🗺→ செய்திகள் 16-02-2020

வேலணைக் கிழக்கு – 3ஆம் மற்றும் 4ஆம் ஆகிய வட்டாரங்களில், குடியேற்றத் திட்டக் காணிகளில், அரசாங்கத்தால் மீளவும் கையகப்படுத்தப்படவுள்ள காணிகள், மற்றும் உரிமையாளர்கள் நாட்டில் இல்லாத காணிகள் , காணியற்றவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
மோசடியான முறையில் எரிபொருள் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கஹவத்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பஞ்சாப் - சங்ரூர் மாவட்டத்தில்  தனியார் பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்ததில்  10 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட 4 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 355 ஆக உயர்ந்து உள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவில்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 1631  ஆக உயர்ந்துள்ளது. 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவில் இருந்து பிரான்ஸ் நோக்கி சுற்றுலா பயணம் சென்றிருந்த நபரொருவர் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கை இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவினுள் நுழைய அந்நாட்டினால் தடை விதிக்கப்பட்டமையை பேர்ள் அமைப்பு வரவேற்றுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சென்னையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவிற்கு பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்த தடைக்கு கடும் ஆட்சேபனை தெரிவிப்பதுடன், தகவல் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், அதன் முடிவை பரிசீலனை செய்யவும் அமெரிக்காவை நாம் கோருகிறோம் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று  தெரிவித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
குறைவான ஆவணங்களை சமர்பித்து இத்தாலி வழியாக போர்த்துகலுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த 35 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். பதிலுக்கு அவர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் இணை கமிஷனர் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கேரள மாநிலத்தில், பால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து கூடுதலாக அனுப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூரை சேர்ந்த- வயிறு மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்த- 50 வயதான பாலகிருஷ்ணய்யா என்பவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனா சென்று திரும்பிய வட கொரியாவை சேர்ந்த வர்த்தக பிரமுகர் ஒருவர் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர் கொரிய அதிகாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸால் உண்டாகும் கிருமித் தொற்று மேலும் தீவிரமடையும் பட்சத்தில், பள்ளிகளை மூடுவது, ஒரே இடத்தில் திரளான மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மலேசிய அரசு தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவின் ஹூபே மாகாணத்தில் வைரசுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை  1,400 ஆகவும், 65,400 பேருக்கு நோய் தொற்று இருப்பதாகவும்  உறுதி செய்யப்பட்டுள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவின் வுஹான் நகரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தியதலாவ இராணுவ முகாமின் விசேட மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களும், 14 நாட்கள் சோதனையின்  வீடுகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
அருகில் இருப்பவருக்கு நோய் பாதிப்பு இருக்கா? என்பதை கண்டறிய புதிய மொபைல் ஆப் ஒன்றை சீன் அரசு வெளியிட உள்ளது. இந்த ஆப்பானது தங்களுக்கு அருகில் ஒன்று முதல் மூன்று கிலோ மீட்டர் தூரம் உறுதிபடுத்தப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கு அடிப்படையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கிறார்களா? இல்லையா என்பதை காட்டும் என்று கூறப்படுகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
யாழ் – சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
இலங்கை ப்  பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை அனைத்து வகையான  பட்டதாரிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
பல நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலையின் வகுப்பறை ஒன்றை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது மாணவர்களின் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள் ஏற்பட தொடங்கியதன் காரணமாக 15 மாணவர்கள் இன்று (14) காலை கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியை காபற் வீதியாக அமைக்கும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
ஹட்டன்- அட்டன், சிங்கமலை காட்டுப்பகுதியில் தீ காரணமாக  சுமார் 5 ஏக்கர் வரையான நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்கள் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களின் எல்லைகளை  பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கூறியுள்ளார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகள் அளிக்கப்படுகிறது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
சிங்கப்பூரில் உள்ள டி.பி.எஸ். என்னும் ஒரு மிகப்பெரிய வங்கி, ஒரு ஊழியருக்கு கொரோனா [covod-19] வைரஸ் தாக்கியதால் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் வேலை செய்யும் 300 பேரையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரம் புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன’, என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
சென்னை மாநகரில் பொதுமக்கள் நலன் கருதி இன்று முதல் 15 நாட்களுக்கு போராட்டம் மற்றும் பேரணி நடத்த தடை என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அறிவித்துள்ளமை அரசியல் வாதிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம்  அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு  13 பேருடன் சென்று கொண்டிருந்தபோது காணாமல் போன் நிலையில்  எட்டு நாட்கள்   தேடுதலின் பின் சிதைந்த நிலையில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
பஞ்சாப் மாநிலம் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர்  ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  அவசரமாக விவசாய நிலத்தில் தரையிரக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
ஜப்பான் நாட்டில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
48 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்காக கட்டணம் அறவிடப்படாமல் விசா அனுமதி வழங்கும் முறை  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
4 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போலியான நாணயத்தாள்கள் மற்றும் போலியான தங்கப் பாளங்களை கடத்திய இருவர் அனுராதபுரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அண்மையில் அமைக்கப்பட்ட வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால்  நேற்று (12) நள்ளிரவு உடைத்தெறியப்பட்டுள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎  
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோச்சாரதி ஒருவர் வாயில் சிகரெட்டுடன், தனது ஓட்டோவுக்கு பெட்ரோல் நிரப்பியபோது சிகரெட்டிலிருந்து பெற்றோல் தீ பற்றிக்கொண்டதால் கருகி மரணமடைந்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு இடையிலான போட்டியின் விளைவாகக்  குண்டு வெடித்து பல வக்கீல்கள் காயம் அடைந்தனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 

தமிழகத்தில் போலியாக வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கையாக  அதைத்  தடுக்கும் வகையில் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
'கொரோனா' வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, சத்தியமங்கலம் இன்ஜினியர் கண்டுபிடித்த 'மாஸ்க்' குக்கு, அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் நோய் தொற்றில் இருந்து, 95 சதவீதம் காத்துக் கொள்ள முடியும்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் ´ஒன்றிணைந்த மக்கள் சக்தி´ என்ற கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட தயார் என ஜாதிக ஹெல உருமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காக , நெல் சந்தைப்படுத்தல் சபை, கடந்த இரண்டு வார காலத்திற்குள் வட,கிழக்கில்  நெல்லை கொள்வனவு செய்வதற்கு இலங்கை இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியா-இலங்கை இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியாகி உள்ளனர். 31 பேர் காயமடைந்து உள்ளனர். 
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் கவர்னரின் எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரத்தின் மகள் அர்ச்சனா சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.23 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆடிட்டர் கைது செய்யப்பட்டார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பெங்களூரில்  கட்டி ஐந்தே வருடமான 5 மாடி கட்டிடம் ஒன்று  திடீரென பைசா நகரத்து கோபுரம் போலவே  சாய்ந்து கொண்டதால்   உடனடியாக கட்டிடத்தில் வாழ்பவர்கள்  வெளியேற்றப்பட்டார்கள். கட்டிடத்தின் உரிமையாளர், கட்டிடத்தை கட்டிய காண்ட்ராக்டர் மேல் விசாரணைகள் தொடர்கின்றன.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சமீபத்தில் அமல் செய்யப்பட்ட குடியுரிமை சீர்திருத்த சட்டத்தால்  பெங்களூரில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் சிலர் குடி இருந்ததாக சொல்லப்பட்ட ஒரு பகுதியில் உள்ள 100 வீடுகளை மாநகராட்சி நிர்வாகம் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தள்ளியது
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் முக்கிய தகவல்களை, அமெரிக்கா, பல ஆண்டுகளாக உளவு பார்த்து வருவதாக, அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பகிடிவதைக் குற்றச்சாட்டில் பல்கலைக்கழகம் நுழைய இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் மானிப்பாய் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
திருகோணமலை-நல்லூரரில், பிறந்து 26 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில்  தாய் அன்டன் நிலோஜியினால் சளிக்கு மருந்து எடுத்த நிலையில் குழந்தை அன்றிரவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
புத்தளம் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கொரோனா வைரஸ் இனிமேல் கொவிட்-19 என்ற புதிய பெயருடன் அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையின் தென் கிழக்காக இந்து சமுத்திரத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பம்பலப்பிட்டி யில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்து, விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 8 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின் நாடுகடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையில் ரயில் பயணிகளுக்கு இலத்திரனில் அட்டை அறிமுகம் செய்ய திட்டம் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் பிரவேச அட்டையை அறிமுகப்படுத்துவதற்கும், ரயில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கு Online முறை ஒன்றை அறிமுகம் செய்வதற்கும் கட்டமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 2 பேருக்கு தற்போது வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புசெழியனின் ஆடிட்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
நீட்’ தேர்வு முறைகேடு வழக்கில், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளின் புகைப்படத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அண்ணா சாலையில் அடுத்த மாதம் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் 2 சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட உள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தனுஷ் இயக்கும்  ’பா பாண்டி-02’திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கவுண்டமணி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவில் இருந்து பிரிட்டன் வந்த ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர், பிரிட்டனில் உள்ள இரு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அந்த மருத்துவர்கள் உறுதி செய்த போது, அந்த இரு மருத்துவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.கோடி போதை மருந்து பொருட்களை இந்திய     மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கடந்த 06 ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து திருகோணமலை - நிலாவெளி  6ம் கட்டை பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயனன் வளாகத்தில்  பூசகரின் உதவியாகத்  தங்கியிருந்த 19 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (10) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு மருத்துவக் குழுவை அனுப்பி உள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் ராகிங் காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பிலும் அங்கு மாணவிகளுக்கு தொலைபேசி மூலமான பாலியல் தொந்தரவுகள் இடம்பெற்றமை தொடர்பிலும் ஜனாதிபதி மட்டத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
நடிகர் விஜய்யின் வீடுகளில் ,சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, விசாரணை நடத்த, வினாக்களுடன் தயாராக இருந்த வருமான வரி அதிகாரிகள், நடிகர் விஜய் உட்பட யாரும் வராததால், விசாரணையை தள்ளி வைத்தனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வரும் பொதுத்தேர்தலில், தான் போட்டியிடுவதற்காக, வேப்பன ஹள்ளி சட்டபை தொகுதியை, ரஜினி குறிவைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது உள்ளிட்ட அனைத்து மத விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ரூ.66 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 576 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கோவைக்கு புறப்பட்டு சென்ற விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில், மீண்டும் அவசரமாக தரையிறக்கப் பட்டது
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சிரியாவில் அரசு படை நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 20 பேர் பலியாகினர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தொடர்ந்து 4-வது முறையாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈரான் தோல்வியடைந்தது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
எகிப்தில் பயங்கரவாத தாக்குதலை முறியடித்த ராணுவ வீரர்கள் 10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வுஹான் - கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளில்  பெப்ரவரி 9 ஆம் திகதி வரை 910 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும்  அதிகபட்சமாக 97 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை சுமார் 40,553 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 3,324 பேர் குணமடைந்துள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

பகிடிவதை குறித்து ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நியமிக்கப்பட்ட குழு இதற்கான நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. இந்த குழு தமது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பல்கலைக்கழக மாணவர்களின்  பகிடி வதை தொடர்பாக அரசாங்கம் கடும்  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன்  ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்தினை ,உயர் கல்வி அமைச்சினை சந்தித்து தெரிவித்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் என எமது வாசகர் விசனம் தெரிவித்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கிளிநொச்சி – அக்கராயன் பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் இன்று (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுப்பட்டது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கை ஜனாதிபதியின் வளமான நாடு சௌபாக்கியமான எதிர்காலம் என்ற எண்ணக் கருத்திட்டத்திற்கு அமைய ,நாடுபூராகவும் வீதிகளில் இருமருங்குகளிலும் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வீடு, அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட   கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள்  குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் உள்பட 3 பேருக்கு 3 நாட்களுக்குள் ஆஜராகும்படி வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
டெல்லியில் விமான, ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ரூ.470 கோடி வரி மோசடியில் ஈடுபட்டது, கண்டுபிடிக்கப்பட்டது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதிக்கு பிறகு சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஜார்கண்ட் மாநிலத்தில் கும்கர் டோலி என்ற இடத்தில்  காந்தி சிலையை சமூக விரோதிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தினர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திசா என்ற புதிய சட்டத்தை முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அங்குள்ள மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு பதிலாக ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் மழை பெய்து வருகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணம் கிளின்டன் நகரில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 6 குழந்தைகளுடன் பெண் உயிரிழந்தார். கணவர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (09) கைச்சாத்திடப்பட்டது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
நடிகர் விஜய்யின் வரி செலுத்தாத , சர்வதேச வங்கிகளில் குவித்து வைத்துள்ள 1200  கோடிகளுக்கும் மேல் உள்ள   சொத்துக்கள் தொடர்பாக வருமானத்துறை  அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தாய்லாந்து நாட்டில் 26 பேரை கொன்ற ராணுவ வீரர் 17 மணிநேர போராட்டத்திற்கு பின் இன்று சுட்டு கொல்லப்பட்டார்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வடைந்து உள்ளது. சீனா முழுவதும் 36,690 பேருக்கும் கூடுதலாக நோய் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
குண்டுவெடிப்பு இடம்பெற்ற முல்லைத்தீவு – சிலாவத்தை வீட்டிலிருந்து மேலும் சில வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் பூட்டி இருந்த குறித்த வீடு பொலிஸார் சோதனை செய்த நிலையில் சுமார் மூன்று கிலோவுக்கு அதிகமான வெடிமருந்து பொருட்கள் வீட்டினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்துக்களின் தைப்பூச தினத்தையொட்டி மாபெரும் மாட்டு வண்டி சவாரி இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்கத்தினர் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழக காவல் துறைக்கு ரூ.84 கோடிக்கு வாக்கி-டாக்கி உள்ளிட்ட கருவிகள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக 14 போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சென்னையில் கொசுக்கள் தொல்லை குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் வேளையிலும் பாய்ந்து, பாய்ந்து கடிக்கிறது. மக்கள் விசனம்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
திருப்பூர்: 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, சீனாவில் இருந்து தமிழகம் வந்த, 1,603 பேர் தொடர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர் என்று, சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறினார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பஞ்சாபில் சீக்கிய ஊர்வலம் ஒன்றில் பட்டாசு ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டர் ட்ரோலி வெடித்ததில் இருவர் பலியாகினர். இதில் 9 பேர் காயம் ஏற்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அமெரிக்காவில் டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையில், அவருக்கு எதிராக சாட்சியம் அளித்த மூத்த அதிகாரிகள் 2 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தாய்லாந்து நாட்டில் ராணுவ வீரர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஜப்பானில் சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் மூடப்பட்டதால், மாற்று வழியாக கடல் மேல் மிதக்கும் காற்றாலை அமைத்து மின் உற்பத்தி செய்ய புதிதாக திட்டமிடப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 18.3 செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் அண்டார்டிகாவில் 87% பனிப்பாறைகள் இதுவரை உருகியுள்ளன என உலக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
யாழ்ப்பாணத்தில அமைந்துள்ள பிரபல ஹோட்டலான ரஹ்மான் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் முழு கரப்பான்பூச்சி ஒன்று கிடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்யுமாறு இந்தியா வந்துள்ள ராஜபக்சேவை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இ.போ.ச. பஸ்களில் கட்டண டிக்கட் மோசடி காரணமாக தினசரி ஒரு கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பஞ்சாபில் 3 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவுதி அரசாங்கத்தின் நிவாரணத்தில் , 15 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பாறை  மாவட்டத்தில் அமைக்கப்பட்ட, சுமார் 500 வீடுகள் இன்னும் உரிய மக்களிடம் அளிக்கப்படவில்லை என தெரியவருகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி இதுவரை 396 கடற்படை உறுப்பினர்கள் கடற்படை முகாம்களில் சரணடைந்துள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஜேர்மனி நாட்டின் உயர் மறை மாவட்டத்தின் நிதி உதவியுடன், மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவின் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணியில் 50 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஆபாச படங்கள் நாட்டிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகும் என்றும், அதனை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சிரியாவில் ராணுவத்தின் ஏவுகணை வீச்சில், சிரியா-டமாஸ்கஸ் வில் தரையிறங்க வந்த 172 பயணிகளுடன்,ஏர்பஸ் 320 ரக விமானம் ஒன்று தப்பியது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மேலும் 41 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கொரோனா வைரஸ் பரவல் ஏற்படும் முன்னரே அதற்கான வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்த இளம் மருத்துவரின் மரணம் சீன மக்களிடையே கடும் கோபத்தை தூண்டியுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஸ்ரீவில்லிப்புத்தூரில் உரிய விவரங்களை சொல்லாமல் வீட்டை பூட்டி விட்டு போனால் பொறுப்பேற்க முடியாது என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அயோத்தி அருகே மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட இடம் தொலைவில் இருப்பதாக அயோத்தி வழக்கின் முஸ்லிம் மனுதாரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் இம்மாதம் 24-ம் தேதி டிரம்ப் இந்தியா வருகை தர உள்ளதாகவும், இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் உள்ளிட்டோரை டிரம்ப் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தேரர்கள் ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்க கூடாது என இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி மாலை வரை திருக்கேதீஸ்வரத்தில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பதற்கான அனுமதியை மன்னார் மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பகுதியில் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஈழப் போராட்ட காலத்தில் திரைப்படத் துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியவரும் முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவரும் எழுத்தாளருமான முல்லை யேசுதாஸன் இன்று (07) அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் மாரடைப்பினால் காலமானார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் பாலாகோட் முகாமில் 27 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான  குழு  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்க ஆய்வகத்தில் வைரஸின் முதல் தொகுப்பை உருவாக்கி வெற்றிகண்டுள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து புறப்படும் மற்றும் சீனாவுக்கு செல்லும் விமானங்களை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்து விட்டதால், விமான நிறுவனத்தில் பணியாற்றும் 27 ஆயிரம் ஊழியர்களையும் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துக்கொள்ள அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சுவிட்சர்லாந்தில் புதுவகை கால்நடை நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பசு ஒன்று கொன்று எரிக்கப்பட்டது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமான முறையில் பாயன்படுத்தும் அல்லது தம்வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைப்பதற்கான ஒரு வார கால (பெப்ரவரி, 5 முதல் 12 வரை) நிவாரண காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகத்துக்கு அருகில் சுமார் 50 ஏக்கர் காணியை இலங்கை துறைமுக அதிகார சபையிடம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
நாட்டின் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்புவதற்காக இறக்குமதி செய்யப்படும் தெலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
இலங்கை-வெலிக்கடை சிறைச்சாலையில் மர்ம காய்ச்சலால் இருவர் உயிரிழந்த நிலையில் இன்புளூவன்ஸா காய்ச்சல் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அண்மை காலமாக பகிடிவதை தொடர்பான பல குற்றச்சாட்டுக்களும், சம்பவங்களும் நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டு, பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்த ஆண்டின் ஐந்தாவது வாரத்தில், இன்ஃபுளூவென்சா வைரஸ் மூலம் பரவும் காய்ச்சலால் பிரான்ஸில் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். 810 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பந்தலுார் அருகே, 1,000 ஆண்டுகள் பழமையான மகா விஷ்ணு கோவிலில் சிலையில் இருந்த தங்க ஆபரணங்கள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், உண்டியல் பணம், சிலைகளை திருடியுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
துருக்கியில் அடுத்தடுத்து பயங்கர பனிச்சரிவுகள் ஏற்பட்டதில் மீட்பு குழுவினர் உள்பட 38 பேர் பலியாகினர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஈரானில் கடந்த 11 மாதங்களாக சிறை பிடித்து வைக்கப்பட்டு இருந்த கப்பலில் இருந்து 6 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பொலிஸ் உத்தியோகத்தரான மட்டக்களப்பு, புதூர் 7 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 55 வயதுயுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை சிவராசா -  வீதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆயித்தியமலை தேவாலய வீதயைச் சேர்ந்த  முகமட் அஸ்மி, வவுணதீவு, நாவற்குடா, ஈச்சந்தீவைச் சேர்ந்த குணசேகரன் சுரேந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
  நடிகர் விஜய்யின் அனைத்து வீடுகளிலும் வருமான வரி துறை அதிகாரிகளிள்  2 ஆவது நாளாக விடிய விடிய சோதனை மேற்கொண்டதில்  77 கோடி ரூபாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுகிறது.

 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அயோத்தியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் மசூதி கட்ட சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கியது
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கை பிரதமர் ராஜபக்சே 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது தடைப்பட்டுள்ள கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளை துரிதமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கை-தபால் திணைக்களம் கடிதங்களை விநியோகிப்பதற்காக தபால் ஊழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்கவுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சபரிமலை கோவில் நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக்கூடாது? - பந்தளம் அரச குடும்பத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வியெழுப்பியுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியா-தனியாக வாழும் முதியோர்களுக்காக பராமரிப்பு இல்லம் அமைக்கவும், இதற்காக புதிய சட்டம் கொண்டுவரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் கூறினார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சர்ச்சைக்குரிய நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில், ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமினை, கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று(பிப்.,5) ரத்து செய்ததால், அவனை  கைது செய்ய, கர்நாடக சி.ஐ.டி., போலீசார் தயாராகி வருகின்றனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வருமானத்தை மறைத்த விவகாரத்தில் ரஜினிகாந்திடம் குறைந்தபட்ச அபராதமாக ரூ.66.22 லட்சம் வசூலிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பிறநாடுகளில்  பரவி  மலேசியா மற்றும் பெல்ஜியத்தில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அமெரிக்காவில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான பியூர்டோ ரிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
துருக்கி நாட்டில் விமான நிலையத்தில்   தரை இறங்கும் பொழுது பலத்த மழை ,காற்று காரணமாக  ஓடுபாதையில் இருந்து விலகி  இரண்டாக உடைந்த நிலையில் விமானம்  தீ பற்றிக் கொண்டதால் பேர் பலி, 179 பேர்  காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கிட்டத்தட்ட பத்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது⤋.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கோண்டாவில் புகையிரதநிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் , றிஸ்வினி (17) எனும் மாணவி தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைமுகங்களிலிருந்தும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெற்றிகரமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீமெந்தைப் பயன்படுத்தாது களி மண்ணை மூலப்பொருளாகக் கொண்டு சுற்றாடலுக்கு பொருத்தமான வகையில் நாட்டில் அமைக்கப்பட்ட முதலாவது நட்சத்திர ஹோட்டல் சிகிரியாவில் இன்று (05) திறக்கப்பட்டுள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
முகநூலில் வெளியான காணொளியினைப்  பின்பற்றி, இலங்கை- கம்பஹா பகுதியில் குறிப்பிட்ட இலையின் சாற்றை பருகி மருத்துவம் செய்த நபர் ஒருவர்  பரிதாபமாக  பலியாகியுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வுஹானில் இருந்த இலங்கையர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்கள் தமது சேவைக்கான கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையின்  சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட 679 கைதிகளில்,   யாழ். சிறைச்சாலையில் இருந்து  ஒரு பெண் உட்பட17 பேர் அடங்குவர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியா நிறைவேற்றியுள்ள CAA  தவறானது என்றும் ஐரோப்பிய யூனியன் ஒரு தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
3 ஆண்டுகள் ஆகியும் ,ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவின் உகான் நகரில் இருந்து  வைரஸ் பீதியால் கடந்த 15-ந்தேதி கேரளா திரும்பிய 2 மாணவர்கள் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறி, வளைகுடா நாட்டுக்கு தப்பியோடி விட்டனர் எனத் தெரியவருகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த 11 பேர் வீடு திரும்பியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 2 பெண்கள் பலியாயினர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கனடாவில் குடியேறிய ஹாரி-மேகன் தம்பதிக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவதற்கு பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கென்யாவில் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலியாகினர், 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும் , கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்று கொண்டிருக்கும் 72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில்  ஜனாதிபதி  உரையாற்றினார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையின் 72 வது சுதந்திர தினமான இன்று (04) யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னால் கறுப்பு கொடிகளுடன் பதாதை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்து, சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 6 சிறைக்கைதிகள் இன்று (04) காலை விடுதலை செய்யப்பட்டனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனா- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு தங்கியிருந்த 717 இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் 10 மாணவர்கள் இன்று (04) இரவு இலங்கை வரவுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையின் இளைஞர் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
⤊ஹொங்கொங்கில் இருந்து 2600 பயணிகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ள சொகுசு கப்பல் ஒன்றில் ஜப்பான் வந்த 80 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்ததால் கடலில் கப்பல்  வைத்திய பரிசோதனைகளுக்காக தனிமைப் படுத்தப்பட்டுளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வடக்கில்   கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை  முறியடிக்கும் நோக்கத்தில் ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
திருகோணமலை - டைக் வீதி கடற் பகுதியில் நீராடச் சென்ற மாணவன் [18 வயதுடைய ஜெரோம்] கடலில் காணாமல் போய் சுமார் 1 மணித்தியாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
புதுக்குடியிருப்பு, கைவேலி, கணேசா வித்தியாலய மைதானத்தில் விளையாட்டுப் போட்டிக் கொடிகம்பம் நாட்டுவதற்கு கிடங்கு தோண்டிய போது ஆழத்தில் காணப்பட்ட  வெடிபொருள் பெட்டிகள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
வட மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்வாங்கி பாராளுமன்ற தேர்தலில் ஓர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என வடக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஆஸ்திரேலியா- சிட்னி  வீதியின் சாலையோர நடைபாதை மீது அதி வேகத்தில் பாய்ந்த கார் நடந்து சென்று கொண்டிருந்த  சிறுவர், சிறுமிகள் மீது மோதியதால்   8 முதல் 12 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகளும், 13 வயது சிறுவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 சிறுமிகளும், ஒரு சிறுவனும் பலத்த காயம் அடைந்தனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியா -ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து பலியாவது தொடர்பான பொதுநல வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வெளி நடப்பு செய்தன.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர் களை குறிவைத்து துப்பாக்கியால் சூடும் சம்பவம் தொடருவதால் அங்கு பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் போட்டு கொண்டு நேர்மையான முறையில் சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்காதவர்களே இன்று வரலாற்று பக்கங்களில் இடம் பிடித்துள்ளனர் என கர்நாடக மாநில எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே பெங்களூருவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சென்னை: 'தர்பார்' படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி, வினியோகஸ்தர்கள் பலர், நேற்று ரஜினி வீட்டை முற்றுகையிட்டனர். '
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினோ பாசோவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர்[ms1] .
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தாய்லாந்தில் ப்ளூ காய்ச்சலுக்கு எதிராக கொடுக்கப்படும் மருந்துகள், ஹெச்ஐவி நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் போன்றவற்றை கலந்து கொடுத்து, கொரோனா வைரஸ் நோயை 48 மணி நேரத்தில் குணப்படுத்தி வெற்றி கண்டுள்ளதாக தாய்லாந்து டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தொழில்வாய்ப்பற்ற சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட வைபவத்துக்காக நாளைய தினம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் , இறைச்சி விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழகம் -டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழகம் -குரூப்-4 தேர்வில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான சப்-இன்ஸ்பெக்டர் சித்தாண்டி கோடீஸ்வரராக மாற வேண்டும் என்ற ஆசையில் குரூப்-4 தேர்வில் மோசடி செய்து 200-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஆந்திராவில்  உப்பிடி கிராமத்தில் 12 மணி நேரமாக பயங்கர ஓசையுடன் நிலத்தடி பைப் லைனில் இருந்து கசிந்து வெளியேறும் வாயு காரணமாக  பீதி அடைந்த கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
திருகோணமலை ஐக்கிய பொதுச் சந்தை வளாகத்தில் வாராந்த சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (02)  வர்த்தகர்களினாலே தமக்கு பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படுவதாக கூறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு  திறக்கப்பட்ட சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சந்தேகத்தில் சீனாவைச் சேர்ந்த 8 பேர் உள்பட மொத்தம் 10 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பெண்கள் நடத்தும் தொடர் தர்ணா போராட்டம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ள பாகிஸ்தான் மாணவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என சீனாவிடம் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதை அடுத்து அங்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நடந்த, கிறிஸ்துவ மத கூட்டுப் பிரார்த்தனையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 20 பேர் உயிரிழந்தனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பொத்துவில் பிரதேசத்தில் நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்த இந்தியா, தமிழ்நாடு-பாம்பன் ஓடை- 42 வயதுடைய வீரையா நடராஜன் என்பவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவில் இருந்து கொண்டுவந்து தியதலாவை இராணுவ வைத்திய சாலையில் வைத்திய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட் ட மாணவர்கள்மீது   மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் எந்த விதமான நோய் வைரஸ் அறிகுறிகளும் கண்டறியப்படவில்லையென பொது சுகாதார நிபுணரான டொக்டர் செமஹே தெரிவித்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக்கட்சி இணைந்து உருவாகும் ஒரே கூட்டணியின் கீழ் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அதிமுக எம்பியாக இருந்த சசிகலா புஷ்பா அதன்பின் தினகரனின் ஆதரவாளராக இருந்த நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணைய இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அமெரிக்காவில் இதுவரை எட்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அண்மையில் பிலிப்பைன்ஸ் வந்த, சீனா-வுஹான் நகரத்தை சேர்ந்த 44 வயதுடைய நபர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பாகிஸ்தானில் கோவிலை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனா- ஹுனான் மாகாணத்தில்  தற்போது ஆபத்தான பறவை காய்ச்சலும்  பரவுவதாகவும், காய்ச்சல் காரணமாக ஒரு பண்ணையில்  4,500 கோழிகள்  கொல்லப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
நாகப்பட்டினம் நாகை அருகே, பண்ணை குட்டை வெட்டும் போது கண்டெடுக்கப்பட்ட -சுவாமி சிலைக்குரிய  வளையல், மெட்டி போன்ற 40 வகையான அணிகலன்கள் - அவை, எந்த நுாற்றாண்டை சேர்ந்தது, ஐம்பொன்னா அல்லது உலோகமா என்பது குறித்து, வருவாய் துறையினர், தொல்லியல் துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியர்களை மீட்டு வர  சீனா சென்ற விமானத்தில், கடுமையான காய்ச்சல் காரணமாக விமானத்தில் ஏற சீன அதிகாரிகளால்   தடுக்கப்பட்ட 6 இந்திய மாணவர்கள் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர், இந்தியா பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியா -‘உதான்‘ திட்டத்தில் மேலும் 100 புதிய விமான நிலையங்கள் சிறு நகரங்களில் 2025-ம் ஆண்டுக்குள் அமைத்து முடிக்கப்படும்  என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியா -நாட்டில் நிலவும் மாசுப்பாட்டை குறைக்க பல இடங்களில் அனல்மின் நிலையங்களை மூட உள்ளதாக பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
 சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் விஸ்வரூபம் எடுத்து வருவதால், அந்த நாட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
புளோரிடா தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நிகழ்வில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
ஈராக் நாட்டில் அமெரிக்க ராணுவதளம் மீது பீரங்கி குண்டுகள் விழுந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

ஜப்பானில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தால், அங்கு கட்டிடங்கள் அதிர்ந்தன. மக்கள் பதற்றத்துடன் வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவின் வுஹானிலிருந்து  மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய 33 இலங்கை மாணவர்களும் தியதலாவ இராணுவ முகாமில்  இரண்டு வாரக்காலம் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கை அரசு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பிற்காக சுகாதார அமைச்சு 60 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஏர் இந்தியாவின் போயிங்  சிறப்பு விமானம் நேற்று சீனா- வுகான் நகரில் இருந்து முதல் கட்டமாக  324 இந்தியர்களை அழைத்துக்கொண்டு, இன்று அதிகாலை டெல்லி வந்து சேர்ந்தது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஏற்கனவே, தேசிய புலனாய்வு அமைப்பால்  கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையான தாவூத் என்வர், எஸ்ஐ வில்சன் கொலை குற்றவாளிகளுக்கு பண உதவி செய்த விசாரணையில் ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவை  சனிக்கிழமை, ,திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய நாட்களில் இரத்மலானையில் இருந்து காலை 7.30 ற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து காலை 8.30 ற்கும் 7500.00 ரூபா கட்டணத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அரசாங்கம்  உள்வீட்டுப் பிரச்சினைகள் தீர்வு கண்ட பின்னரே, தேர்தல் நடாத்த தீர்மானித்துள்ளதால் ஓகஸ்ட் மாதம் வரையில், எந்தவொரு தேர்தலும் நடைபெறாது எனத் தெரியவருகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையில் கட்டிட நிர்மாணப்பணிகளில் தொழிலாளர்களாக பணிபுரியும் அனைத்து சீன தொழிலாளர்களையும் அவர்களது உறைவிடத்தில் அல்லது கட்டுமான தளங்களில் இருந்து வௌியே செல்வதை தவிர்க்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இபலோகம பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 35 வயதுடைய நபரொருவரை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்ற போது குறித்த சந்தேகநபர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
மக்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்துகிறது என்று ஐ.நா. சபை பாராட்டி உள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
உத்தர பிரதேசத்தில், 23 குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டிய நபரை, போலீசார் சுட்டுக் கொன்று, குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரது மனைவியை, தாக்கியதில் அவரும் பலியானார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
புதுடெல்லி:  பொருட்கள் களவு போவதை தடுக்க சரக்கு ரயில்களில் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு படையினர் இன்று முதல் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட, கீரி, எலி , தவளை , சிலந்தி , பச்சோந்தி , ஓணான் முதலிய வன உயிரினங்களை, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பாடசாலை விளையாட்டு போட்டியின் போது மீன்-பாண் உட்கொண்ட கினிகத்தேன, கலுகல சிங்கள மகா வித்தியாலயத்தை சேர்ந்த 41 மாணவர்கள் வாந்தி, வயிற்றோட்டம், மற்றும் வயிறு எரிச்சல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியர்களை அழைத்து வருவதற்காக எயார் இந்திய  விமானம்  5 வைத்தியர்கள் களுடன் இன்று (31) சீனாவின் வூஹான் பிராந்தியத்துக்கு புறப்பட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் உலகின் மிக[4,309 அடி] நீண்டதும் , 5.5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டதும் ,பூமிக்கு அடியில் 70 அடி ஆழம் வரை செல்லும் கடத்தல் சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக 48 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவம் வைத்திய முகாம் ஒன்றை அமைத்து வருகின்றது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
திருகோணமலை, இரக்கண்டி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கற்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சிலவற்றை கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வீதிக்கு அருகாமையில் நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த 18 கை குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விமானம் ஒன்றை அனுப்புவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கொரோனா வைரஸ் காரணமாக கூகுல் நிறுவனம் சீனா, ஹொங்கொங் மற்றும் தாய்லாந்தில் உள்ள தனது செயற்பாட்டு அலுலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் தொழில் அதிபராக இருந்து வந்த பிரதாப் சிங் என்ற தொழிலதிபர் தனது மனைவியுடன் நியூசிலாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனா- உகான் - கொரோனா வைரஸ்  நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 259  ஆகவும் ,  11000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அமெரிக்க நாடுகள் ,பிரிட்டிஷ் ,ஜெர்மன்,சுவிஸ் உட்பட 15 நாடுகள் சீனாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
நீண்ட இழுபறிக்கு பிறகு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து இன்று (வெள்ளிக் கிழமை) வெளியேறுகிறது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ரஷியாவின்  ஓகோட்ஸ்க் கடல் உறைந்து பனிக்கட்டியாகி உள்ள நிலையில் அரசு எச்சரிக்கையினை மீறி அதில் நடந்து சென்று மீன் பிடித்த 600 மீனவர்கள் உறைபனி உடைந்து கடலுக்குள் சிக்கிக் கொண்டதனை அறிந்த மீட் புக் குழுவினர்  7 மணி நேரம் போராடி அவர்களை மீட் டனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவின் வுஹான் பல்கலைகழகத்தில் இருந்து  கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
நாவின்ன, தேவனந்த வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 5 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக் கூடிய உருக்குலைந்த நிலையில் ஒரு தம்பதியினரின்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டியாகலை மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்து 10 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசு முறைப்பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகை தருகிறார். வரும் 7 ஆம் தேதி இந்தியா வரும் ராஜபக்சே, 8 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று  நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் திட்டமிட்டே அதனை செயல்படுத்தியது அவரது முகநூல் பதிவில் இருந்து தெரிய வந்து கைது செய்யப்பட்டார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
1984ம் ஆண்டு சினிமாவில் கால் பதித்து   தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமைளை வெளிக்காட்டிய டி.எஸ். ராகவேந்த்ரா சென்னையில் 75/76 வயதில் காலமானார்.  
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கனடா மற்றும் மெக்ஸிக்கோவுடனான புதிய வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடியுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
மெக்சிகோ நாட்டில் வெடித்த எரிமலையின் பின் வேகமுடன் வெள்ளை நிற ஒளி சென்றது பறக்கும் தட்டு பற்றிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மே 6 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் வி.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎ 
வவுனியாவில் அதிகாரத்தை பயன்படுத்தி வவுனியா நகர பிரதேச செயலாளராக கடமையாற்றிய உதயராசா , பொது மக்களின் காணிகளை அபகரித்ததைக்  கண்டித்து போராட்டம் ஒன்று செயலகத்துக்கு முன்பாக இன்று (29) முன்னெடுக்கப்பட்டது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையின், யாழ்ப்பாண பல்கலையில், பிப்., 21ல் நடைபெற உள்ள, உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டுக்கு, தமிழகத்தில் இருந்து, இரண்டு திருவள்ளுவர் சிலைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.பின்உரும்பிராய், காரைத் தீவு ஆகிய ஊர்களில், இவை, நிரந்தரமாக நிறுவப்பட உள்ளன.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தொழில் நிமிர்த்தம் கொரியாவுக்கு சென்று நாட்டில் விசா இன்றி தங்கியுள்ள இலங்கையருக்கு  பொதுமன்னிப்பு காலம் ஆறு மாதம் வழங்கப்பட்டு,அதற்குள்  நாட்டை விட்டு வெளியேறும்படி வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுள்ளது.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையில் அடையாளம் காணப்படட சீன கொரோனா வைரஸ் நோயாளி பதுளை வைத்திய சாலையில் சிகிச்சைப் பலனின்றி  மரணம்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் , கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் இருவர், சட்டத்தரணி அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்குமாறும்   , விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரான டீ.எம்.விஜயகாந்தன் என்ற நபரை கைது செய்வதற்காக விசாரணைகள் முன்னெடுக்கவும்  கொழும்பு நீதிமன்றம்  அறிவித்துள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
உலக சுகாதார மையத்தின் (who) ஒத்துழைப்புடன், அவுஸ்திரேலிய மெல்பேர்னில் கொரோனா வைரஸுக்கான விச முறி மருந்து கண்டுபிடிக்கும்  நோக்கத்தில்  அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் , கொரோனா வைரஸை போன்ற வைரஸை உருவாக்கியிருக்கிறார்கள். 
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இந்திய வெண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை தொடர்ந்து சூரியன் பற்றிய ஆராய்ச்சிகளை 2020-ம் ஆண்டு தொடங்க உள்ளனர். ‘ஆதித்யா எல்-1’ என்ற திட்டத்தின் மூலம் சூரிய ஒளிவட்ட ஆய்வுகளையும் காலநிலை மாற்றத்திற்கான காரணங்களையும் தேட இருக்கிறார்கள்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎

ஒடிஸா மாநிலத்தில் இன்று காலை பேருந்து ஒன்று 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர், 35 பேர் காயமடைந்தனர்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களின் வசதி கருதி தூதரத்துக்கு இலவசமாக 800119119 என்ற தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பதுளை, கயிலகொட பகுதியில்  வீடு ஒன்றிற்குள் இன்று (28) நுழைந்த கொள்ளையர்  வீட்டிலிருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு,  நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
இலங்கையில் பாகிஸ்தான் படை அதிகாரி-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  சந்திப்பின் போது இலங்கை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 600 பேருக்கு பாகிஸ்தானில் மேலதிக பயிற்சிகளை வழங்குவதாக படை அதிகாரி அப்பாசி தெரிவித்துள்ளார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழக அரசு துறைகளிலும், பல்கலைகளிலும், தமிழில் தான் அலுவலக நடைமுறைகள் நடக்க வேண்டும். இதற்கு முன்னோடியாக, தமிழக, திறந்தநிலை பல்கலையின் அலுவலக நடைமுறைகள் அனைத்தும், தமிழிலேயே இருக்கும் என, பல்கலை துணைவேந்தர் பார்த்தசாரதி கூறினார்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தமிழகம்-செங்கல்பட்டு சுங்கச்சாவடி இரண்டு நாட்களுக்கு முன் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
திருப்பூர் மாவட்டம் - நஞ்சியம் பாளையம்  என்ற பகுதியில் ஒரு  தோட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த  சுமார் 33 ஊழியர்களைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பாகிஸ்தானில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த சிறுமியர், பெண்கள் கடத்தப்பட்டு, மதம் மாற்றி, கட்டாய திருமணம் செய்யப்படுவது தொடர்பாக, பாக்., துாதரக மூத்த அதிகாரியை அழைத்து, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பாகிஸ்தானில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
பாகிஸ்தானில் ஹிந்து கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
கனடா நாட்டில் கடந்த 22 ஆம் தேதி சீனாவில் இருந்து ஒண்டேரியாவிற்கு வந்த ஒரு தம்பதியரில் கணவருக்கு கொரனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது மனைவி தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஜெர்மனி நாட்டின் பவேரியா மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரனா அறிகுறி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
  ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலியாயினர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
யாழ்ப்பாணம் – தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் இருந்து 28 வயதுடைய இளைஞனின சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியசாலையில் 9 வருடங்களாக  சிகிச்சைபெற்றுவந்த 3 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை பிள்ளையான் (64 வயது) என்பவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
அமெரிக்காவில் காணாமல் போன கேரளாவை சேர்ந்த  ஆன் ரோஸ் ஜெர்ரி (21) எனும் இந்திய வம்சாவளி மாணவியின் உடல் அங்குள்ள பல்கலைக்கழக குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 ⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
சீனாவின் வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் அனைவரையும் தியதலாவ இராணுவ முகாமில் வைத்து 2 வாரங்களுக்கு  கண்கானிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர்  தெரிவித்துள்ளார்.
⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎⥎
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு விமான நிலையங்களை மேலும் தரத்தினை உயர்த்துவதற்கு ஜனாதிபதியின் யோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது  என விமான சேவைகள் இலங்கை நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
  🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
 samugam
                    tags:-Aishwarya Rajesh Sanchita Shetty     sanmugam sri lanka ibc                Samantha  Oviya          Kalavani     Amy Jackson                 Chandini Tamilarasan                  
                    Srushti Dange               Taapsee Pannu             Hansika Motwani         Janani Iyer Pranitha    Nithya Menen              Shruti Haasan               
                    Rakul Preet Singh         Radhika Apte                Nandita Swetha                                Gayathrie   Varalaxmi Sarathkumar                    Mahima Nambiar        
                    Nazriya Nazim               Sri Divya     Catherine Tresa            Nikki Galrani                 Keerthy Suresh            
Aari             Atharvaa Murali           Arulnithi    Harish Kalyan                Vidharth     Vijay Sethupathi           Ashwin       Sivakarthikeyan                    Sri              
                    Udhayanidhi Stalin      Dinesh        Attakathi    Vijay Antony                 Vikram Prabhu             Gautham Karthik                    Ashok Selvan               
Bobby Simha                 Kathir         Madha Yaanai Koottam                  Naveen Chandra          Bramman   Koottam Kalaiyarasan
                    G. V. Prakash Kumar surya vijay karththik kamalhasan rajanikanth Srikanth suri vavelu
தேடல் துணைகள்: thamizh, tamil, sampanthar, vadakilakku, vadakku, kizhakku, arasu, maiththiri, ranil, muslim, hindu, jesu, pothai, heroyin, val, jaffna, kilinochchi, maddakkalappu, butticola , ponnampalam, malaiyakam thondamaan, tiger, koddiya, ilankai ,ceylon, sinkalese , unp, slfp, suren  ragavan, vigginesvaran,tricomalai , vavuniya, mullaitivu, mannar , puththalam, kandy,achchuvely araly, ariyalai, allarai, allaippiddi, alvay, alaveddy, anailaithivu
aththiyadi,avarankal, anaikkoddai, edaikadu, enuvil, erupalai, elakkanavaththai,elavalai, echchankadu, echchamoddai, evinai, uduppiddi, udivil urumpirai, urelu, eluthumadduval, elalai, oddakappulam, kachchay, kaddudai, kadduvan, kantharmadam, kantharodai, kamparmalai, karanavay, karanthan, karampon, karaveddi, kalvayal, kalviyankadu, kalapumy, kankesanthurai, kks, karainagar, kirimalai, kuppilan, kurunakar, kurumpasiddi, kerudavil, kerpeli, kerudavil, kerpely, kaithadi, kokkuvil, kodikamam, kommanthurai, kollankaladdi, kolumpuththurai, kondavil, koppai koyirkudiyiruppu, sankaththanai, sankanai, sankuveli, sandilippay,sarasalai, savakachchery,singanagar.siththankeny, sinthupuram, sillalai, siruvilan,siruppiddi,sundikkuly, suthumalai,sunnakam, chulipiram, choliyapuram, thachchanthoppu, thanankilappu, thavady,thirunelvely, thunnalai, thellippalai, thevapuram,thaiyiddi, thondaimanaru, tholpuram, nainadivu, nallur, navakkiry, navaly, nagarkovil, nayanmarkkaddu, naranthanai, navanthurai, nilavarai, nirvely, niraviyady, nunavil, nelliyady, pandaththeruppu, pandaththarippu, pannagam, paththameny, pointpirro, paruththithurai, palaly ,pannalai, panippulm, pasaiyur, palavy, puththur
puloly, puliyankudal, punnalaikkadduvan, periyavilan, ponnalai, madduvil, mandaidivu, mandaithivu, maruthanarmadam, mallakam, maravanpulavu, masiyappiddi, mathakal, mavaliththurai, maviddapuram, manippay,mirusuvil, mesalai, mulai, vaddukkoddai, vadamarachchi, vadaliyadaippu, vannarpannai, vayavilan, varany, vallipuram, valveddiththurai, varuththalaipilan, viyaparimulai,velanai thevu, punkuduthevu,