சில பொய்களைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அவை உண்மை என்று மக்கள் நம்பத் தொடங்கி விடுவர்.உண்மையா?
அவற்றுள் சில:
பொய் 1: இந்தியா:
இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை. சிந்து நதிக்குக் கீழே உள்ள பகுதியை
பெர்சிய நாட்டவர்கள் -அவர்கள் மொழியில் 'ஸ' வை 'ஹ' என்று உச்சரிப்பதால்- ஹிந்து என்று பெயரிட, அப்படியே கிரேக்க
பயணிகளும் அழைக்கலானார்கள்.
'ஹிந்து' என்ற- அவர்கள் கூறிய இந்தப் பகுதியில் வெவ்வேறு நிலங்களை, பல நூறு அரசர்களும், வெளி நாட்டவர்களும் மாறி, மாறிப் போர் புரிந்து, தனித்தனியே ஆண்டு கொண்டிருக்கும் பொழுது, உள்ளே நுழைந்த ஆங்கிலேயர்கள் (1858) தங்கள் ஆயுத பலத்தால் எல்லாப் பகுதிகளையும் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வந்து, அதற்கு 'இந்தியா' என்று பெயர் வைத்தனர்.
ஆங்கிலேயர் வராது விட்டிருந்தால் இந்தியா என்று ஒன்று உருவாகியே இருக்காது; இன்னமும் பல
நாடுகள்தான் இந்த நிலப்பரப்பில் முட்டி மோதிக்கொண்டு இருந்திருக்கும்.
பொய் 2: தேச பிதா காந்தி.
காந்தியால்தான் சுதந்திரம் கிடைத்தது என்பது அடுத்த பொய். இதற்காக ஆயுதம்
எடுத்துப் போராடி (உ+ம்: நேதாஜி) ஆங்கிலேயரைக்
கதி கலங்கச் செய்தவர்கள், காயப்பட்டவர்கள், உயிர்ப்ப பலி கொடுத்தவர்கள், மறியல்
சென்றவர்கள் ஏராளம். காந்திக்கு ஒரு
கீறலும் படவில்லை. அகிம்சாவாதி காந்தி, உலகப்போருக்கு ஆங்கிலேயருக்கு படைகளை அனுப்பி
அவர்களை மகிழ வைத்தார்.
உலகப் போர் முடிவில், இந்தியர்களைக் கொண்ட அவர்கள் கடல் படையினர் அவர்களின்
கட்டுப்பாடுகளை மீறிச் செய்யும் பல
கார்யங்களினாலும், மறைந்திருந்து தாக்கும் கொரில்லாப் படையினரைச் சமாளிக்க
முடியாமையாலும், உலகம் முழுவதுமே
காலனித்துவ ஆட்சிமுறை அஸ்தமித்துக் கொண்டு வருவதாலும், தருணம் இதுதான்
என்று அவர்களாகவே விலக முடிவு செய்தார்கள். காந்தியின் அகிம்சைப் போராட்டத்துக்கு 'அஞ்சி' விட்டுவிட்டு
ஓடவில்லை.
சுதந்திர பேச்சுவார்த்தைக்குத் தம்மைக் கொன்று திரிபவர்களை அழைத்து
அவர்களுக்கு மதிப்புக்கு கொடுக்க விரும்பாது, தமக்குக் குடை பிடித்த சிலரை மட்டும் அழைத்து
உடன்படிக்கை செய்து வெளியேறினார்.
அதிகாரம் வட நாடடவர்கள் கையில் எப்பொழுதும் இருக்குமாறு அரசியல் சட்டத்தை
வரைந்துகொண்டனர். மாநில அரசுகளை அவர்கள் விரும்பாவிடின் கலைக்கும் அதிகாரத்தையும்
ஏற்படுத்திக் கொண்டனர். (வேறு எந்த ஒரு நாட்டிலும் ஒன்றிய அரசுக்கு இப்படியான
அதிகாரம் இல்லை).
பொய் 3: இந்து மதம்
இந்து மதம் என்ற ஒரு மதம் இருந்ததே இல்லை. அல்லாவை மட்டுமே வணங்கத் தெரிந்திருந்த பெர்சிய கூட்டம், சிந்து நதிக்கு இந்தப் பகுதியில் இருப்பவர்கள்,
'இதென்ன? அல்லாவை விட்டால்
ஜேசுவைத்தானே வணங்க வேண்டும்? இவர்கள் நூற்றுக்கணக்கான தெய்வங்களாக
கும்பிடுகிறார்களே! இவர்கள் சமயம் என்ன? சரி, ஹிந்து என்று
பெயர் வைப்போம்"
ஆனால், அதனுள்ளே
இருக்கும் பெரும்பாலான சமயங்கள் எல்லாம் மிகவும் தொன்மையானவை என்பது மறுக்கமுடியாத
உண்மை.
பொய் 4: தமிழ் மொழி.
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த மொழி"
(நான் ஒரு தமிழ் பற்றாளன். என்றாலும்........)
கொஞ்சம் மிதமிஞ்சி இல்லை? உண்மையில் பழைய மொழிகள் பட்டியலில் தமிழ் முதலில் இல்லை என்பதுதான் உண்மை.
எகிப்தியன் - 4700 வருடங்கள்.
சமஸ்கிருதம் - 3500
கிரேக்கம் - 3500
சீனம் - 3300
அராமிக் - 3100
ஹீப்று - 3000
பார்சி - 2500
தமிழ் - 2300
கொரியன் - 2100
இத்தாலியன் - 2100
அரபு -1900
தமிழ் 2500,
5000, 10000 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்று கூறுவதெல்லாம் தமிழ்
ஆர்வலர்களால் சான்றுகள் வைக்கப்படாத வெறும் ஊகங்கள் மட்டும்தான்.
தெலுங்கு, கன்னட
மொழியினரும் தாங்கள் மகாபாரதத்தில் கூறப்பட்ட்டவர்கள் என்றும், சிந்துவெளி
நாகரிக காலத்தவர்கள் (5000 வருடங்கள்) என்று கூறிக் கொள்வதும் வழக்கம் என்பது
உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ!
இவற்றைவிட, பேசப்பட்டு
அழிந்துபோன மொழிகள் 40, 60 ஆயிரங்களுக்குக் முன்பிருந்தே இருந்திருக்க வாய்ப்புகள் பல
உண்டு. அத்தோடு 60 ஆயிரம் காலமாக
இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆதிவாசிகள் உலகெங்கும் இன்னும் இருக்கிறார்கள்.
பொய் 5: ஆண்ட பரம்பரை:
"ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?" இது ஒரு வீர வசனம்.
(ஆள விருப்பம்தான், என்றாலும்...கூறிக் கூறியேஎம்மைக் கூறிட்டு ஆழப் போய்க்கொண்டு இருக்கிறோம்)
அறிந்த வரலாறுகளின்படி, தமிழர் வாழும் பகுதிகள் நீண்ட காலமாக தமிழர் இல்லாத இனத்தவர்களாலேயே ஆளப்பட்டு வரப்பட்டுள்ளன; ஆளப்படுக்கொண்டிருக்கின்றன. வீரத் தமிழன் உலகெங்கும் மீன் கொடி நாட்டினான் என்பதெல்லாம், சன்மானம் வேண்டி, ஏழைப் புலவர்களால் அரசன்மார்களைப் புகழ்ந்து பாடிய பாடல்களில்தான் காணப்படுகிறது -அப்படிப் பாடாவிட்டால் பாதாளச் சிறை!-. இடைக்கிடை, சில பகுதிகளை சில, பல, சிறு, பெரு தமிழ் மன்னர்கள் ஆண்டிருக்கலாம். [அண்மையில் கூட ''உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே'' என முருகன் புகழ் பாடிய திருவருள் படத்தினை ஆதாரமாக கொண்டு, முருகன் உலகம் முழுக்க ஆண்டான் என்று பெருமை அடித்திட முடியுமோ?]
அதற்காக
ஒரே அடியாய் இன்னமும் பழைய பெருமைகள் என்று அடிக்கிக்கொண்டு போவதால் எங்களுக்கு
இப்பொழுது என்ன இலாபம் என்று தெரியவில்லை.
எனக்கு
விளங்காத ஒரு கேள்வி:
அவ்வளவு வீரனாய், சூரனாய்,உலகெல்லாம் ஆண்டவன் என்று சொல்லப்படும் தமிழன், ஏன்தான்
இப்பொழுது ஒரு நாடு இன்றி, மொழி குன்றி, இடமின்றி, கதியற்று அடிமையாய் வாழ்கிறான்?
ஏன்தான் தமிழன் விரட்டி அடிக்கப்பட்டு, ஏனையோரால் கழித்து விடப்பட்ட நிலப்பகுதிகளான
அதி வெப்பம் கூடிய,
வறண்ட, செழிப்பற்ற, ஆறு, குளம், மலைகள் அற்ற, குளிர் காற்று
வீசாத, நீரோட்டம் இல்லாத, விவசாயத்துக்கு
உதவாத, இயற்கை அழகு
இல்லாத ஒரு சிறு பகுதிகளுக்குள் ஒடுக்கப்பட்டுள்ளான்?
உண்மையோ, பொய்யோ பழைய
பெருமைகள் பற்றி பேசித் தெரிவதில் ஒரு பயனும் இல்லை.
இனி என்ன செய்தால் தமிழன் தலை நிமிரலாம் என்று செயல் படுவதுதான் புத்திசாலித்
தனமாகும்.
- சந்திரகாசன் செல்வதுரை
0 comments:
Post a Comment