நீ இல்லாமல் யாரோடு...

                                               [கண்ணதாசனுடன்  கலக்கல்-02]
கண்ணதாசனின் வரிகளைப் படிப்பவன் தமிழ்மொழி கற்க கல்விக்கூடம் செல்லத்தேவையில்லை.  இலகுவான மொழிநடையும்.ஆழமான கருத்துக்களும் ,கவி நயத்துடன் கலந்துவிடடால் சொல்லவும் வேண்டுமா!அவற்றில் அவர் படைப்பினை வேறு விதமாக  இரண்டாவது பகுதி வீடியோ வாக வெளியிடுவதில் தீபம்  பெருமை கொள்கிறது.
 படம்இரு வல்லவர்கள் (ஆண்டு 1966[click play button to play video] 

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்

மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

---------------------------------------------------------------
நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்                                  
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

-------------------------------------------------------

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத                                            
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
                :கலப்பு : செல்லத்துரை,மனுவேந்தன் 

0 comments:

Post a Comment