வாழ்வில்ஆணவம்

நிலையற்ற வாழ்வில் 
இறப்பு நிச்சயம் என் தெரிந்தும்
கிடைப்பதற்கு
அரிய திறமையையும் வசதியும் கிடைக்கும் போது
பெருமை கொள்வதால் வந்து சேரும்
ஆணவ உருக்களை
 அழித்துவிடாமல் மனதில் கருக்கொண்டால்
அவை உன் மனதின்
 அமைதியை நிலை குலைய செய்துவிடும்-மனமே
நீயும் ஆணவம் கொள்ளாதே
நீ கொண்ட ஆணவம்
 பிற உயிர்கள் மீது வழிந்து ஓடும் போது
உயிர்கள்  மனதில்
  ஆயிரம் இடி மின்னல்களை உண்டாக்கி
 கண்ணீரை மழையாக பெய்ய வைக்கின்றது மனமே -
அது உன் வாழ்வை கொன்றுவிடும்
நீயும் உன் ஆணவ கருக்களை களைந்து
உயிர்கள் மீது கருணை கொள்வாய் எனின்
உயிர்களும் மகிழ்வு கொண்டு
உன் மீது அன்பு மழை பொழிந்து நிற்கும் மனமே
நீயும் உன் ஆணவ கருவை கலைத்துவிடு
உன் வாழ்வும் மகிழ்வு பெறும்.
அகிலன்,தமிழன்.

0 comments:

Post a Comment