குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்

இந்த உலகத்தில் வாழ தன்னம்பிக்கை மிக அவசியமான ஆயுதமாகும். உங்கள் குழந்தை தன்னை பற்றி எவ்வாறு சுய மதிப்பீடு செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை அன்பாகவும், திறமை வாய்ந்தவனாகவும் திகழ்கிறான் என்றால் வாழ்கையில் கண்டிப்பாக சாதிப்பான் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
பிள்ளைகளை சாதனையாளர்களாக்க பெற்றோர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யோசியுங்கள். எந்த வழியில் அவர்களை சாதிக்க வைக்கலாம் என்று பெற்றோர்கள் சிந்தித்தாலே போதும் பிள்ளைகளுக்கு ஊக்கம் தானாகவே வந்து விடும்.
உங்கள் குழந்தை வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கலாம், போட்டிகளில் வென்று ஏதேனும் பரிசு பெற்றிருக்கலாம், அது சிறிய பரிசாக இருந்தாலும் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் ஊக்குவிக்க வேண்டும் அப்போது தான் தொடர்ந்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
சில மாணவர்கள் நான் கருப்பாக இருக்கின்றேன், குள்ளமாக இருக்கின்றேன் மற்ற மாணவர்களை போல் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது என்று தன்னை தானே தாழ்த்திக் கொண்டு எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார்கள், அது மிகவும் தவறான விஷயமாகும். நம்மை பற்றி நாமே தாழ்வு மனப்பான்மை வரவழைத்துக் கொள்ள கூடாது.
பெற்றோர்கள் தன் பிள்ளைகளை பற்றி மற்றவரிடம் கூறும் போது அவனுக்கு அதெல்லாம் தெரியாது, அவனுக்கு வராது, அவன் அப்படி தான் என்று குறைத்து கூறுவர். அவ்வாறு கூறும் போது சக மாணவர்கள் அவனை கிண்டலும், கேலியுமாக பார்ப்பார்கள், அந்த இடத்தில் அவனுக்கு அவமானம் தான் ஏற்படும். பெற்றோர்கள் அவ்வாறு இல்லாமல் அவனால் சாதிக்க முடியும், நாங்கள் அதற்கு துணையாக இருப்போம் என்று ஊக்கப்படுத்த வேண்டும்.
தன் பிள்ளைகளால் எதையும் சாதிக்க முடியும் என்று பெற்றோர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், எந்த விதமான சூழலிலும் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையை வரவழைக்க வேண்டும். எல்லா துறையிலும் உன்னால் சாதிக்க முடியும், உன்னால் முடியாதது எதுவுமில்லை என்று பெற்றோர்கள் உற்சாகபடுத்த வேண்டும்.
நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அஸ்திவாரம். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு வாழ்கையின் முன்னேற்ற படிக்கட்டுகளாக இருங்கள். வெற்றி தானாக உங்கள் பிள்ளையை வந்குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் வாழ தன்னம்பிக்கை மிக அவசியமான ஆயுதமாகும். உங்கள் குழந்தை தன்னை பற்றி எவ்வாறு சுய மதிப்பீடு செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை அன்பாகவும், திறமை வாய்ந்தவனாகவும் திகழ்கிறான் என்றால் வாழ்கையில் கண்டிப்பாக சாதிப்பான் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
பிள்ளைகளை சாதனையாளர்களாக்க பெற்றோர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று யோசியுங்கள். எந்த வழியில் அவர்களை சாதிக்க வைக்கலாம் என்று பெற்றோர்கள் சிந்தித்தாலே போதும் பிள்ளைகளுக்கு ஊக்கம் தானாகவே வந்து விடும்.
உங்கள் குழந்தை வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கலாம், போட்டிகளில் வென்று ஏதேனும் பரிசு பெற்றிருக்கலாம், அது சிறிய பரிசாக இருந்தாலும் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் ஊக்குவிக்க வேண்டும் அப்போது தான் தொடர்ந்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
சில மாணவர்கள் நான் கருப்பாக இருக்கின்றேன், குள்ளமாக இருக்கின்றேன் மற்ற மாணவர்களை போல் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது என்று தன்னை தானே தாழ்த்திக் கொண்டு எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார்கள், அது மிகவும் தவறான விஷயமாகும். நம்மை பற்றி நாமே தாழ்வு மனப்பான்மை வரவழைத்துக் கொள்ள கூடாது.
பெற்றோர்கள் தன் பிள்ளைகளை பற்றி மற்றவரிடம் கூறும் போது அவனுக்கு அதெல்லாம் தெரியாது, அவனுக்கு வராது, அவன் அப்படி தான் என்று குறைத்து கூறுவர். அவ்வாறு கூறும் போது சக மாணவர்கள் அவனை கிண்டலும், கேலியுமாக பார்ப்பார்கள், அந்த இடத்தில் அவனுக்கு அவமானம் தான் ஏற்படும். பெற்றோர்கள் அவ்வாறு இல்லாமல் அவனால் சாதிக்க முடியும், நாங்கள் அதற்கு துணையாக இருப்போம் என்று ஊக்கப்படுத்த வேண்டும்.
தன் பிள்ளைகளால் எதையும் சாதிக்க முடியும் என்று பெற்றோர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும், எந்த விதமான சூழலிலும் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையை வரவழைக்க வேண்டும். எல்லா துறையிலும் உன்னால் சாதிக்க முடியும், உன்னால் முடியாதது எதுவுமில்லை என்று பெற்றோர்கள் உற்சாகபடுத்த வேண்டும்.
நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அஸ்திவாரம். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு வாழ்கையின் முன்னேற்ற படிக்கட்டுகளாக இருங்கள். வெற்றி தானாக உங்கள் பிள்ளையை வந்து சேரும்.

0 comments:

Post a Comment