தமிழன் சிங்களம் படிக்கலாமோ?:-பறுவதம் பாட்டி

அன்று சனிக்கிழமைகாலை பாடசாலைவிடுமுறை  ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தபோது மாமாவீட்டில் வசிக்கும் அண்ணாமலைத் தாத்தாவுடன் ஸ்பீக்கர் ரெலிபோனில் பாட்டி அறுத்துக்கொண்டிருப்பதனை உணரமுடிந்தது
''புதினம் என்னவெண்டாஊரிலை வேலை தேடிப்போற சின்னனுகளை சிங்களம் எல்லே கேட்கிறாங்களாம்.''அண்ணாமலைத் தாத்தாதான் புதினம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
'' ஏன் படிச்சதோட சிங்களத்தையும்  படிச்சிருக்கலாமெல்லே!''என்று ஒரு போடு போட்டார் பறுவதம்  பாட்டி.  
''என்ன பறுவதம் சொல்லுறாய். உதைத்தானே கூட்டமைப்பும் சிங்களத் திணிப்பு எண்டு சொல்லுது.''
''உதை 60 வரியமா சொல்லிச் சொல்லித்தானே நாட்டையும் இனத்தையும் அரசியல்வாதியள் கெடுத்து அழிச்சுப்போட்டு இருக்கிறாங்கள்.''
''எனக்கு உன்ரை கதை விளங்கேலை பறுவதம் ''
''விளங்காதான்.இலங்கைக்கு வெளியில இந்தியா,ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள் எல்லா நாட்டிலையும் கேட்டுப் பாருங்கோவன். சொல்லுவாங்கள். எப்பிடியும் அவங்கள் நாட்டு மொழியால் 2 அல்லது  அதுக்குமேல படிச்சு வச்சிருப்பாங்கள்.எங்கட நாட்டில இருக்கிறதோ இரண்டே மொழிதான். அத வச்சு இந்த அரசியல் ஆட வெளிக்கிட்டு எங்கடையள் பட்ட கஷ்டம் போதாதே! அட அத விடுங்க.பல மொழி படிக்கிறதால அப்படி என்ன பிரச்னையை இந்த நாட்டுக்காரன் கண்டுட்டான் சொல்லுங்கோ பார்ப்போம். உந்த அரசியல் வாதிகளுக்கு கதிரை பிடிக்க இலங்கையில வேற ஒண்டும் கிடைக்கேலை எண்டா மனுசரின்ரை உயிரை எல்லே வச்சு விளையாடுறாங்கள்.''
''ஓம் பறுவதம் .நீ சொல்லுறதும் சரிதான்.இங்கை பக்கத்தில இருக்கிற இந்தியனைக் கேட்டால் 3,4 மொழியெல்லெ தெரியுமெண்டு சொல்லுறான். எனக்கு அதைக் கேட்க கொஞ்சம் வெட்கமாயும் இருந்திது.''
''கொஞ்சமென்ன நல்லா வெட்கப்படுங்கோஅப்ப தமிழ் ,தமிழ் எண்டு மட்டும் எல்லே படிச்சுக் கொண்டு  இருந்தனீங்க.''
''சரி பறுவதம்.மேன்ர பிள்ளையள் வெளிக்கிடுகினம்.அவையை கூட்டிப் போக நேரமாச்சு.வை போனை.''
''சரி ''
வழமையாகவே தாத்தாவின் புதினங்களுக்கு பாட்டியின் பதிலடிகள் என்றும் புத்திசாலித்தனமாகவே இருக்கும்.பாட்டியின் இன்றைய அடிகளை சுவைத்தவாறே நான் புரண்டு படுத்துக் கொண்டேன்.
                                                                                                                                          


0 comments:

Post a Comment