மெதுவாக சாப்பிடுவதால் கிடைத்திடும் நன்மைகள்

மெதுவாக, உணவை நீண்ட நேரம் சாப்பிடும்போது, குடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு, ‘உடலுக்குத் தேவையான அளவு உணவு கிடைத்துவிட்டதுஎன்று மூளையில் இருந்து சமிக்ஞைகளை அனுப்பும். சுமார் 20 நிமிடத்துக்கு மேல் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த திருப்தி உண்டாகும்.

மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்ற கருத்து பலரிடம் உள்ளது. ‘ஸ்லோ ஈட்டிங்என்பது நாம் சாப்பிடும் உணவின் அளவை குறைக்கும். இதனால் இயல்பாகவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.

லெப்டின் மற்றும் க்ரெலின்எனும் இரண்டு ஹார்மோன்களும் பசிக்குத் தொடர்புடையவை ஆகும். இதில்லெப்டின்உடலுக்குத் தேவையான கலோரியின் அளவு மற்றும் பசியைக்  கட்டுப்படுத்தும். உடல் எடை இழப்புக்கு உதவும். ‘க்ரெலின்பசியைத் தூண்டும்; உடல் எடையை அதிகரிக்க உதவும். 

மெதுவாக, உணவை நீண்ட நேரம் சாப்பிடும்போது, குடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு, ‘உடலுக்குத் தேவையான அளவு உணவு கிடைத்துவிட்டதுஎன்று மூளையில் இருந்து சமிக்ஞைகளை அனுப்பும். சுமார் 20 நிமிடத்துக்கு மேல் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த திருப்தி உண்டாகும்.

மேலும், மெதுவாக உணவு சாப்பிடும்போது உணவில் உள்ள சுவையையும், வாசனையையும் நம்மால் நன்றாக உணர முடியும். அதேநேரம், சுவையின் இன்பத்தை ரசிக்கும் போது சாப்பிடும் நேரம் இரட்டிப்பாகும். இது சாப்பிடும் உணவின் அளவை தன்னிச்சையாக குறைக்கும்.

உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவுகளே அதிகமாக உணவு விருப்பப் பட்டியலில் இடம்பெறும். அடுத்த முறை உணவு உண்ணும்போது, சுவையின் திருப்தியை நாம் அடைந்தவுடன் பசியின்மை ஏற்படும்.

உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது,  உணவுப் பொருட்கள் வாயில் உள்ள உமிழ் நீருடன் கலக்கும். உமிழ்நீரில் உயிரியல் ரீதியாக செயல்படும் பொருட்கள் உள்ளன. ஆகையால், இது உணவு செரிமானத்தை வாயில் இருந்தே தொடங்குகிறது.

மெதுவாக சாப்பிடும்போது உணவு வயிற்றை சென்றடைய 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இது வயிற்றின் வேலையை மிகவும் எளிதாக்குவதுடன், சாப்பிட்ட உணவை எளிதில் செரிமானம் அடையச் செய்யும். இதனால், நாம் அடுத்த வேளை உணவு சாப்பிடும்போது இயல்பாகவே உற்சாகம் ஊற்றெடுக்கும்.

 :படித்ததில் பிடித்தது

0 comments:

Post a Comment