இலங்கையிலிருந்து சண்டியன் சரவணை[தமிழில் தேசியகீதம்]

                                                                                                                  


செய்தி:-“தமிழில் தேசியகீதம் இசைக்கப்படுகின்றமை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு  அச்சுறுத்தல்”-ஹெல உறுமய
சண்டியன் சரவணை:-சிரிப்புத்தான் வருகுது மோனை.சுவிஸ்,கனடா போன்ற வளர்ந்த நாடுகளெல்லாம் எத்தினை மொழியில தேசியகீதம் இசைக்கப்படுகுது தெரியுமே! அந்த நாடுகளில்லை ஒரு அச்சுறுத்தலும் வரேல்லையே?
                  
செய்தி:ஸிகா வைரஸ்  :-  இந்த அறிகுறிகள் இருந்தால்   வைத்தியரை நாடுங்கள் -விசேட வைத்திய நிபுணர் 
சண்டியன் சரவணை:-கடவுளே!வைத்திய மாருக்கு 'ஸிகா' வராம இருந்தா சரி!

செய்தி:-பலமான ஆட்சியை உருவாக்க சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்-மஹிந்த அமரவீர
சண்டியன் சரவணை:-ஓமோம்,அதுக்குமட்டுமே சிறுபான்மை மக்களை தேவைப்படுமாக்கும்.

செய்தி:-யாழ். திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சண்டியன் சரவணை:-இதுதானே இங்கு வழமையான கதையாகிவிட்டது. புதினம் அத்தோட சரி.இவற்றினைத் தடுக்க ,யோசிக்க  அங்கு யாருமில்லை.

செய்தி:-மகனைக் காட்டிக் கொடுத்தவர்களைக் கண்டு பிடித்தார் மகிந்த.
சண்டியன் சரவணை:- அட! காட்டிக் கொடுத்தவனை காட்டிக்கொடுக்கவும்  காட்டிகள்  இருக்கிறாங்களோ?
                                                                                                                      

0 comments:

Post a Comment