குரிய தகுதியினை பெற்றுக்கொண்டார்.
அன்று ஊருக்குள் ஒரேயொரு ஆசிரியர் என்பதால் அவர் மதிப்பு மென்மேலும் பெருகியது.திருமண பேச்சு என்றால் வாத்தியாரிடம் தான் போய் ஆலோசனை கேட்கவேணும். பிள்ளை பிறந்தால் நாள்,நட்ஷத்திரம் அறிய,நல்லநாள்,கெட் ட நாள் அறிய,ஐந்து வயது முடிந்த குழந்தைக்கு ஏடு தொடக்க, குடும்ப பிணக்குகள் தீர்க்க ,காணி,பூமி,எல்லை பங்கீடு என்று எல்லாவற்றிற்கு வாத்தியார் தான் போகவேணும். இதனால் ஊரில் உள்ள மூத்தோர்கள் கூட அவரை அன்புடன் சட்டம்பியார் என்றே அழைத்தனர்.
அதேவேளையில் ஊருக்குள் நடைபெறும் கலைவிழாக்களுக்குரிய கலைநிகழ்ச்சிகளில் ஆசிரியரே பொறுப்பாக இருப்பார்.அவர் ஊர் பிள்ளைகளை வைத்து பழக்கிய நடனங்களே அங்கு பாராட்டுக்களை பெறும்.
ஓரு இந்து பாடசாலையினை எமது ஊரில் நிர்மாணிக்கும் விருப்பில் செல்லத்துரை ஆசிரியர் அவர்கள் இருந்ததை அறிந்த அன்றய இலங்கை இந்து மகா சபையின் வடபிராந்தியத்தின்
தலைவராக இருந்த இராசரத்தினம் என்பவர் கட்டிட நிர்மாணத்துக்குரிய ஒரு பகுதி பணத்தினை வழங்குவதாக சபை உறுதி அளித்ததின் பலனாக சாந்தையில் சிற்றம்பலம் செட்டியார் எனும் அன்பர் பாடசாலைக்கு அளித்த நன்கொடைக் காணியில் சிற்றம்பலவித்தியாசாலை கட்டும் பணி ஆசிரியரின் தலைமையில் ஆரம்பமானது. ஊரிலுள்ள இளையோரையும் தனது பிள்ளைகளையும்,தானும் இணைந்து வேதனம் எதுவும் பெறாது கூலி காரரிலும் மேலாக உழைத்ததுடன் இளையோர்கள், ஆசிரியர் இணைந்து தம் பணத்தினை யும்  ஊர் பெரியோர்கள் நன்கொடையாக அளித்த பணமும் இட்டு அப்பாடசாலையினை 1959 இல் கல்விக்காக திறந்து வைத்தனர்.
அக்காலத்தில் ஒரு பாடசாலையும்,மாணவர்கள் தொகையையும் சபையினருக்கு காட்டினால் அவ்வூர் படித்த இளையோர்கள் ஆசிரிய நியமனம் பெற வாய்ப்பு இருந்தது.எனவே சிற்றம்பல வித்தியாசாலை மூலம் எமது இளையோர்கள்,எமது உறவுகள்பலர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர் என்றால் அதற்கு செல்லத்துரை ஆசிரியரே காரணம் எனலாம்.
இதேவேளையில் ஊருக்கு ஒரு வாசிகசாலை தேவை என்பதனை உணர்ந்த இளையோர்களுடன் இணைந்து அதனை முத்துமாரியம்மன் ஆலய அருகில் நிர்மாணிக்க தீர்மானித்தனர். எந்த வித பண வசதிகளுமற்ற அக்காலவேளையில் ஆசிரியர் தனது கலைத்திறமையினை பயன்படுத்தி காலையடி பாடசாலை மாணாக்கர்களை திரட்டி அவர்களுக்கு கோலாடடம் போன்ற நடனங்களை பழக்கி மேடையமைத்து பணம் திரட்டி இவ் வாசிகசாலை 1946 இல் பூர்த்தியடைய கடுமையாக உழைத்தார்.
அச்சமயம் யாழ் மாவடடத்திலேயே முதல் தர வாசிகசாலை என பெயர் பெற்ற எமது வாசிகசாலை  என்பது பெருமைக்குரியது. ஏனெனில் அன்று எமது வாசிகசாலை தையல் போன்ற வகுப்புக்களும்,சனசமூக நிலையமாகவும்,மாதர் சங்கமாகவும் மிளிர்ந்தது மறக்க முடியாதது.
அத்துடன் சுன்னாகத்திற்கு மாட்டுவண்டியில் சென்று சங்கீத க்கலையினை பயின்று அதனை எமது ஊர் இளையோர் கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தார்.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின் காலையடி அமெரிக்க மிஷன் பாடசாலை தமிழ்க்கலவன் பாடசாலையாக வெள்ளைக்காரனுடன் சேர்த்து கிறிஸ்தவத்தை வெளியேற்றியது.அப்பொழுது எம்மூரில் மிகவும் ஆர்வமுள்ள கார்த்திகேசு என்பவர் அதிபராக இருந்தார்.அவர் செல்லத்துரை ஆசிரியரிடம் இருந்த ஆர்வத்தினை உணர்ந்து மாணாக்கர்களின் மேலான பொறுப்பினை அவரிடமே கொடுத்துவிடடார். இதனால் [சக ஆசிரியர்கள் இவரை ஹெட் மாஸ்டர் என்றே அழைப்பர்] ஒவ்வொரு மாணாக்கரின் வரவிலும் ஆசிரியர் அவதானமாகவே இருந்தார்.ஒரு மாணவன் வர பிந்தினால் அவன் நிற்கும் இடம் சென்று அவர் பிரம்பு பேசும். அத்துடன் அக்கால வீடுகள் முன் விறாந்தை திறந்த பகுதியாகும் .எனவே படிப்பவர்களினை வீதியால் போவோர்கள் கவனிக்க முடியும் .இரவில் மாணவர்கள் படிக்கிறார்களா என ஒரு கை விளக்குடன் தெருத்தெருவாக சென்று அவதானிக்கும் பழக்கத்தினையும் ஆசிரியர் கொண்டிருந்தார், இதனால்வீட்டிலும் மாணவர்கள் படிக்கும் பழக்கத்தினையும் கொண்டிருந்தனர். பாடசாலையின் பெற்றோர்,ஆசிரியர் கூட்டங்களுக்கு  சில பெற்றோர்கள் வருவதில்லை.அவர்களை வீதிகளில் சந்தித்தால் மாணவர்கள் கல்வியினை ஊக்குவிக்குமாறு அவர்களிடம் வேண்டிக்கொள்வார்.
இதனால் மாணாக்கர் வரவும் அவர்கள் கல்வி நிலையும் தரத்தில் உயர்ந்தே சென்றது. இதனால் பெரும் பாடசாலைகளுக்கு அருகில் வாழும் அம்மன் வீதி ,இந்துக்கல்லூரி வீதி , அரசடி வீதி  மாணவர்களும் காலையடி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வந்து பெரும் பயன் பெற்றனர்.

பின்னர் மேற்படி பாடசாலையில் தலைமை ஆசிரியராக பணி புரிய வந்த அதிபர் பேரம்பலம் என்பவர் அதிபர் கார்த்திகேசு காலம் போலவே ஆசிரியர் செல்லத்துரை அவர்களை பணி யாற்றும்படி வேண்டிக்கொண்டார். தான் இளைப்பாறுமுன் புதிதாக ஏதாவது செய்ய எண்ணிய வாத்தியார் பேருந்து ஒழுங்கு செய்து மாணவர்களை அழைத்து கொண்டு மிகிந்தலை, திருக்கேதீஸ்வரம் போன்ற வரலாற்று முக்கியத்துவமான ஊர்களுக்கு சுற்றுலாப்ப யணம் செய்து அதுவரை உலகம் தெரியாத மாணவர்களை உலகினை அறியச்செய்தார்.
அவரது விரல்கள் அச்சுப் போன்ற பொன் எழுத்துக்கள் எழுதும் வல்லமை உடையவை.அதேவேளை காணி உறுதி எழுதும் அனுமதியினையும் கொண்டிருந்தார்.உறுதி வேலைகளுக்கு குறைந்த பணத்தினையே அவர் பெற்றுக்கொள்வதினால்.பல வசதிகுறைதோரும் பெரும் பலன் பெற்றிருந்தனர்.
ஆசிரியரின் நீண்டகால பணி அவருக்கு 1968ம் ஆண்டில் தலைமை ஆசிரியர் பதவியினை வழங்கியது.
இக்காலம் வரையில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்கு அயல் வீடுகளுக்கு செல்ல வேண்டியிருந்தது.எனவே அரச உதவிமூலம் பாடசாலைக் காணியில் ஒரு கிணறும், மேடையுடன் கூடிய நவீன வகுப்பறை மண்டபத்தினையும் கட்டுவதற்கு ஆவன செய்தார். அம் மண்டபத்தின் திறப்புவிழா ஆசிரியரின் மேற்பார்வையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பயிற்றுவிக்கப்பட்டு ஊர் மக்கள் முன்னிலையில் இலவசமாக மேடையேற்றம் பிரமாதமாக நிறைவேறியது,அதில் பங்குபற்றிய மாணவர்களுக்கும்,பெற்றோருக்கும் பெருமைகள் சேர்ந்தது ஆசிரியரையே சேரும்.
நன்றாகக் காய்க்கும் பெரும் மாமரம் ஒன்று பாடசாலை காணியில் காணப்பட்ட்து.அவற்றில் காய்க்கும் கனிகளைக்கூட மாணவர்களுக்கு பங்கிட்டு மகிழவுறும் பண்பு ஆசிரியரின் கண்டு பெருமைப்பட்டிருக்கிறேன்.
வார இறுதி நாட்களில் வந்து எல்லை வேலிகளை பராமரிப்பதன் மூலம்பாடசாலைச் சுற்றாடலையும் அவர் எப்படி பராமரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1970 இல் பதவிக்கு வந்த அரசு படித்து வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்காக கொண்டுவந்த சட்டங்களில் ஒன்று என்னவெனில் -இளையோருக்கு தொழில் வாய்ப்பு ஏற்படும்முகமாக பணிபுரியும் முதியோர்கள் 55 வயதினிலே ஒய்வு பெறவேண்டும் -என்பதாகும். எனவே அவர் 1971 இல் தனது ஆசிரியர் பணியிலிருந்து கட்டாய ஒய்வு பெற்றுக்கொண்டார்.
ஊருக்காக வாழ்ந்த ஆசிரியர் செல்லத்துரை அவர்கள் 21-02-1994 அன்று இறைவனடி சேர்ந்தார்.
குறிப்பு: அண்ணனை பெருமைப்படுத்துவதற்காக இக்கட்டுரையினை நான் வரையவில்லை. அரச உத்தியோகத்திலிருந்து இக்காலத்தில் ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கும் எம்மவர்கள் அவரால் தான் தாம் நன்றாக இருப்பதாக நன்றியுடன் கூற க்கேட்டிருக்கிறேன். அவரைப்போன்று,அவரால் படித்து வளர்ந்தவர்களைப் போன்று இன்னும் எம் ஊரில் பலர் உதயமாக வேண்டும்.அடுத்த ஊரவர் எம் வளர்ச்சியை கண்டு திகைக்க வேண்டும். என்ற ஆவலில் அவரின் வரலாறு ஒரு வழிகாட்டியாக அமையும் என்ற நம்பிக்கையுடன் எழுதியுள்ளேன்.
- [அமரர் ]சின்னக்குட்டி .கந்தையா [ஓய்வுபெற்ற ஆசிரியர்/அதிபர்] /திகதி:15 -06-2007- கனடா
முக நூலிலிருந்து:- காலையடி அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியரால்  தீர்ப்பு வழங்கப்படட சம்பவத்தில் நினைவில் நின்ற சம்பவம்  இது.::--
அன்றய காலத்தில் பாடசாலை இடைவேளையின் போது பிஸ்கற் மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.ஒருமுறை ஒரு மாணவனின் பிஸ்கட் காணாமல் போய்விடவே செல்லத்துரை ஆசிரியரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட்து. அதை யார் எடுத்தார்கள் என மாணவர்களை வினவிய போது பதில் கிடைக்கவில்லை.எனவே ஆசிரியர் ஒரு தந்திரம் செய்தார். ஒவ்வொரு மாணவனிடமும் ஒரே அளவான சிறு குச்சிகளை கொடுத்து, ''மாணவர்களே எல்லோரும் வரிசையாக இப்பாடசாலையினை சுற்றி வாருங்கள். பிஸ்கற்ரினை எடுத்த மாணவனின் குச்சி அரை அங்குலம் வளர்ந்திருக்கும்.சுலபமாக சம்பந்தப்படடவனை கண்டுபிடிக்கலாம்.'' என்கிறார். மாணவர்களும் ஆச்சரியத்துடன் அவர் கூறியபடி சுற்றி வந்தார்கள்.முடிவில் ஒவ்வொரு குச்சியாக வாங்கும்போது ஒரு குச்சி அளவில் சிறியதாக கண்டுகொண்ட ஆசிரியர் அம்மாணவனை அழைத்து சென்று புத்தி கூறி அனுப்பி பிஸ்கற்ரினை  இழந்த மாணவனுக்கும் புதிதாக பிஸ்கற்றுக்களை வழங்கினார்.[களவெடுத்தவன் குச்சி வளர்ந்திடும் என்ற பயத்தில் அதை அரை அங்குலம் கடித்து கொண்டதே உண்மை.]
வாழ்வோம்! வளர்வோம்!  ஆபத்தை நோக்கிய பயணமா?

நோக்கியா கவிதை 
03-09-2017 அன்று இடம்பெற்ற கோடைகால ஒன்றுகூடலில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய பிள்ளைகளின் விபரம் பின்வருமாறு-

குறிப்பு: மேற்படி போட்டியில் வெற்றியீ ட் டியோருக்கு பரிசில்கள் வழங்குகிறார் நிதிசார் ஆலோசகர் வேந்தன் பேரின்பநாதன் .அவருக்கு கழகம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

பிரிவு- Jk&Sk
1)ஓவியா  பாலசிங்கம்  [ Oviya  Palasingam ]
2)சபரிஸ் நந்தகுமார்       [ Sabaris Nanthakumar ]
3)யஸ்வின் தவறூபன்      [Jasvin  Thavaruban ]
4)அகரிஸ்  நந்தகுமார்     [Agaris   Nanthakumar ]
5)றமேசன்  சிவனேசன்   [Ramesan Sivanesan ]


பிரிவு- Grade- 01&02

1)தனிஸ்கா  குகன்  [ Thaniska  Kugan ]
2)சஜீன்  செல்வச்சந்திரன் [ sajin  Selvachchanthiran ]
3)பிரித்திகா புலேந்திரன் [ Prithika Pulenthiran ]
4)கிறிஸிகா  கிருஷ்ணகுமார்  [ kirisiga  krishnakumar ]
5)கபிஷ் பாலகிருஷ்ணன் [Kabish  Balakrishnan ]
6)ஆர்த்தி துஷாந்தன்      [Arththi  Thusanthan ]
7)திசா  உமாபதிசிவம்  [ Thisa  umapathisivam ]


பிரிவு- Grade- 03&04
ஆண்கள் பிரிவு :
 1)ஆதித்யா  பாலசிங்கம்  [Adithya  Palasinkam ]
 2)அஸ்வின்  சுகிந்திரன் [Ashvin sukiinthiran]
 3)கிஷோன்  தயாளரூபன்  [ Kishoen   Thayalaruban ]
4)சாத்விகன்  ராஜ்குமார் [Sathvigan   Rajkumar ]
5)சாகித்யன் நந்தகுமார்  [Sakithyan Nanthakumar ]

-----------------
பெண்கள் பிரிவு:
 1)கிரிஷ்ணிகா சர்வானந்தன்  [ Krishnika Sarvananthan]
2)பிரித்திகா வினோதரூபன் [ Priththika  Vinotharuban ]
3)தனிஸ்கா சுபேந்திரன்  [ Thanisga  Supenthiran ]
 4)மகிஷா நந்தரூபன்  [Makisha Nantharuban]


பிரிவு- Grade- 05&06

1)சகிஸ்யன்   சர்வானந்தன் [Sakishyan Sarvananthan]
2)பகிசன்  சிவநேசன் [Pakisan  Sivanesan ]
 3)யதுஷன்  முகுந்தன் [Yuthushan Mugunthan]
4)செனுஜா  செல்வச்சந்திரன் [Senuja Selvasanthiran]
5)தனுஷா  நந்தரூபன் [Thanusa Nantharuban]

பிரிவு- Grade- 07&08
Grade- 07+08
ஆண்கள்

1)      மதுசன் சுகீந்திரன் [மதுசன்  சுகிந்திரன்]
2)      சபீசன்  பாஸ்கரன்  [Sabisan  Baskaran ]
3)      சாருகன் முகுந்தன் [Sarugan  Mukunthan ]
 4)அபி ரவி  [ abi Ravi]
 5)அனோஜ்  நடேசன்  [ Anoj  Nadesan ]
------------------------------------
பெண்கள் பிரிவு :
1)ஜனனி   குமார்   [ Janany  kumar ]
2 )சுவேதா புலேந்திரன் [ Swetha  Pulenthiran ]
3) கஜாயினி சண்முகம்  [Kajayini  Shanmugam ]


03-09-2017 அன்று இடம்பெற்ற கோடைகால ஒன்றுகூடலில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய பிள்ளைகளின் விபரம் பின்வருமாறு-

பிரிவு- Jk+Sk
  1. ஓவியா  பாலசிங்கம்  [ Oviya  Palasingam ]
  2. சபரிஸ் நந்தகுமார்       [ Sabaris Nanthakumar ]
  3. யஸ்வின் தவறூபன்      [Jasvin  Thavaruban ]
  4. அகரிஸ்  நந்தகுமார்     [Agaris   Nanthakumar ]
  5. றமேசன்  சிவனேசன்   [Ramesan Sivanesan ]




பிரிவு- Grade- 01+02


1)தனிஸ்கா  குகன்  [ Thaniska  Kugan ]
2)சஜீன்  செல்வச்சந்திரன் [ sajin  Selvachchanthiran ]
3)பிரித்திகா புலேந்திரன் [ Prithika Pulenthiran ]
4)கிறிஸிகா  கிருஷ்ணகுமார்  [ kirisiga  krishnakumar ]
5)கபிஷ் பாலகிருஷ்ணன் [Kabish  Balakrishnan ]
6)ஆர்த்தி துஷாந்தன்      [Arththi  Thusanthan ]

7)திசா  உமாபதிசிவம்  [ Thisa  umapathisivam ]


பிரிவு- Grade- 03+04
ஆண்கள் பிரிவு :
 1)ஆதித்யா  பாலசிங்கம்  [Adithya  Palasinkam ]
 2)அஸ்வின்  சுகிந்திரன் [Ashvin sukiinthiran]
 3)கிஷோன்  தயாளரூபன்  [ Kishoen   Thayalaruban ]
4)சாத்விகன்  ராஜ்குமார் [Sathvigan   Rajkumar ]
5)சாகித்யன் நந்தகுமார்  [Sakithyan Nanthakumar ]

---------------------------------
பெண்கள் பிரிவு:
 1)கிரிஷ்ணிகா சர்வானந்தன்  [ Krishnika Sarvananthan]
2)பிரித்திகா வினோதரூபன் [ Priththika  Vinotharuban ]
3)தனிஸ்கா சுபேந்திரன்  [ Thanisga  Supenthiran ]

 4)மகிஷா நந்தரூபன்  [Makisha Nantharuban]



பிரிவு- Grade- 05+06

1)சகிஸ்யன்   சர்வானந்தன் [Sakishyan Sarvananthan]
2)பகிசன்  சிவநேசன் [Pakisan  Sivanesan ]
 3)யதுஷன்  முகுந்தன் [Yuthushan Mugunthan]
4)செனுஜா  செல்வச்சந்திரன் [Senuja Selvasanthiran]

5)தனுஷா  நந்தரூபன் [Thanusa Nantharuban]


 Grade- 07+08
ஆண்கள் 

1மதுசன் சுகீந்திரன் [மதுசன்  சுகிந்திரன்]
2சபீசன்  பாஸ்கரன்  [Sabisan  Baskaran ]
3சாருகன் முகுந்தன் [Sarugan  Mukunthan ]
 அபி ரவி  [ abi Ravi]
 அனோஜ்  நடேசன்  [ Anoj  Nadesan ]
------------------------------------
பெண்கள் பிரிவு :
1ஜனனி   குமார்   [ Janany  kumar ]
2சுவேதா புலேந்திரன் சுவேதா புலேந்திரன் [ Swetha  Pulenthiran ]
கஜாயினி சண்முகம்  [Kajayini  Shanmugam ]


குறிப்பு: மேற்படி போட்டியில் வெற்றியீ ட் டியோருக்கு பரிசில்கள் வழங்குகிறார் நிதிசார் ஆலோசகர் வேந்தன் பேரின்பநாதன் .அவருக்கு கழகம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.



jk /sk 
ஓ 
மைல்  ஓடட்டும் 
2சபரிஸ் நந்தகுமார் 
அகரிஸ்  நந்தகுமார் 
1ஓவியா  பாலசிங்கம் 
நமேசன்  சிவனேசன் 
3யஸ்வின் தவரூபன் 

1+2
2ச கீ ன்  செல்வச்சந்திரன் 
திஷ உமாவதிசிவம் 
3பிரித்திகா புலேந்திரன் 
கிறிஸ்திகா கிருஷ்ணகுமார் 
கபிஷ் பாலகிருஷ்ணன் 
ஆர்த்தி துஷாந்தன் 
1தனிஸ்கா குகன் 

3+4
சாகித்யன் நந்தகுமார் 
3கிஷோன் தயாள ரூபன் 

1ஆதித்யா பாலசிங்கம் 
2அஸ்வின் சுகீந்திரன் 
சாத்விகன்  ராஜ்குமார் 

---------------------------------
2பிரித்திகா வினோதரூபன்
3தனிஸ்டிகா சுபேந்திரன் 
மகிஷா நந்தரூபன் 
1கிருஷ்டிகா  சர்வானந்தன் 

5+6
3யதுஷன் முகுந்தன் 
செனுசா செல்வச்சந்திரன் 
2.பகி சன்  சிவநேசன் 
தனுஷா  நந்தரூபன் 
1சகிசன்  சர்வானந்தன் 

7+8
3சாருகன்  முகுந்தன் 
1மதுசன் சுகீந்திரன் 
அபி ரவி 
அனோஜ்  நடேசன் 
2சபேசன் பாஸ்கரன் 
------------------------------------
3கஜாயினி சண்முகம் 
2சுவேதா புலேந்திரன் 
1ஜனனி 







1ஆதித்யா பாலசிங்கம் 
2அஸ்வின் சுகீந்திரன் 
சாத்விகன்  ராஜ்குமார் 

---------------------------------
2பிரித்திகா வினோதரூபன்
3தனிஸ்டிகா சுபேந்திரன் 
மகிஷா நந்தரூபன் 
1கிருஷ்டிகா  சர்வானந்தன் 

5+6
3யதுஷன் முகுந்தன் 
செனுசா செல்வச்சந்திரன் 
2.பகி சன்  சிவநேசன் 
தனுஷா  நந்தரூபன் 
1சகிசன்  சர்வானந்தன் 

7+8
3சாருகன்  முகுந்தன் 
1மதுசன் சுகீந்திரன் 
அபி ரவி 
அனோஜ்  நடேசன் 
2சபேசன் பாஸ்கரன் 
------------------------------------
3கஜாயினி சண்முகம் 
2சுவேதா புலேந்திரன் 

1ஜனனி 
---------------------------------------------------------
நினைவலைகள்-கவி 

எமது மண் தந்த கலைஞர்களில் ஒருவராக வளர்ந்துகொண்டிருப்பவர் அகிலன் ,ராஜா . நிலாமுற்றம் முகநூலில் பல விருதுகளையும் , www.ttamil.com இல் வாராந்தம் திங்கடகிழமைகளில் இதுவரையில் 500 ற்கு மேற்படட கவிதைகளை எழுதி வாசகர்களின்  மத்தியில்  பெரும் வரவேற்பினை பெற்று விளங்குகிறார் . க்கிறார்.அவரினை கழக ஆண்டு மலரினுடாக கௌரவிப்பதில் நாம் பெருமை அடைகின்றோம்.


நினைவலைகள் நீண்டு வர 
உறவாடி கழிந்த பொழுதுகள்
 இனிமை கோடி கொண்டு வர 
 ஊரின் நினைவு கண்களில் மின்னுதே!

கொஞ்சும் பாசமும் கொள்ளை அழகும் 

விஞ்சும் சுவையில் விளைந்த நண்பர்களும் 
நெஞ்சுக்கு இனிமை நெருடல் கொடுத்து
வாழ்ந்த நாட்கள் மனதை வருடிப் போக
நினைவலைகள் செழித்து வளருதே!

அருள் பொழியும் அம்மன், 

முருகன் காவல் காக்க 
பகிடி என சேவை செய்து இன்பம் கண்டு
மண் வீடு கோயில் கட்டி நெஞ்சம் மகிழ்ந்தோம்!

பாடசாலையில் விடுப்பு வந்ததும் 

வானத்தில் அழகு பட்டம் விட்டுவிடுவோம்
 நூல் அறுந்து விடுபட்டு போகையில
 மனம் நொந்து அழுது விடுவோம்!

மழையும் தான் பெய்து விட்டால்

 வயல்களின் கிணற்றடி நீர் பார்த்து 
மூழ்கி துள்ளி குதித்துவிடுவோம்

விளைச்சல் விளைந்த வயலிலே 

பக்குவமாய் களவாடி 
கனிகளை சுவைத்துவிடுவோம்
தோட்டக்காரன் கண்டுவிட்டால்

 நல்ல பிள்ளையாக ஓடிவிடுவோம்

எண்ணமெல்லாம் இனிமை ஏற்றி 

உள்ள மெல்லாம் ஒன்று பட்டு 
வஞ்சம் இன்றி வாழ்ந்த வாழ்வு 
மீண்டும் வந்து விடுமா

-அகிலன் ராஜா
----------------------------------------------
உலக புத்தாண்டு தினங்கள் 
30 ஆவது அகவையில் பிறந்த  மண்ணின் மணம்  பரப்பும் பண் கலை  பண்பாட்டுக் கழகத்திற்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உலகெங்கும், எல்லோருமே ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக் கூறிப் பரிமாறிக்கொள்வது மிகவும் வழக்கமாகிவிட்டது. புத்தாண்டின் முதல் நாளிலேயே வாழ்த்தப்பட்டால் , அந்த ஆண்டு முழுவதும் சீரும், சிறப்பும், சௌக்கியமும், செல்வமும் நிறைந்த சந்தோசமான பெரு வாழ்வு கிடைக்கும் என்று அநேகமானவர்கள் முழு மனதுடன் நம்புகின்றார்கள். 

ஆனால், இவ்வுலகில் நாம் நினைக்கும் ஜனவரி முதலாம் திகதி மட்டும்தான் வருடப் பிறப்பு என்று எல்லோருமே கருதுவது இல்லை.  ஒவ்வொரு நாளிலும், வெவ்வேறு இடத்தில் எதோ ஒரு புதிய ஆண்டு வருடம் பூராவும் பிறந்துகொண்டுதான் இருக்கின்றது.

பல்வேறு இன மக்களும் தாங்கள் சொல்லும் வருடப்பிறப்புதான் உண்மையானது என்று கூறிக்கொண்டு அந்நாளில் பெரும் நன்மைகள் வேண்டிப் பல வழிபாடுகளை செய்துகொள்ளுவார்கள். சிலர், அத்தோடு சேர்த்து ஜனவரி ஒன்றிலும்  மேலதிகமான ஒரு புத்தாண்டையும் கொண்டாடுவார்கள்.

உலகத்திலே பல இடங்களில் ஒரு குறிப்பிடட ஒரு திகதியில் இல்லாது, மாறி வரும் நாட்களில் தங்கள் புது வருடங்களைக் கொண்டாடுகின்றார்கள். அநேகமாக சூரிய, சந்திர, நட்சத்திர  இராசி மாற்றங்களை அடிப்படையாய்க் கொண்டு தங்கள் வருட முதல் நாளை நிர்ணயம் செய்கின்றார்கள்.

இதன்படி புதிய வருடம் பிறப்பது ஒரு சில இடங்களில் பின்வருமாறு அமையும்:

ஜனவரி 1 :
தற்போதைய காலண்டர் முறையை ஏற்று, பின்பற்றும் நாடுகளில், அக்காலண்டரில் முதல் மாதம் என்று சொல்லப்பட்ட  ஜனவரி முதல் நாள். 

ஜனவரி 21  - பெப்ரவரி 21 
சீனா/ வியட்நாம் /கொரியா. 
சந்திரனை  மையமாக வைத்துக்கணிக்கப்படும் 12 -13 மாதங்கள் கொண்ட வருடத்தின் முதல் சந்திர மாத  அம்மாவாசை தினம்.

ஜனவரி - மார்ச். 
திபெத். 
சீன வருடத்தில் இருந்து ஒரு மாதம் பிந்தி வரும்.

பெப்ரவரி:
மத்திய அமெரிக்க நாடுகள், வட கிழக்கு இந்தியா.

மார்ச்:
தெலுங்கு, கன்னட தேசத்தினர், இரான், பஹாய், பாபிலோனியா, பாலி, ஜாவா, மஹாராஷ்ட்டம், காஷ்மீர் பிரதேசம்.

 ஏப்ரல்:
தமிழ், சிங்களம், பஞ்சாப், நேபாளம், இமாலய பிரதேசம், ஆசாம், வங்காளம், மணிப்புரி, ஒடிசா, மலையாள ஒரு பகுதி, பர்மா, லாவோஸ், கம்போடியா,  பாகிஸ்தான் இந்துக்கள், எகிப்து ஒரு பகுதி, சில மேற்கு ஐரோப்பிய பழம் குடிகள்.

ஜூன்:
குஜராத், யொருபா (நைஜீரியா).

செப்டம்பர்:
பழைய பிரென்ச்,  எகிப்து வழக்கம் பின்பற்றுபவர்கள்.

முஸ்லீம்:
எல்லா வருடங்களும் - சந்திர மாத  வருடங்களானாலும்- ஒரு சூரிய சுற்று 365  நாட்களை அடிப்படையாய் கொண்டுதான் தம் வருடத்தினைக் கணிப்பதால், ஓரளவுக்கு ஓரிரு குறிப்பிடட திகதிக்குள் புது வருட முதல் தினம் வந்துவிடும்.

ஆனால் முஸ்லிம் வருடமோ 354 நாட்களை மட்டும் கொண்டுள்ளதால் அதன் புது வருடம் ஒவ்வொரு வருடமும் சுமார் 11  நாடகளுக்கு  முன்பாக வந்துவிடும். ஒவ்வொரு வருட முதல் தினம், மாறிக்கொண்டே முன் செல்லும்.

இப்படியாக எண்ணற்ற மேலும் பல வருடப் பிறப்புகள் ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க நாடுகள் எங்கும் உள்ளன.

மனிதனால் அன்றாட கடமைகளை முறைப்படி செய்துகொள்வதற்காக வடிவமைக்கப்பட்டு, உலகம் முழுவதும்  பொதுவாக கடைப்பிடிக்கப்படும் ஒன்றுதான் இப்பொழுது பின்பற்றும் கிரெகோரியன் முறைக் காலண்டராகும்..

இந்தக் காலண்டரில் உள்ள முதல் மாதம் என்று வரும் ஜனவரி மாதத்தில் முதல் திகதி பிறக்கும்போது, இத்தினத்தில் புது வருடம் கொண்டாடப் படுவது உலகெங்கும் வழக்கமாகி விட்ட்து.

ஆதலால், 
அனைவருக்கும்  கிரெகோரியன் காலண்டர் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


 தொகுப்பு: செல்லத்துரை , சந்திரகாசன் 




தமிழ் சொல்வதெழுதல் போட்டியில்  வென்ற பிள்ளைகளுக்கு   பரிசில்களை வழங்கும் - வீடு விற்பனைமுகவர் கிறிஸ், சிவபாதம் அவர்களுக்கு கழகம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

பேச்சுப்போட்டியில்   வென்ற பிள்ளைகளுக்கு   பரிசில்களை வழங்கும்அமரர்.திரு.விருத்தாசலம் ஆசிரியர் குடும்பம் & அமரர்.திரு .சுப்பிரமணியம் குடும்பம் அவர்களுக்கு கழகம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.


விளையாட்டுப்போட்டி யில்   வென்ற பிள்ளைகளுக்கு   பரிசில்களை வழங்கும்- சுபேந்திரன் சுப்பிரமணியம் அவர்களுக்கு கழகம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.


spelling-bee யில்வென்ற பிள்ளைகளுக்கு   பரிசில்களை வழங்கும் வீடு விற்பனை முகவர் சிவா சிவநேசன் அவர்களுக்கு கழகம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.