மொழியின் தோற்றம்: - 03

மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது? /

Origin of Language: When Did It Start and How Did It Evolve?எமது மனித குல நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்வதில், மகத்தான பங்களிப்பைச் செய்தது மொழி என்றே சொல்லலாம். மனிதன் தோன்றிய ஆரம்ப காலத்தில்,  காட்டு மிராண்டிகளின் கூடாரமாகக் காட்சியளித்த மனித இனம்,  நாடோடியாக திரிதல், வேட்டையாடுதல், கால்நடை மேய்த்தல், கடல் அல்லது நீரின் மேல் பயணித்தல் , உழவு செய்தல் ஆகிய படிநிலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் தொடங்கியது. இவர்களின் இந்த  நாகரிக அல்லது படி நிலை முன்னேற்றத்துக்கு உதவிய கருவியே மொழியாகும்.

 

முதலில் மனிதன்  எண்ணங்களை, நகை [புன்னகை], அழுகை, இளிவரல் [இகழ்ச்சி], மருட்கை [வியப்பு], அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை [மகிழ்ச்சி] போன்ற மெய்ப்பாடுகள், சைகைகள், ஓவியங்கள் போன்றவற்றின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர். இவற்றின் மூலம் பருப்பொருள்களை (கண்ணில் காணக் கூடிய, தொட்டு உணரக் கூடிய பொருள்கள்) மட்டுமே ஓரளவு உணர்த்த முடிந்தது. நுண் பொருள்களை உணர்த்த இயல வில்லை. அதனால், ஒலிகளை உண்டாக்கி பயன் படுத்தத் தொடங்கினர். சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி காலப் போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமை பெற்று மொழியாக வளர்ந்தது எனலாம்.

 

உதாரணமாக, மனிதனின் ஆரம்ப காலத்தில், இருவருக்கு அல்லது சிலருக்கு இடையில் ஒருவேளை, ஒரு செய்தியை பகிர, தொடர்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கலாம். அதிகமாக  அலறல் மற்றும் கூச்சல்கள் [howls and hoots] போன்றவையே தொடக்க சொற்களாக இருந்து இருக்க வாய்ப்புக்கள் அதிகம். என்றாலும், நாளடைவில் அவை மனிதனுக்கு முறையான தொடர்பு வழியாக ஒரு சீரான மொழியாக பரிணமித்து இருக்கலாம் என்று எண்ண இடமுண்டு.

 

தேனீக்கள் மற்றும் எறும்புகளிலிருந்து திமிங்கலங்கள் மற்றும் குரங்குகள் வரை, அனைத்து சமூக விலங்குகளும் தங்களுக்குள் எதோ ஒரு விதமாக தொடர்பு கொள்கின்றன. ஆனால் மனிதன் ஒருவனே மொழி என்று ஒன்றை உருவாக்கியவன் ஆகும். எம் பண்டைய மூதாதையர்கள், ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே எதோ பேச தொடங்கி இருப்பார்கள். ஆனால் மிக மிக மெதுவான வளர்ச்சியுடன், மிக மிக குறைந்த சொல்லகராதிகளுடனும் [vocabulary], மிக இலகுவான  இலக்கண அமைப்புகளுடனும் [grammar] அது இருந்து இருக்கும் என்று நாம் இன்று ஊகிக்கலாம்?

 

''மனிதர்கள் மட்டுமே மொழியைப் பயன்படுத்தும் உயிரினமாக இருக்கிறார்கள். விலங்குகளிடம் இருந்து நம்மை தனித்துவமாக்கிக் காட்டுவதும் அதுதான்,'' என்று நியூகேசில் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை பேராசிரியராக இருக்கும் மேக்கி டாலர்மேன் கூறியுள்ளார் ["Humans are the only creatures that use language. That's what sets us apart from animals, "said Maggie Dollarman, a professor of linguistics at the University of Newcastle]. அதே போல, ''நம்மை மனிதர்களாக ஆக்கும் சற்று சிக்கலான விடயமாக  மொழி இருக்கிறது,'' என்று  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானிட பரிணாம வளர்ச்சித் துறை பேராசிரியரும், மானுடவியலாளருமான ராபர்ட் போலே கூறுகிறார் ["Language is a bit of a complex thing that makes us human," says Robert Boley, professor of anthropology and anthropologist at the University of Cambridge]

 

இன்று உலகில் ஏறத்தாழ, 7000 மொழிகள் பேசப்படுகின்றன [7,139 languages are spoken today as per ethnologue.com / Roughly 40% of languages are now endangered, often with less than 1,000 speakers remaining / Asia 2,294 languages, Africa 2,144 languages, Pacific 1,313 languages, Americas 1,061 languages, & Europe 287 languages], அதில் ஆசியாவும் ஆப்பிரிக்காவும் கூட்டாக மூன்றில் இரண்டு பங்கு மொழிகளை கொண்டுள்ளன. என்றாலும் மொழி வல்லுநர்கள் இவைகளை [எல்லா மொழிகளையும்] இருபதுக்கும் குறைந்த மொழி குடும்பங்களுக்குள் அடக்கி உள்ளார்கள். அவற்றில் மிகப்பெரியது இந்தோ-ஐரோப்பிய குடும்பமாகும், அதன் மொழிகள் உலக மக்கள் தொகையில் சுமார் 45% பேசப்படுகின்றன. அதன் விநியோகப் பகுதியும் மிகப் பெரியது.

இது ஐரோப்பா, தென்மேற்கு மற்றும் தெற்காசியா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை உள்ளடக்கியது. இங்கு மொழிகளின் சொற்களஞ்சியம், ஒலிப்பு, மற்றும் அவற்றின் இலக்கணம் [மொழிகளுக்கு இடையில் சொற்கள், ஒலிகள் அல்லது இலக்கண கட்டுமானங்ககள்] போன்றவற்றின் அடிப்படையில் மொழிகள் ஒன்றோடொன்று ஒரு குடும்பமாக இணைக்கப்பட்டுள்ளன [Languages are linked to each other by shared words or sounds or grammatical constructions]. அதாவது, ஒலியியல் , சொற்பிறப்பியல் மற்றும் தொடரியல் ஆகியவற்றில் கணிசமான பொதுவான அம்சங்களுடன் கூடிய மொழிகள் ஒரே மொழி குடும்பத்தைச் சார்ந்தவையாகும். ஒரு மொழி குடும்பத்தின் துணைப்பிரிவுகள் "கிளைகள்" என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக,  ஆங்கிலம் , ஐரோப்பாவின் பிற முக்கிய மொழிகளோடு சேர்த்து, இந்தோ - ஐரோப்பிய மொழி குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.

 

பொதுவான கோட்பாடு என்னவென்றால், ஒவ்வொரு மொழி குடும்பத்தின் உறுப்பினர்களும்  ஒரு பொதுவான மூதாதையர்களை கொண்டதுடன், ஒரு மூல மொழியிலிருந்து வந்தவர்கள் ஆகும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட மொழிகளில் இருந்தே இந்த மூல மொழியை மொழியியல் அறிஞர்கள் தேர்ந்து எடுக்க வேண்டி உள்ளதே ஆகும். ஏன் என்றால் அவைகள் இன்றும் பேசப்படுவதால் அல்லது அவைகளுக்கான சான்றுகள் போதுமான அளவு கல்வெட்டுகளில் இன்று வாசிக்கக் கூடியதாக மொழிபெயர்க்கப் பாட்டுள்ளதாலும் ஆகும். மேலும், இன்றைய கால கட்டத்தில், எல்லா மொழிகளும் ஒரு மூதாதையரிடமிருந்து வந்தவையா என்பதை அறிய முடியாது. ஒரு மனித மொழி இருந்திருந்தால், அது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப் பட்டிருக்க வேண்டும். எனவே இது மிகவும் கடினம் அல்லது சாத்தியமற்றது ஆகும்.

 

மொழியின் வரலாற்றை அறிவது மூலம், அந்த மொழியை பேசியவர்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள்,  மதம், இலக்கியம் [culture, customs, religion, literature] போன்றவற்றை அறிவதுடன், அவைகள் எப்படி காலப்போக்கில்  வளர்ந்தன என்பதையும் விளங்கி கொள்ள முடியும். உதாரணமாக,  ஒரு குறிப்பிட்ட மொழியை பேசுபவர்களின் பண்பாடு, கட்டாயம் அந்த மொழியில் பெரிதும் செல்வாக்கு செலுத்தி இருக்கும் [influenced]. மொழியின் வளர்ச்சி, இலக்கியத்தின் ஒரு வகையான வளைச்சியும் கூட., அது மட்டும் அல்ல, அந்த மொழியின் பேச்சாளர்கள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைமை போன்றவைகள் கூட மொழியின் வரலாற்றில் அடங்குகின்றன. மொழியும் பண்பாடும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன [intertwined]. ஒரு குறிப்பிட்ட மொழி, அந்த குறிப்பிட்ட மொழியை பேசுபவர்களை சுட்டிக் காட்டுகிறது. எனவே, நீங்கள் வேறொரு மொழியுடன் தொடர்பு கொள்ளும் போது, அந்த மொழியை பேசும் மக்களின் கலாச்சாரத்துடனும்  தொடர்பு  கொள்கிறீர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது, ஒருவரின் மொழியை நேரடியாக அணுகாமல் ஒருவரின் கலாச்சாரத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்பது தான் முற்றிலும் உண்மை.

 

''தொன்மையான மொழி'' எது என்று கேட்டால் பாபிலோனிய மொழி, தமிழ், சமஸ்கிருதம் அல்லது பழங்கால எகிப்து மொழி என்று நாம் நினைக்கலாம். ஆனால், மொழியின் ஆரம்ப காலத்தின் அருகே இவையெல்லாம் செல்லவே முடியாது என்கிறார் பேராசிரியர் டாலர்மேன். தொன்மையான மொழிகள் என்று இன்று நாம் குறிப்பிடும் பெரும்பாலான மொழிகள் எதுவுமே 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை அல்ல. இப்போதுள்ள நவீன மொழியாகவும் அவை இல்லை என்கிறார் [If we ask what the "ancient language" is, we may think that the Babylonian language is Tamil, Sanskrit or the ancient Egyptian language. But all of this can never go away in the early days, says Professor Dollarman. Ancient Languages ​​Most of the languages ​​we mention are not more than 6,000 years old. He says they are not even the current modern language]. உண்மையான தொடக்கம் குறைந்த பட்சம் 50,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்பதற்கான சுவடுகள் உள்ளன. மொழியின் தோற்றம் அதை விடவும் பழமையானதாக இருக்கலாம் என்று பெரும்பாலான மொழியியல் வல்லுநர்கள் இன்று கூறுகின்றனர்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] / பகுதி: 04 வாசிக்க அழுத்துக👉Theebam.com: மொழியின் தோற்றம்: - பகுதி:04:

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: மொழியின் தோற்றம்: - 01

0 comments:

Post a Comment