"எதை தேடி என்ன பயன் ?"

 

"எதை தேடி என்ன பயன் ?"

அறிவை தேடி பள்ளிக்கூடம் போனேன்

பட்டம் வாங்க பல்கலைக்கழகம் சென்றேன்

வேலை செய்ய நிறுவனம் நுழைந்தேன்

எதை தேடி என்ன பயன் ?

 

 அழகை ரசிக்க ஆசை வேண்டாமா?

அன்பை பகிர நண்பி வேண்டாமா?

இன்பம் கொள்ள காதல் வேண்டாமா?

கணவன் மனைவி உறவு  வேண்டாமா?

உறவு கொள்ள காமம் தேடினேன்

உள்ளம் பறிக்க காதல் கொட்டினேன்

வாழ்வை முழுமையாக்க மழலை வேண்டினேன்

எதை தேடி என்ன பயன் ?

 

வயது போக முதியோர் இல்லம்

தேடிய சொத்துக்கு பிள்ளைகள் சண்டை

மகிழ்ச்சி தந்த வனப்பும் போச்சு

மஞ்சத்தில் படுத்தும் நித்திரை இல்லை?

உலகை புரிய மீண்டும் தேடுகிறேன்

உண்மையை உணர ஆன்மிகம் தேடுகிறேன்

நிம்மதி வேண்டி தனிமை தேடுகிறேன்

எதை தேடி என்ன பயன் ?"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment