எதில் நாம் வல்லுநர் வஞ்சகி ?

 [What are we masters of,cunning woman?]   



பூமியில் வந்ததில் இருந்து போகும் வரை,வஞ்சகி 
உனக்கு ஏனடி பாசாங்கு,ஏதுக்கடி போலி வாழ்வு?
மனிதனின் உண்மை தேவையை,பாசாங்கு உணராது வஞ்சகி
பொய் நம்பிக்கை விதைத்து இன்பத்தை கெடுக்கும்,பெண்ணே! 

அறிவியலா? ஆன்மிகமா? எதில் மனிதன் அதிபதி,வஞ்சகி?
விஞ்ஞானத்தால் விரக்தியை உண்டாக்கவா,பேரழிவை உண்டாக்கவா 
மனித நேயமற்ற நீர்க்குமிழி விவகாரங்களை கட்டுப்படுத்தவா,வஞ்சகி?
கட்டாயம் அது நிரந்தர நித்திய ஆன்மாவை அல்ல,பெண்ணே! 

உண்மையில் மனிதன் பெரும் கடலல்ல,ஒரு துளியே,வஞ்சகி ?
கற்றது கையளவு ஆனால் நீயோ உலகளவு தெரியும் என்கிறாய்
உன்செயலே மனிதனின் குறுகிய மனப்பான்மையை காட்டுது,வஞ்சகி?
உன் அறியாமை,நீ உண்மையில் குருடியே என்கிறது,பெண்ணே!

மனிதனின் இறுதித் தீர்ப்பு,நிலையற்ற இறப்பே,வஞ்சகி ?
நீ நீர்க்குமிழி வாழ்வை விட்டு அங்கையே போகிறாய் 
நீ முடிகின்ற ஒன்றில் வல்லுநராகி,எதைசாதிப்பாய்,வஞ்சகி ?  
உனக்கு மரணம் காத்திருக்கிறது என்பதை அறியாயோ,பெண்ணே!   

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 

From the moment of advent till the moment we go,
Why pretence Why false show ,cunning woman?
Pretence make us ignore things that really matter,cunning woman
False hopes grow,Shattering real joys,dear woman!

What are human beings master of,cunning woman?
whether to give despair or disaster by finding devices
Whether to control fleeting affairs of our lives,cunning woman?
But not what is permanent & eternal:our soul,dear woman!

We are not so big,truly we are so small,cunning woman?
you learn a bit,yet you feel you know it all 
your action show you are so small minded,cunning woman?
your ignorance show you are truly blinded,Dear woman!

Final frontier of human is mortal death,cunning woman?
We reach 'there.,bursting this bubble life 'here'
What you achieve,by becoming masters of them,cunning woman?
Don't you know that death is awaiting,Dear woman!

[Kandiah Thillaivinayagalingam]

1 comments:

  1. ஒரு வஞ்சகி யிடம் கூறுவது போல் இந்த உலகின் பெரும்பான்மை வஞ்ச கர்களை படம்போட்டு வரைந்துள்ளீர்கள்.பாசாங்கு,பொய் நம்பிக்கை,மனித நேயமற்ற,குறுகிய மனப்பான்மை,அறியாமை என பலதும் விலங்குகளில் காண முடியாத வை .

    ReplyDelete