"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை
பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில்
[நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a
scientific perspective" [In Tamil & English]
பகுதி: 20 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது
தொடர்பான விபரங்களும் / 'உண்மையில் எல்லாளன் மற்றும் துட்டகாமணி யார்?'
இளவரசன் எல்லாளன் அசேலனைக் கொன்று நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சம் அவரை ஒரு ஒப்பற்ற மன்னர் என்று வர்ணித்தது. தீபவம்சம் அவர் ஒரு தமிழர் என்றோ ஒரு இளவரசர் என்றோ சோழ நாட்டிலிருந்து வந்தவர் என்றோ கூறவில்லை. தீபவம்சம், மகாவம்சம் போல், தமிழர் விரோத வெறுப்பைக் கக்கவில்லை. அதன் நலன் பௌத்தம் மட்டுமே, தமிழர்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பின்னர் இளவரசர் அபயா (தீபவம்சம் இறக்கும் போது ஒரே ஒரு முறை 'துட்டகாமணி' என்ற அடைமொழியைப் பயன்படுத்தினார்) முப்பத்திரண்டு மன்னர்களைக் கொன்று இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இளவரசன் அபயா எல்லாளனைக் கொன்றதாகக் கூறவில்லை. ஆகவே, எல்லாளன் முதுமையால் இறந்திருக்கலாம்? அவருக்குப் பிறகு முப்பத்திரண்டு துணை மன்னர்கள் அல்லது தலைவர்கள் ஆட்சி செய்து இருக்கலாம்?. இளவரசர் அபயா அவர்கள் மீது போர்தொடுத்து, அரசைக் கைப்பற்றி இருக்கலாம்?. அங்கு, பல துணை அரசுகளுடன், பல தமிழ் இளவரசர்களும் இருந்ததே உண்மையான கதையாக இருக்க வேண்டும். மூத்தசிவ, சிவா, மகாசிவ, சேனா, குட்டா போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள். அப்படியே, திஸ்ஸ, சுரதிஸ்ஸ கூட தமிழர்களாக இருக்க வேண்டும்.
இளவரசர் அபயாவின் தந்தை காக்கவன்னா [The father of prince Abhaya is Kakkavanna]. ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட தமிழ் வன்னிப் பகுதியின் கடைசி மன்னன் பாண்டரவன்னியனை காட்டிக் கொடுத்தவனின் பெயர் கூட காக்கவன்னியன் [Kakkavanniyan] தான். இது இன்றைய முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்துள்ளது. அதே முல்லைத்தீவு மாவடடத்தில் தான், மீண்டும் ஒரு மிகப்பெரிய இன அழிப்பு மே மாதம் 2009 இல் நடைபெரும் உள்ளது. காக்கவன்னா என்ற பெயர் ஒலிப்பு ரீதியாக காக்கவன்னியன் பெயரை ஒத்திருக்கிறது. காக்கவன்னாவுக்கு மூத்தசிவனுடனோ அல்லது தேவநம்பியதீசனுடனோ இருந்த தொடர்பை தீபவம்சம் கொடுக்கவில்லை. எனவே, மகாநாமா இதைப் பயன்படுத்தி மகாவம்சத்தில் ஒரு கதையை புகுத்தினார் என்பதே உண்மையாக இருக்கலாம்? . மகாவம்சத்தில் பத்து போர்வீரர்களைப் பற்றிய அற்புதமான கதைகள் உள்ளன, ஒவ்வொருவரும் பத்து யானைகளை விட வலிமையானவர்களாம்? எனவே இவை எந்த தீவிரமான விமர்சனத்திற்கும் தகுதியற்றது. இது புத்த மத பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சிக்காக மட்டுமே என்று நாம் இலகுவாக எடுத்துக் கொள்ளலாம்.
மகாவம்சத்தின்படி துட்ட காமினி (துட்ட கைமுனு) தன் தந்தையின் உயிரியல் மகன் அல்ல. அவர் இறக்கும் நிலையில் இருந்த ஒரு துறவியின் மறுபிறவியாக இருந்தார். அதாவது, அந்த துறவி தான் இறந்ததும், உடனடியாக துட்டகாமணியின் தாயான விகாரா தேவியின் கருப்பையில், தானாகவே கருவாக மாறினார். அதாவது ஒரு ஆணின் அல்லது கணவனின் துணை இல்லாமல், தானாகவே விகாரா தேவியின் வயிற்றில் கருத்தரித்தார்? இந்தக் கருத்தை நான் இங்கு அலசவில்லை, அது அவர் அவர்களின் நம்பிக்கை. எனவே, துட்டகாமணி அரசனின் இரத்த வாரிசு அல்ல. அவர் ஒரு துறவியின் மறு அவதாரம் ஆகும். ஆகவே இவர் சட்டவிரோதமாக முக்கியத்துவம் வாய்ந்த பதவியை, அரச வரிசை இல்லாமல் எடுத்த ஒரு நபர் என்று கொள்ளலாம் [அபகரிப்பவர் ஆகிறார் / usurper]. ஆகவே அவர் அரச வம்சாவளியைத் சட்ட்டபூர்வமாகத் தொடர்ந்திருக்க முடியாது. எனினும் இராசவலியத்தில் மற்றொரு கதையும் காணப்படுகிறது.
மகாவம்சத்தில் எல்லாளனைப் பற்றிய விவரிப்பு தாராளமாக உள்ளது. மேலும் அத்தியாயம் 21 இல் கொடுக்கப்பட்டுள்ள கதைகள் 'நாங்கள் பள்ளியில் ஆறாம் அல்லது ஏழாம் வகுப்பின் போது படித்த கதைகளுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளன. இலங்கை வரலாற்றாசிரியர்கள் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கதைகளை தாராளமாகப் இங்கு பயன்படுத்தினர் என்பதே உண்மை.
எல்லாளன் என்பவர் மனுநீதி கண்ட சோழன் மற்றும் சிபி சக்கரவர்த்தியின் நகல் போல உள்ளது. எல்லாளன் என்ற பாத்திரம், ஒருவன் குணத்திலும் நீதியிலும் ஒப்பிட முடியாதவனாக இருக்கலாம், ஆனால் அவன் பௌத்தனாக இல்லாவிட்டால் அவன் கொல்லப்பட்டு ஒழிக்கப்படுவான் என்ற தர்க்கத்தை வலியுறுத்த இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. இதுதான் நாளாகமங்களில் ஓடும் கொடூரமான தர்க்கம் ஆகும்!
என்றாலும் சாதாரண சிங்கள மக்களுக்கு இந்த தர்க்கத்தில் உண்மையான பங்கு இல்லை, அதனால்த்தான் அவர்கள் இப்போதும் எல்லாளனை ஒரு நியாயமான ஆட்சியாளராக மதிக்கிறார்கள். முதலாவது கண்டியின் அதிகாரி, பிலிமத்தலாவ [The First Adikar of Kandy, Pilimatalava,], பிரிட்டிஷ் காலனி அரசின் பிடியில் இருந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வடக்குக்கு, தனது விசுவாசமான குடிமக்களுடன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பல்லக்கில் அனுராதபுரத்தின் ஊடாக வன்னிக்கு காவிச் சென்றனர். அவர் மிகவும் சோர்வுற்று களைத்துப்போய் இருந்தார். என்றாலும் எல்லாளனின் நினைவு தூபி வந்ததும், பல்லக்கில் இருந்து இறங்கி, நீண்ட தூரம் நடந்து போனார் [He was exhausted and tired, but he got down where he thought that the Elara’s memorial was and started walking for a long distance.] அவரின் விசுவாசமான குடிமக்கள், நினைவு தூபியை கடந்து நீண்ட தூரம் வந்துவிட்டோம் என்று சொல்லியும், இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தே, பல்லக்கில் ஏறினார் என்பது வரலாறு. அந்த பெருமைமிக்க தமிழ் அரசன் தான் எல்லாளன்! நான் இந்த நேரத்தில், இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும். தீபவம்சம், விகாரமகாதேவியின் எந்த கோரமான ஆசைகளையும் [the gory desires of Vihara Mahadevi] சொல்லவில்லை, ஆக மகாவம்சமும் அதன் பின் எழுதப்பட்ட காப்பியங்களும் தான் சொல்லுகின்றன. அதுமட்டும் அல்ல, தீபவம்சத்தில் எல்லாளனுக்கும் துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி (சிங்களம், දුටුගැමුණු duṭugämuṇu) க்கும் இடையிலான போர் ஆகியவையும் அங்கு இடம்பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
முதலியார்
செ இராசநாயகம் 'எலு' என்று இக்காலத்தில் பிழையாக வழங்கப் படும் 'ஈழு' என்னும்
நிறைவற்ற மொழியை அங்கு வசித்த நாகரும் இயக்கரும் பேசியதால், இலங்கைக்கு ஈழம்,
ஈழமண்டலம் போன்ற பெயர்கள் உண்டாயிற்று என்கிறார். உதாரணமாக, பட்டினப் பாலை "ஈழத்துணவும்
காழகத்து ஆக்கமும் " என்ற வரியையும், பூநகரியில் கண்டு பிடிக்கப்படட இரண்டு
மட்பாண்ட பிராமி சாசனத்தின் முதலாவதின் முதல் இரண்டு எழுத்தும் 'ஈழ' என்றும்
இரண்டாவது சாசனம் 'ஈலா' என்றும் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார். மேலும் இயக்கர்,
நாகர் இனத்தவர்கள் திராவிடர்கள் என்பது, அதிகமாக, 1] ஈமச் சின்னங்கள், 2] ஆதிப்
பிராமிக் கல்வெட்டுகள், 3] ஆதி மக்களது சமய வழிபாடு போன்றவை எடுத்துக்
காட்டுகின்றன என கலாநிதி க குணராசா அவர்கள் தனது 'ஈழத்தவர் வரலாறு' என்ற நூலில்
கூறுகிறார்.
தீபவம்சத்தின்படி
துட்டைகைமுனு ஒரு சிறந்த கட்டிடக்கலைஞர். உதாரணமாக, துட்டகைமுனு மன்னனின் சமயப்பணி
பற்றி நோக்கின் 89 விகாரைகளை அமைத்ததாகவும் அதில் ரூவன்வெலிசாய பிரபல்யமான
விகாரையாக கருதப்படுகின்றது. மிருசவெட்டிய விகாரை
மற்றும் லோகமகாபாய எனும் கட்டடமும் இவரால் அமைக்கப்பட்டுள்ளது. 'Eleven
Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES
Reprint 1994.' என்ற நூலின் பக்கம் 233 முதல் 234 வரையிலான சில வரிகளை மேற்கோள்
காட்டுவது பொருத்தமானது என்று நம்புகிறேன்.
"1818 ஆம் ஆண்டில், பழமையான கண்டியக் குடும்பத்தின் தலைவரான பிலிமத்தலாவ, அவர் ஈடுபட்டிருந்த கிளர்ச்சி
தோல்வியுற்ற பின்னர், அவர் சோர்வுற்று மனமும் உடலும் வலு விழந்து இருந்தாலும்,
மறைவில் இருந்து வெளியேறி தப்பிக்க முயன்ற பொழுது, எல்லாளனின் பழங்கால
நினைவுச்சின்னத்திற்கு அப்பால் அவர் வெகுதூரம் கடந்துவிட்டார் என்று உறுதியளிக்கும்
வரை, மரியாதையின் பொருட்டு நடந்து சென்றார். என்றாலும் இந்த மாவட்டத்தில் இவர்
கைது செய்யப்பட்டு, பிரான்ஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார் (பிரான்ஸ் தீவு
மொரிஷியஸ் தீவு); என்றாலும் அவர் எங்கிருந்து 1830 இல் திரும்பி வர
அனுமதிக்கப்பட்டார், ஆனால், இயலாமை காரணமாக விரைவில் இறந்தார். [“In 1818, Pilame Talawe, the head
of the oldest Kandyan family, when attempting to escape, after the suppression
of the rebellion in which he had been engaged, alighted from his litter,
although weary and almost incapable of exertion; and, not knowing the precise
spot, walked on, until assured that he had passed far beyond this ancient
memorial. Pilame Talawe was apprehended in this district, and transported to
the Isle France (Isle of France is the Mauritius Island); from whence he was
allowed to return in 1830, and soon after died from the effects of
intemperance”.]
இருப்பினும், அநுராதபுர நகரத்தில், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட ஏராளமான புத்த தூபிகளை [குவிந்த மேற்பரப்புடைய நினைவுச்சின்னம்] இடித்து, 44 ஆண்டுகள் கொடூரமாக எல்லாளன் ஆட்சி செய்ததாக இராசவலிய[ம்] கூறுகிறது. இந்தக் கூற்று தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாளன் பற்றிய கருத்துக்கு முற்றிலும் முரண்படுகிறது. அந்த இரண்டு வரலாற்று நூலிலும் எல்லாளனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் அல்லது தவறுகளையும் பேசியதாக ஒரு வார்த்தை கூட அங்கு இல்லை. காலப்போக்கில், புத்த துறவி ஆசிரியர்கள், எல்லாளன் துன்மார்க்கமாக ஆட்சி செய்ததாக, பாமர பௌத்தர்களை நம்பவைப்பதற்கு படிப்படியாக தயார்படுத்தினர் என்பதே உண்மை. என்றாலும் இந்த முயற்சி வெற்றியடையவில்லை, ஏனெனில் இராசவலிய மிக சமீபத்தில் தோற்றம் [பதினேழாம் நூற்றாண்டு] பெற்றாலும் பிரபலமாகவில்லை.
இராசவலியை மொழிபெயர்த்த முதலியோர்
பி.குணசேகர, தனக்கு நல்ல தரமான கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை என்கிறார்.
அவரது சொந்த வார்த்தைகளில் [தனக்கு கிடைத்த], 'பல ஓலை கையெழுத்துப் பிரதிகளில்,
இரண்டு மட்டுமே பொதுவாக புரிந்துகொள்ளக்
கூடியதாகவும் பொருள் பிழைகள் இல்லாததாகவும் கருத முடியும்' [‘Of several Ola
manuscripts, two only can be credited with being generally intelligible and
free from material errors’]. என்கிறார். சிங்கள பௌத்தர்கள் இராசவலிய வரலாற்றுக்கு இவ்வாறான தகுதியைத் தான் வழங்கினர் என்பது அதன்
செல்வாக்கற்ற நிலையை குறிக்கிறது எனலாம். அவ்வாரே சர் பொன்னம்பலம் ராமநாதனும்
பிற்காலத்தில் சிங்களவர் மத்தியில் செல்வாக்கு இழந்தார் என்பது வரலாறு ஆகும்.
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...
*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...
Part: 20 / The Kings who ruled after Vijaya and the related
affairs / 'Who is really Elara & Dutthagamani?'
A prince Elara killed Asela and ruled for forty-four years. The Dipavamsa described him as an incomparable monarch reigned righteously. The Dipavamsa does not say he was a Damila prince and did not say that he came from Chola country. The Dipavamsa, unlike the Mahavamsa, never spewed anti-Tamil hatred. Its interest is only Buddhism, and Tamils have no issue with it. Then prince Abhaya (Dipavamsa uses the epithet ‘Duttagamani’ only once, at the time of his death) put thirty-two kings to death and reigned for twenty-four years as per the Dipavamsa. It does not say that prince Abhaya killed Elara. It could be that Elara died of old age, and thirty-two sub-kings or chieftains ruled after him. The prince Abhaya pounced on them, one by one, to capture the kingdom? The real story must have been that there were many sub-kingdoms with many princes, including Tamils. The names like Mutasiva, Siva, Mahasiva, Sena, and Gutta are Tamil names, even Tissa and Suratissa could be Tamils.
The father of prince Abhaya is Kakkavanna. The name of the last king, the king of the Tamil Vanni region, killed by the British was Pandaravanniyan, and Kakkavanniyan betrayed Pandaravanniyan. This happened in the present day Mullaitivu District. The name Kakkavanna is phonetically similar to the name Kakkavanniyan. The Dipavamsa does not give the connection Kakkavanna had with Mutasiva or with Devanampiyatissa. Mahanama took advantage of this to spin a story around it in the Mahavamsa. There are fabulous stories about ten warriors, each stronger than ten elephants in the Mahavamsa and it does not merit any serious criticism. This is just for the serene joy of the pious.
Dutthagamani was not the biological son of his father as per the Mahavamsa. He was sort of reincarnation of a dying monk, and, instead of dying, he became a foetus inside the womb of Vihara Devi, the mother of Dutthagamani. No one stresses this point. Therefore, he could not have continued the royal line, as he is a reincarnation of a monk, a usurper. There is another story line in the Rajavaliya. The description of Elara in the Mahavamsa is also very generous, and the stories given on the chapter 21 has close resemblance of ‘the stories we studied about ‘Manuneethy Kannda Cholan during our sixth or seventh standard in the school. The Ceylon chroniclers liberally used the folklores of Tamil Nadu.
The
Rajavaliya, however, says that Elara ‘demolished the numerous dagabas built by
Devenipetissa in the city of Anuradhapura, and reigned wickedly for the space
of 44 years’. This statement is in conflict with the account of Elara given in
the Dipavamsa and the Mahavamsa. There were no ill-spoken words against Elara
in those two chronicles. In the course of time, the monkish authors gradually
prepared the lay Buddhists to believe that Elara ruled wickedly. This endeavour
was not successful as Rajavaliya was not very popular even though of very recent
origin. The translator of the Rajavaliya, Mudalior B. Gunasekara, did not have
the luxury of much good quality of manuscripts. In his own words ‘Of several
Ola manuscripts, two only can be credited with being generally intelligible and
free from material errors’. Sinhala Buddhists gave this kind of scant merit to
the chronicle Rajavaliya. This is similar to what happened to Sir Ponnampalam
Ramanathan.
நன்றி /Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah
Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 21 தொடரும் / Will
Follow
0 comments:
Post a Comment