சாதியமும் தீண்டாமையும்
தீண்டாமையை உயிர் என கொள்ளும் மானுடா,
நீ எல்லாம்  புரிந்தவனாய் இருந்தாலும்  
சாதி கொடுமையை மட்டும்
 கைவிட ஏனடா மறுக்கிறாய்  ?

மனித உயிர்கள்  எல்லாம்
 ஒரு நாள் மரணித்துத் தான் போகிறது
நீயோ அதற்கிடையில்நம்
 முன்னோர்கள் தங்கள் சுய நலத்துக்காக 
உருவாக்கிய தீண்டாமை என்ற நஞ்சை
 உன்னில் பரம்பரையாக சுமந்து  
சாதி என்ற விதைகளை  பரப்பி 
சமூககத்தில் சாதி வெறியை   தூண்டி ,
வேற்றுமையை உருவாக்கி 
அமைதியை நிலை குலையச்  செய்து
வேடிக்கை பார்க்கிறாய் 
 இது உனக்கு நியமமோ  ?

இறைவனின் படைப்பில் 
மானிடன் என்பவன் ஒரு அதிசய பிறவி !
அவனுக்கிடையில் 
ஒற்றுமை இன்றி வாழ்வது எங்ஙனம்?
பூமியும் தான் எப்படி அமைதி பெறும் ?

உன் சாதியிலும் சரி 
அடுத்தவன் சாதியிலும் சரி இருப்பது 
ஒரே உணர்வே 
உன்னுடைய ரத்தமும் சிவப்பு  
அவனுடைய ரத்தமும் சிவப்பு 
இயற்கையும் பூமியும் 
சாதி பார்ப்பதில்லை 
நீ மட்டும் ஏனடா 
தீண்டாமையை கொண்டு 
மனிதனை அடக்கி ஆளப் பார்க்கிறாய் ?

மானிடா உன் மனதில் 
இனியும் வேண்டாம் 
சாதியமும் தீண்டாமை வெறியும் !
இனியாவது மானிடனின் வாழ்வும்  
செழித்து அழகாக   வேண்டும் !
 உன் சாதிய நஞ்சுகளை தினமும் சுமக்காமல் 
அதை அழித்துவிடு !

-ஆக்கம்:அகிலன் ,தமிழன் -

0 comments:

Post a Comment