சிரிக்க.... சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்

 


-01-

மனைவி: ஏங்க, கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு நிறைய கிப்ட் வாங்கித் தருவீங்க, இப்போ ஏன் தர்றது இல்ல?

கணவன்: யாராவது தூண்டில்ல சிக்கின மீனுக்கு இரை போடுவாங்களா?

 😁😁😁

-02-

கணவன்: நேத்து கனவுல உன்ன ஒருத்தன் கடத்திட்டு போயிட்டான்.

மனைவி: நிஜமாவா? அப்புறம் என்னாச்சு?

கணவன்: என்னாச்சுன்னு தெரியல.. அவன்கிட்ட 'தாங்க்ஸ்' சொல்லலாலாம் எண்டு  நினைச்சேன், அதுக்குள்ள முழிப்பு வந்துருச்சு!

  😁😁😁

-03-

மனைவி: என்னங்க! நம்ம கல்யாண போட்டொவை பார்த்திங்களா! நாம தாலிகட்டும்போது நமக்கு பின்னால நிக்கிற  சொந்தக்காரர் எல்லாம் நல்ல சந்தோசமாய் சிரிக்கிறார்கள் பாருங்க!.

கணவன்:அது ஒண்ணுமில்லடி! தாங்கள் விழுந்த குழிக்குள்ள நாங்களும் விழுந்த சந்தோசமடி அது!

  😁😁😁

-04-

மனைவி: கல்யாணத்துக்கு முன்னாடி "உனக்காக உலகத்தையே எதிர்ப்பேன்"னு சொன்னீங்களே, இப்போ ஏன் எங்க அம்மா வந்தா பயந்து நடுங்குறீங்க?

கணவன்: உலகம் வேறடி!,அமேரிக்கா  வேறடி!

  😁😁😁

-05-

மனைவி: ஏங்க, நான் செத்துப் போயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?

கணவன்: நானும் செத்துப் போயிடுவேன்.

மனைவி: ஏன்? அவ்வளவு பாசமா என்மேல?

கணவன்: இல்ல.. அப்படியான  சந்தோஷத்தை என்னால தாங்கிக்க முடியாது எண்டு டொக்டர் சொல்லியிருக்கார்!

  😁😁😁

-06-

மனைவி: உங்க பிரண்ட் கல்யாணம் பண்ணிக்க போறாராம், அவருக்கு என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?

கணவன்: "வெல்கம் டு தி ஜெயில்"னு ஒரு போஸ்டர் அடிச்சு கொடுப்பேன்!

  😁😁😁

-07-

மனைவி: நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்குற அந்த பிச்சைக்காரன் எனக்கு ரொம்ப நன்றி சொன்னான்.

கணவன்: எதுக்கு?

மனைவி: நான் சமைச்ச சாப்பாட்டை அவனுக்கு போட்டேன்.

கணவன்: பாவம், அவனுக்கு வேற வழியே இல்ல போல!

  😁😁😁

-08-

மனைவி: நான் ஒரு மாசம் அம்மா வீட்டுக்கு போறேன்.

கணவன்: (கண்ணீருடன்) நிஜமாவா?

மனைவி: ஏன் அழறீங்க?

கணவன்: இது ஆனந்த கண்ணீருன்னு உனக்கு எப்படி புரிய வைப்பேன்!

  😁😁😁

-09-

கணவன்: இன்னைக்கு என்ன ஸ்பெஷல் சாப்பாடு?

மனைவி: எதுவுமே இல்ல.

கணவன்: நேத்தும் இதே தான சொன்ன?

மனைவி: நேத்து பண்ணினதுல மீதி இருக்குறது தான் இன்னைக்கும்!

  😁😁😁

-10-

மனைவி: "ஏங்க, நான் செத்துப்போயிட்டா நீங்க வேற கல்யாணம் பண்ணிப்பீங்களா?"

கணவன்: "மாட்டேன்."

மனைவி: "ஏன்? என் மேல அவ்வளவு பாசமா?"

கணவன்: "இல்ல... மறுபடியும் ஒரு தப்பு பண்ண எனக்கு விருப்பம் இல்ல!"

  😁😁😁

-11-

காதலி: "நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க குடிக்கிறதை விட்டுடுவீங்களா?"

காதலன்: "கண்டிப்பா...விருப்பம்தான்,  ஆனா அதுக்கப்புறம் குடிக்க வேண்டிய அவசியம் உன்னாலயே வந்துடும்னு நினைக்கிறேன்!"

  😁😁😁

-12-

காதலன்: (கைபேசியில்) "உனக்காக நான் ஏழு கடலையும் தாண்டி வருவேன்டி!"

காதலி: "நிஜமாவா? சரி, இப்போ வெளிய மழை பெய்யுது, பால் இல்லை.கொஞ்சம் கடைக்கு போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வரீங்களா?"

காதலன்: "ஐயய்யோ ... மழையில நனைஞ்சா எனக்கு ஜலதோஷம் பிடிக்குமே!"

  😁😁😁

-13-

காதலன்: "உன் கண்கள் ரெண்டும் மீன் மாதிரி இருக்கு."

காதலி: "அப்படியா? அப்புறம்?"

காதலன்: "ஆனா வாயைத் திறந்தா மட்டும் முதலை மாதிரி இருக்கு!"

  😁😁😁

-14-

காதலி: "நீங்க என்னை காதலிக்கிறதுக்கு முன்னாடி எத்தனை பொண்ணுங்களை காதலிச்சீங்க?"

காதலன்: (மௌனமாக இருக்கிறான்)

காதலி: "ஏன் அமைதியா இருக்கீங்க?"

காதலன்: "இல்ல, எண்ணிட்டு இருக்கேன்... குறுக்கே பேசி எண்ணிக்கையை மறக்கடிக்காதே!"

  😁😁😁

-15-

காதலி: "என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?"

காதலன்: "உப்பை விட அதிகமா பிடிக்கும்."

காதலி: "ஏன்?"

காதலன்: "உப்பு அதிகமானாலும் கஷ்டம், இல்லன்னாலும் கஷ்டம்!"

  😁😁😁

-16-

போலீஸ்: என்னப்பா, திருடன் உன் முன்னாடியே நகையைத் திருடிட்டு போறான், நீ ஏன் தடுக்கல?

காவலாளி: அவர்தான் சார் முகமூடி போட்டிருந்தாரே, நான் ஏதோ சினிமா ஷூட்டிங்னு நினைச்சு வேடிக்கை பார்த்தேன்!

  😁😁😁

-17-

இன்ஸ்பெக்டர்: என்னடா இது, திருடுன வீட்டுலேயே தூங்கிட்ட?

திருடன்: என்ன பண்றது சார்... அந்த வீட்டுல 'தூங்குவது எப்படி? என்ற  புத்தகத்தை படிச்சேன், அப்படியே தூங்கிட்டேன்!

  😁😁😁

-18-

முதலாம் பைத்தியம்: டேய், நான் ஒரு பெரிய கவிதை எழுதிருக்கேன் பாரு.

இரண்டாம் பைத்தியம்: ஆனா காகிதத்துல ஒரு எழுத்து கூட இல்லையே?

முதலாம் பைத்தியம்: இது "மௌனக் கவிதை"டா!

  😁😁😁

-19-

டாக்டர்: உனக்கு ஏன் இவ்வளவு பெரிய காயம் ஆச்சு?

பைத்தியம்: தூங்கும்போது கொசு கடிச்சது டாக்டர், அதான் கல்லெடுத்து அது மேல அடிச்சேன்!

  😁😁😁

-20-

ஆசிரியர்: ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள்?

மாணவன்: ஆறு நாட்கள்.

ஆசிரியர்: ஏன்?

மாணவன்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அல்லவா!

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment