சம்பந்தரின் கண்ணீரும் சங்கரியின் ஓலமும்

திரு.சம்மந்தன் ஐயா அவர்கள் சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டிருந்தபோது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட வேளை கண்கள் கனிந்து கண்ணீர் முட்டியதாக வந்த செய்தி ஆனந்த சங்கரியாருக்கு 
ஆச்சரியத்துக்குள்ளாக்கி உள்ளதாம். 


அவரது  பிள்ளைகள் சிறையில் விடுதலை பற்றிய கனவு கண்டு கொண்டு பல தடைவ ஏமாற்றமடைந்து விரக்தியுடன் இருக்கும் அரசியல்கைதிகளை நினைத்து வராத கண்ணீர், காணாமல் போன உறவுகளின் நிலையறியாது, நாளும் பொழுதும் கண்ணீருடன்வாழும் ஆயிரமாயிரம் தாய்மார்கள் கதறி அழும்போது வராத கண்ணீர், யுத்தத்தின் இறுதி நாட்களில் அம்மக்களை விடுவிக்க வந்த சந்தர்ப்பத்தை நழுவ (இதுவரை சங்கரி விட்ட வைகளில் இதுவே நல்ல பெரிய  காமெடி) விட்டுவிட்டோம் என்ற குற்ற உணர்வில் வரவைக்காத போது இன்று மட்டும் தேசிய கீதம் தமிழில் பாடபட்டபோது எப்படி கண்கள் பனித்தன என்பது அவருக்கு ஆச்சரியம் அளித்தது அவரை மீண்டும் யார் எனப் புரிய வைத்துள்ளது.
தேசிய கீதம் தமிழில் பாட அனுமதித்த அரசின் நோக்கங்கள் வேறாக இருக்கலாம். ஆனால்,
நீண்ட காலத்தின்பின் பெற்ற (தமிழ்) தாயினைக் கண்ட மைந்தனுக்கு ஆனந்தக் கண்ணீர் வருவது ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பானதே. இது அனுபவப்பட்டோருக்கு மட்டுமே புரியும்.
தமிழனை தமிழன் எதிர்ப்பதும், காட்டிக்கொடுப்பதும் தானே தமிழர்மத்தியில் தொடர்கிறது. ஒற்றுமை என்பது பூச்சியமாகிவிட்டது. 68 வருடகாலமாக அரசினை எதிர்த்து எதனைச் சாதித்தீர்கள்.நீங்களும் ஒற்றுமையாக செயல்பட மாட்டீர்கள். அடுத்தவனுடனும் ஒற்றுமையாக வாழமாட்டீர்கள்.
1970 ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசில் போட்டியிட்டு தெரிவான ஆ.தியாகராசா அவர்கள் அரசுடன் இணைந்து எம் தொகுதியில் ஆற்றிய பணிகள் ஏராளம்.அப்படி ஒவ்வொரு தமிழ் அரசியல் வாதியும் இருந்திருந்தால்  இன்று சிங்கப்பூர் போன்ற நாடுகள் எல்லாம் இலங்கையிடம் கடன் பட்ட நாடுகளாக இருந்திருக்கும்.
மீண்டும் அரசியலுடன் சந்திப்பேன்.
கருத்து:இலங்கையிலிருந்து ..சண்டியன் சரவணை 

1 comments:

 1. புருஷத்தமன்Saturday, February 06, 2016

  அமரர் தியாகராசா போன்றவர்களை எதிர்க்கமுடியாத நிலையில் உள்ள அரசியல் வாதிகளால் எடுக்கப்பட்ட கருவி தான் தமிழ்ஈழம்.இவர்களின் வலையில் இவர்களை அறியாமல் வீழ்ந்தவர்கள் தமிழரில் பிரியமுள்ள செல்வநாயகம் போன்ற நல்ல மனிதர்கள்.
  இந்திய இராணுவம்-புலிகள் மோதல் காலத்தில் அண்ணல் அமிர்தலிங்கம் தமிழ்நாட்டில் சுகமே வாழ்ந்துகொண்டிருந்தார். இப்போரின் போது பொது மக்கள் அழிவு என்பது தவிர்க்கமுடியாதது என வானொலிகளுக்கு அறிக்கையும் விட்டார். அச்சமயம் திருமலையிலிருந்து தமிழ்நாடு சென்ற அவரது நண்பர் ஒருவர் அண்ணலிடம் '' அண்ணா! சோதனை என்ற பெயரில் இந்திய இராணுவம் பெண்களில் அங்க சேஷ்டைகள் செய்கிறார்கள். வீடுகளிலிருந்து குடும்பம்,குடும்பமாக வெளியில் இழுத்து சுட்டுத் தள்ளுகிறார்கள்'' என்றார்.
  எதிர்பாராத விதமாக அண்ணலின் பதில் இப்படி இருந்தது.
  ''அந்தப் பேச்சை விடு.உனக்கு ஏதன் பண உதவி தேவை எண்டா சொல்லு.''
  ஆஹ்ஹா இவையை நம்பி தமிழ் சனம்.

  ReplyDelete